ஸ்கைப்பில் அறிமுகமாகின்றது மைக்ரோசொப்ட்

மைக்ரோசொப்ட் Cortana என்பது ஒரு மாயை உதவியாளர் ஆகும்.

குரல் வழி கட்டளைகளின் ஊடாக பல உதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இவ் வசதியினை தனது விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஸ்கைப் அப்பிளிக்கேஷனிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கூகுளின் அன்ரோயிட் மற்றும் ஆப்பிளின் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைப் அப்பிளிக்கேஷன்களில் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

இதில் உணவகங்கள் தொடர்பான சில வசதிகள், திரைப்பட விமர்சனங்கள் தொடர்பான வசதிகள் உட்பட மேலும் சில வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply