யாழ்ப்பாணத்தின் அரக்கர்களின் ஆட்டம்!

நிசாந்தனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் , உமாகரனின் திரைக்கதை மற்றும் பாடல் வரிகளில் மதீசனின் இசையின் உருவாக்கம் மற்றும் பத்மயனின் சிறப்பு சத்தங்களின் உருவாக்கத்தில் சிந்துஜன் | சயன் | மதி சுதா | சிந்தர் | வாகீசன் மற்றும் பலரின் நடிப்பிலும், கஜலக்சனின் தயாரிப்பில் வெற்றி விநாயகன் வழங்கும் அரக்கன் வீடியோ பாடல். நடிப்பை பொறுத்தவரை குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

எல்லாமே இயற்கையாக உள்ளது. ஒவ்வொரு காட்சியமைப்பும் தத்துருவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒரு செய்தியை கொடுத்திருக்கிறது. ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தால தான் சாவு. பாடல் வரிகளும் காட்சியமைப்புக்கும் எந்த ஒரு வேறுபாடுமில்லை இரண்டிற்கும் அப்படி ஒரு பொருத்தம்.

8514_759507944154378_4098795552871719995_n

ஒளிப்பதிவில் குறை கூறுவதற்கு என்று ஒன்றுமில்லை. ஒளியமைப்பும் காட்சிக்கு ஏற்றவாறு காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடல் வரிகளும் ஒவ்வொரு காட்சியமைப்பும் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளது. ஈழத்தில் இதுவரையில் உருவாகாத ஒரு வித்தியாசமான கதைகரு கொண்ட கானொளியை உருவாக்கியுள்ளார்கள். இதே போல தான் ஈழத்தில் உள்ள அரக்கர்களின் ஆட்டமும் முடியும் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு பாடல் வரிகளும் ஒவ்வொரு காட்சியமைப்பும் பிரம்மாண்டத்தை காட்டியுள்ளது.

பாடல் மற்றும் காட்சி முன்னோட்டத்தின் சிறுபகுதியினை கீழுள்ள காணொளியில் காணலாம்

Direction & Cinematography – Nishanthan Rajakulasingam (Nisha Photography)
Screenplay & Lyrics – Umakaran (தமிழருவி கவிஞர் உமா )
Cast – Sayan | Sinthujan | Mathi Sutha | Sinthar |Vakeesan | Xyril Luxsman | Umakaran,
Sound FX – Pathmayan Siva
Song music – Matheesan
Singers – Arul Tharshan | Mathu Bala | Pryan | Jo Siththaan
Editing – Manivannan
Special Effects and Logo Animation – Sri Thusikaran
Stunt – NB Vithushan

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply