100,000ற்கும் மேற்பட்ட அமைப்புக்களை தாக்கியுள்ள உலகளாவிய சைபர் தாக்குதல்!பிந்திய செய்தி

attackபணம் செலுத்தும் வரை கணனி அணுகலை தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மென் பொருளினால் உலகளாவிய ரீதியில் 100,000ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் குறைந்தது 150 நாடுகளில் இடம்பெற்றுள்ளதாக யுரோபோல்- ஐரோப்பிய யூனியன் பொலிஸ் ஏஜன்சி தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
உலகம் பூராகவும் “அச்சச்சோ, உங்கள் முக்கிய கோப்புக்கள் முறியாக்கம் செய்யப்பட்டுள்ளது,”என்ற செய்தி ஒன்று உலகம் முழுவதிலும் திரையில் பளிச்சிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்த நிலையில் இருந்துள்ள கணனிகள் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டதாக நியு யோர்க் ரைம்ஸ் நிபுணர்கள் கணிப்பிட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
தாக்குதல் நடாத்தியவர்களிற்கு பாதிக்கப்பட்டவர்கள் 1-பில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகை பணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கருதப்படுகின்றது.
இதன் பின்னணியில் இருப்பது யாராக இருக்கலாம் என்பதை வெகு சீக்கிரமாக சொல்வது கடினம் எனவும் கூறப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை அனைவரும் பணிகளிற்கு திரும்பும் போது மேலும் பலர் தாக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் தாக்குதல் இதுவரை ஏற்படாத ஒன்றாகும் என கூறப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வங்கிகள், அரச அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புக்கள் போன்ற பாதிக்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் சுகாதார அமைப்பு முடமாக்கப் பட்டதால் கிட்டத்தட்ட 20-சதவிகித சுகாதார மராமரிப்பு குழுக்கள் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்களின் மருத்துவ சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது பின் போடப்பட்டன.
cyber5ஜேர்மனியின் தேசிய ரயில்வே தாக்கப்பட்டது.
ஞாயிற்றுகிழமை சீனாவில் பல பல்கலைக்கழக நெட்வேர்க்குகள் தாக்கப்பட்டதாக சீனா அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பொப்-அப்-வின்டோ தோன்றி கோப்புக்களை விடுவிப்பதற்கு 300-டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட ,2000 சீன கரன்சி வேண்டும் என கோருகின்றது.
இச்சம்பவம் முன்னொரு போதும் இல்லாத மிகவும் திகிலூட்டுவதாகவும் மிகப்பெரிய சூறாவளி போன்றதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதல் பரவுவதை தடுக்க உதவியது ஒரு இளம் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் என கூறப்பட்டுள்ளது.
22-வயதுடைய பிரிட்டிஷ் சார்ந்த ஆராய்ச்சியாளர் இவர் என The Guardian பத்திரிகை தெரிவித்துள்ளது.

cyber3

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply