2016ம் ஆண்டுக்கான வடமாகாண சபை வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டது

1959392439Viki22வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், இன்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.

மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்னோட்டம் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது.

வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்று அறிக்கை இன்றைய தினம் மாகாண சபையின் விசேட அமர்வில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டை விடவும் 2016ம் ஆண்டுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ம், 16ம், 17 ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

கடந்த ஆண்டை விட அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதும், மாகாணத்தின் தேவை அடிப்படையில் நாம் கேட்டிருந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply