3 ஆம் உலகப்போர் தவிர்க்க முடியாது

சமீபத்தில் பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ச்சியாக புதுப் புதிய ஏவுகணைச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாவை அழித்து விடக்கூடிய ஆற்றல் எங்களுக்கு உள்ளதென பேசினார்.

அதிபரின் இத்தகைய கருத்து உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், மூன்றாம் உலகப்போர் மூண்டால் அது ட்ரம்ப்பால் நிகழுமென தெரிவித்துள்ளார் அமெரிக்க எம்.பி பாப் கார்கர்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘பயிற்சி அதிபர் போல டொனால்டு ட்ரம்ப் செயல்படுகிறார். ரியாலிட்டி ஷோவில் பேசுவது போல ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

வடகொரியா குறித்த அவரது சர்ச்சை கருத்துகளால் 3-ம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளது’’ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் போர் பிரகடனத்தை எதிர்பார்த்தே வடகொரியா உள்ளதென்றால் மிகையில்லை.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply