குளு குளு பால் அல்வா !!

வீட்டில் ஒரு நல்ல ரெசிப்பி செய்யணும் என்னாங்க செய்யலாம் .
பால் அல்வா ங்க இது எல்லோரும் ஈசியா செய்யலாங்க –
நீங்களும் ரெடியாங்க – நல்லதுங்க

என்ன என்ன வேணுங்க –

நன்றாக காய்ச்சிய பசும் பால் – ஐந்து கப்
சர்க்கரை அஸ்கா – இரண்டு கப்

முந்திரி – பத்து பல்

ஏலப்பொடி – அரை தேக்கரண்டி

எலுமிச்சம்பழச்சாறு – அரை தேக்கரண்டி
நன்றாக உருக்கிய நெய் – கால் கப்

வேணுங்கறது தயார் பண்ணியாச்சு –

எப்படிங்க செய்றது – நன்கு கனமான பாத்திரத்தில் பசும் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன்

பிழிந்து வைத்த எலுமிச்சம் பழச்சாறை ஊற்றிக் கைவிடாமல் கிளற வேண்டும்.

அந்த கலவை தயிர் பதம் வந்ததும் விட்டு விட்டுக் கிளறவும்.

நாம் ஊற்றிய பாலின் அளவு நான்கில் ஒரு பங்காக வற்றியதும் அதில் அஸ்கா சர்க்கரையைக் கொட்டி மீண்டும் நன்கு கிளறி விடவும்.

அடுத்து பசு நெய்யை ஊற்றி சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்ததும்

பிறகு முந்திரி போட்டுக் நன்கு முழுவதும் கலக்கும் வரை கிளறிவிடவும்.

நீங்க கேட்ட பால் அல்வா ரெடிங்க – இதை அப்படியே சூடாக சாப்பிட்டாலும்
நல்லாதாங்க இருக்கும் – இல்லைன்னா குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆற வைத்தும் சாப்பிடலாங்க !!

Sharing is caring!