பூண்டுக் குழம்பு

தேவையானவை :

1. பூண்டு – 100 கிராம்

2. காய்ந்த மிளகாய் – 1

3. கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்

4. சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

5. எண்ணெய் – 100 மில்லி

6. புளி – எலுமிச்சை அளவு

செய்முறை :

1. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பை போட்டு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து வறுக்கவும்.

2. பின்னர் சாம்பார் பொடியை போட்டு வறுத்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் நீக்கிய பூண்டை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். புளியை கரைத்து அடுப்பில் வைக்கவும்.

3. பின்னர் வறுத்த பொருட்களை போட்டு, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Sharing is caring!