மாங்காய் ஊறுகாய் – நா ஊறுதுங்க !!

நா ருசிக்க செய்வது எப்படி

என்ன வேண்டும் செய்வதற்கு –

மாங்காய் சிறிதாக வெட்டப்பட்டது – 2 கப்
சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
சிறு கடுகு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – 3 தேக்கரண்டி

உப்பு – சுவைகேற்ப

சரி எப்படி செய்வது –

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளவும்
அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும்
அதில் சிறு கடுகினைப் போடவும்

அந்த கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்து வைத்துக்கொள்ளவும்
பிறகு கடாயில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவை கலந்து கலக்கவும்

பிறகு மூன்று நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.
இந்தக் கலவையில் வெட்டி வைக்கப்பட்ட மாங்காயோடு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அதை அப்படியே கெடாமல் ப்ரஷாக பாதுகாக்க விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்க வேண்டும்.

பிறகென்ன பல பல மாங்காய் ஊறுகாய் ரெடி……

Sharing is caring!