Saturday , April 29 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express

Author Archives: Analai Express

Feed Subscription

கனடாவின் தற்போதைய பிரபல்யமற்ற கிரேன் பெண் யார்?

22-வயதுடைய பெண் டவுன்ரவுன் ரொறொன்ரோவின் மையப்பகுதியில் நடு ராத்திரி வேளையில் கட்டுமான பணி நடந்த இடமொன்றில் கிரேன் ஒன்றில் அதிஉயரத்திற்கு சென்றார் என பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஒரு “மிகவும் சாகசமான பெண்” என இவரது நெருங்கிய சினேகிதி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்தின் பின்னர் மரிசா லசோ என்ற இப்பெண் ‘கிரேன் பெண்’ என பெயரிடப்பட்டார். வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜரான இவர் மீது குறும்புத்தனத்திற்கான ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. கூரைகளின் மேல் மற்றும் கட்டுமான பணிநடக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு ... Read More »

கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியிலிருந்து கெவின் ஓ’லீரி விலகல்

கனேடிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியிலிருந்து பிரபல தொழிலதிபரான கெவின் ஓ’லீரி விலகியுள்ளார். கனடாவின் டொனல் ட்ரம்ப்பாக வர்ணிக்கப்பட்ட ஓ ‘லீரி, தனது ஆதரவினை சக வேட்பாளரான மெக்ஸிம் பெர்னியருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் வெற்றிபெற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் அடுத்த தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவை தன்னால் தோற்கடிக்க முடியாது என நம்பும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read More »

கனடா அகதிகளுக்கு விரைவில் தீர்வு

அகதி கோரிக்கைகளை பரிசீலிக்க எடுக்கும் நீண்டகால அவகாசம், 1 வருடங்களுக்கும் குறைவான காலமாக திருத்தியமைக்கப்படுமென கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூஸென் தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாமதம் கடந்த பழமைவாத அரசின் காலத்திலிருந்தே தொடருவாதாக சுட்டிக்காட்டிய அவர், இதுதொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் தீர்வு எட்டப்படுமெனவும் குறிப்பிட்டார். கனடாவிற்குள் அகதிகளை தனியார் அனுசரணை மூலம் அழைத்துவரும் நிறுவனங்களின் அகதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட எடுக்கும் நீண்ட கால அவகாசம், கவலையளிப்பதாக அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது இந்நிலையில், இந்த விடயத்தினை கருத்திற்கொண்டே கனேடிய ... Read More »

தீயினால் வீட்டை இழந்த சோகம் லாட்டரியால் நீங்கியது!

வோர்ட் மக்முறே, அல்பேர்ட்டா-கடந்த வருடம் மே மற்றும் டிசம்பர் மாதங்களிற்கிடைப்பட்ட பகுதியில கிறிஸ் விலிட் என்பவரிற்கு வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய சம்பவங்கள் இரண்டு நடந்துள்ளன. தீயினால் வீடு எரிந்து சாம்பலாகியது. அவர் லாட்டரியில் வெற்றி பெற்றது. வோர்ட மக்முரேயை காட்டு தீ பரவ ஆரம்பித்த சமயம் இவர் அவசர அவசரமாக தனது மகளை பாடசாலையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் இருந்த அவரது உடைமைகளில் சில வற்றை எடுத்து கொண்ட சம்பவத்தை நினைத்து பார்க்கின்றார். “கொடிய மிருகம்” என புனை பெயர் கொண்ட  இந்த ... Read More »

இந்தியாவிலிருந்து கனடாவிற்கு நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்

கனேடிய குடியுரிமை பெற்ற மூன்று இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு கடத்தப்படவுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்கள் இன்றைய தினம் கனடாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தொழில் அதிபர்களின் கடன் அட்டைகளை போன்று போலிகளை தயாரித்து கடன் அட்டை மோசடியில் குறித்த இலங்கையர்கள் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு இந்திய சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது குறித்த இலங்கையர்களின் ... Read More »

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பழங்கள்!

பழவகைகளை சாப்பிடுவதன் மூலமாக, நீரிழிவு நோயை வெகுவாகக் குறைக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வயது வித்தியாசம் இன்றி, நாள்தோறும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, உணவுப்பழக்கமே அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இயற்கை வகை உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவதற்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி, ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு ஒன்று ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், இயற்கையான அதுவும் செடியில் இருந்து பறிக்கப்பட்டு சில நாட்களே ஆன பழ வகைகளை, வாரத்திற்கு 5 நாட்கள் ... Read More »

செல்வங்களை அள்ளித்தரும் அக்ஷய திருதியை

ஹே விளம்பி வருடம் சித்திரை மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அக்ஷய திருதியையாகும். இந்துக்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் நல்ல நாள், நட்சத்திரம் என்று பார்த்து ஆரம்பிப்பர். அந்தவகையில் செல்வச் செழிப்பை வழங்கும் நாளாக அக்ஷய திருதியை கருதப்படுகின்றது. அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாள் என்றும் அந்நாளில் செய்யும் தான தருமங்கள் ஏழு பிறவிக்கு தொடரும் என்றும் ஸ்வர்ண தானம் மிகவும் உயர்ந்தது என்றும் கருதுகின்றனர். இந்நாளில் பசு, தயிர், பால் போன்றவற்றையும் தானமாக அளிக்கலாம். அக்ஷ| என்ற சொல் ... Read More »

தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2

பாகுபலி 2 இந்தியா முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாய்க்கும் மேல் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சென்னை பகுதி வசூல் விவரங்களை பாப்போம். முதல் நாளில் சென்னையில் மட்டும் 91.4 லட்சம் ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது, இது இளையதளபதி விஜய் நடிப்பில் சென்ற வருடம் வந்த தெறி படத்தின் முதல் நாள் சென்னை வசூலை விட 10 லட்சம் ரூபாய் குறைவு. டாப் தமிழ் ஹீரோக்களின் படங்கள் அளவிற்கு பாகுபலி 2 ... Read More »

சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். சொல்லவந்ததை தெளிவாக எடுத்து பேசக்கூடியவர். சமீபத்தில் இவருக்கு கன்னடர்கள் காவிரி விசயத்தில் தங்களை எதிர்த்தாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார். இதையொட்டி இன்று படம் வெளியானது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் உணர்ச்சிவசமிக்க கருத்துக்கள் கொண்டு சத்யராஜ்க்கு கட்டவுட் வைத்துள்ளனர். மேலும் பலர் அவருக்கு தேசிய விருது கிடைப்பது உறுதியென கூறியுள்ளனர். Read More »

நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்

பிரேமம் நாயகன் நிவின் பாலியின் தமிழ் படம் எப்போது வரும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர் தமிழில் ரச்சி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த புதிய படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக நிவின் பாலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாடுவதோடு, நிவின் பாலிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். Read More »

Scroll To Top