Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 10)

Author Archives: Analai Express

Feed Subscription

ஊழியர் பற்றாக்குறை இருந்தாலும் நீர்பாசன செயற்றிட்டங்கள் தொடரும்

அதிகாரிகள், பொறியியலாளர்கள் உட்பட ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான ஊழியர் பற்றாக்குறை, நீர்பாசன செயற்றிட்டங்களில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பின்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். .இந்த நிலையில் சில மாவட்டங்களில் நீர்பாசன செயற்திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இதுதவிர, ஒப்பந்தகாரர்கள் பொறுந்தாததன் காரணமாக மீண்டும் மீண்டும் ஒப்பந்த கோரிக்கைகளை விடுக்க வேண்டிய நிலை உள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விரைவில் இவற்றுக்கான தீர்வு எட்டப்படும் என ... Read More »

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்

தற்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தொடுகை தொழில்நுட்பம் என்பன முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. இவ்விரு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சிறிய ஹெட்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. DiiFA எனும் நிறுவனம் இந்த ஹெட்போனை வடிவமைத்துள்ளது. இது ஈரலிப்பு மற்றும் நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் வளையக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் ப்ளூடூத், 6 மணி நேரத்திற்கு அதிகமாக செயற்படக்கூடிய மின்கலம் என்பனவும் இதில் காணப்படுகினறன. இதன் விலையானது 99 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

ரஜினியும் விஜய்யும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். ஏற்கனவே அரசியல் பற்றி பேசியிருந்த இவரை தற்போது பலரும் நேரில் சந்தித்து வருகிறார்கள். அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று கட்சி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல அரசியல் விசயத்தில் விஜயின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு. இந்நிலையில் இவரும் அரசியல் பற்றிய தன் அறிவிப்பை தன் பிறந்தநாளான ஜீன் 22 ல் வெளியிடலாம் என ரசிகர்களால் பேசப்படுகிறது. நேற்றிலிருந்து இந்த ... Read More »

பிலிம்பேர் 2017 – விருது வென்றவர்கள் முழு விவரம்

வருடம்தோறும் சினிமா நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 4 தென்னிந்திய சினிமா துறைகளுக்கும் சேர்த்து நேற்று மாலை ஹைதராபாத்தில் பிலிம்பேர் விருதுகள் விழா நடந்தது. விருது பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்களின் முழு பட்டியல் இதோ.. சிறந்த படம்: ஜோக்கர் சிறந்த நடிகர்: மாதவன் (இறுதி சுற்று) சிறந்த நடிகை: ரித்திகா சிங் (இறுதி சுற்று) சிறந்த இயக்குனர்: சுதா கே பிரசாத் (இறுதி சுற்று) சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி (விசாரணை) சிறந்த துணை நடிகை: தன்சிகா (கபாலி) ... Read More »

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்?

ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். பாடுவதில் திறமை வாய்த்த பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது நடந்துவரும் ஐந்தாவது சீசனின் பைனல் இன்று நடந்தது. அதில் மற்ற போட்டியாளர்களை விட 6 லட்சம் அதிகம் வாக்குகள் பெற்று பிரித்திகா டைட்டில் வென்றுள்ளார். முதல் இடம்: பிரித்திகா – 40 லட்சம் மதிப்புள்ள வீடு. 2ம் பரிசு: பவின் – 5 லட்சம் மதிப்புள்ள கார். 3ம் இடம்: கெளரி – 3 லட்சம் பரிசு Read More »

பிரபல நடிகரை பற்றி புகார் அளிக்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா- என்ன பிரச்சனையோ?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரேயா. இவர் தற்போது ஹிந்தியில் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் தட்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். உன் சமையல் அறையில் என்ற படத்தின் ரீமேக் தான் இது. பிரகாஷ் ராஜ் வேடத்தில் நானா படேகர் நடிக்க சினேகாவுக்கு பதிலாக ஸ்ரேயா நடிக்கிறார். இப்படம் குறித்து ஸ்ரேயா பேசும்போது, நானும், பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடித்தபோது இயக்குனரை பற்றி குறை கூறி எங்களுக்குள் பேசிக் கொள்வோம். தற்போது ... Read More »

சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வித்தியாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். தசாவதாரம் படத்தின் மூலம் 10 கேரக்டரில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிலையில் கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய்சேதுபதி 8 வித்தியாசமான வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற பெயரில் ஆறுமுககுமார் இயக்கும் இப்படத்தில் தான் விஜய் சேதபதி 8 வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் வரும் ஒரு ... Read More »

ரொறொன்ரோ கல்லூரி வீதியை ஆக்கிரமித்துள்ள சிறிய இத்தாலியின் சுவை!

வருடாந்த சிறிய இத்தாலியின் சுவை கொண்டாட்டம் கல்லூரி வீதியை இத்தாலிய நகரமாக மாற்றியுள்ளது. கன்றிறைச்சி சான்ட்விச்கள், பேர்கர்கள், மரக்கறிவகைகள், வாட்டிய கோழி, இறால் இன்னும் பலவகையான உணவு வகைகள் வழங்கப்படும். இக் கொண்டாட்டத்தில் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. 50-ற்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன. அத்துடன் உள் முற்ற பகுதிகள், விற்பளையாளர்கள் சாவடிகளும் அமைகின்றன. வெள்ளிக்கிழமை 6-மணிக்கு ஆரம்பமாகிய இந்த கொண்டாட்டம் மூன்று நாட்கள் தொடரும் என கூறப்படுகின்றது. 250,000ற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். அனைத்தும் இலவசம். Read More »

பல லட்சத்துக்கு ஏலம் போன டயானா உடமைகள்

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் உடமைகள் பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் உடமைகள் சிலவற்றை சமீபத்தில் இங்கிலாந்தின் ‘டொமினிக் வின்டர்ஸ் நிறுவனம்’ ஏலம் விடுத்தது. இதில் இளவரசி டயானாவின் ‘ஷூ’க்கள், கடிதம், தத்துவக் குறிப்புகள் ஆகியவை ஏலம் விடப்பட்டன. உலகின் முக்கியப் பிரபலமாக உருவான கொஞ்ச காலத்திலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தவர் இளவரசி டயானா. வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி. இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, ... Read More »

கியூபாவுடன் ஒபாமா செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்

கியூபா நாட்டுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா செய்து கொண்ட ராணுவத்திற்கு நிதி வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவுக்கும் அதன் அண்டை நாடான அமெரிக்காவுக்கும் கடும் பகை நிலவிவந்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றதும் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கியூபாவுடன் உறவு புதுப்பிக்கப்படும் என ஒபாமா அறிவித்தார். கியூபா ராணுவத்திற்கு அமெரிக்க நிதியுதவி வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ரத்து ... Read More »

Scroll To Top