Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 1040)

Author Archives: Analai Express

Feed Subscription

‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம்

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சிக்காக ரூபா 5,000 முதல் 50,000 வரை பெறுமதியான டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. Live Events என்ற நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ... Read More »

குடும்ப தகராறில் வாலிபன் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்

கனடா- மொன்றியல் தெற்கு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பொலிசார் வரவழைக்கப்பட்ட போது பொலிசாரினால் 17வயது வாலிபன் சுடப்பட்ட சம்பவம் ஞாயிற்று கிழமை காலை நடந்துள்ளது. வாலிபனும் பாதிக்கப்பட்ட 50 வயதுடைய நபரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயங்கள் காரணமாக வாலிபன் இறந்து விட்டான். பாதிக்கப்பட்டவர் மோசமான நிலையில் உள்ளார். கியுபெக்கின் பொது பாதுகாப்பு அமைச்சரகம் புலன் விசாரனையை கியுபெக் மாகாண பொலிசாரிடம் கையளித்துள்ளது. பொலிசார் விசாரனை செய்யும் சம்பவத்தில் குடிமக்கள் காயப்படும் போது அல்லது கொல்லப்படும் போது குறிப்பிட்ட விசாரனை வேறொரு பொலிஸ் படையிடம் கையளிக்கப் ... Read More »

100-மில்லியனாவது பயணியை வரவேற்கும் உலகின் பரபரப்பான விமான நிலையம்

யு.எஸ்- ஹாட்ஸ்வீல்ட்-ஜக்சன் அட்லான்டா சர்வதேச விமானநிலையம் ஞாயிற்று கிழமை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. விமான நிலையம் அதனது சமூக ஊடக தளங்களில் உலகின் மிக பரபரப்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தனது 100வது மில்லியன் பயணிக்கு சேவையாற்றியது என்பதே இச்செய்தியாகும். ஒரு வருடத்தில் தனிப்பட்ட ஒரு விமான நிலையம் இத்தனை எண்ணிக்கையான பயணிகளிற்கு சேவை ஆற்றியுள்ளது என்பது வியத்தகு விடயமாக கருதப்படுகின்றது. இந்த அதிஷ்டசாலி மிசிசிப்பியை சேர்ந்த லறி கென்ட்ரிக் என்பவராவார். இவருக்கு புத்தம் புதிய நிசான் அல்ரிமா வாகனம்,  டெல்ரா பயணித்திற்கான ... Read More »

கியூபாவின் அகதிகளுக்கு அமெரிக்க நாடுகள் கருணை காட்ட வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகை

அமெரிக்கா சென்றடைய முயலும் கியூபர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 80 சதவீதத்தால் அதிகரித்துள்ளது அமெரிக்காவிற்குள் நுழையும் முயற்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கியூபாவின் அகதிகளுக்கு மத்திய அமெரிக்க நாடுகள் கருணை காட்ட வேண்டுமென்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அமெரிக்கா வழியாக செல்லும் கியூப அகதிகள் பலர், ஆள் கடத்தும் சட்டவிரோத கும்பல்களிடம் சிக்கியவர்கள் என்று போப் கூறினார். குடியேறிகள் கடந்து செல்ல நிக்கரகுவா அரசு அனுமதி மறுத்த நிலையில், கியூபர்கள் பல்லாயிரம் பேர் கோஸ்டாரிகா -நிக்கரகுவா எல்லையில் சிக்கி நிற்கிறார்கள் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா ... Read More »

ரொறொன்ரோ, ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் குளிர் கால புயல் எச்சரிக்கை விடுப்பு

கனடா சுற்று சூழல் பிரிவினர் ரொறொன்ரோ, ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பகுதகளிற்கு ஒரு குளிர்கால புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்புயல் திங்கள்கிழமை இரவு ஆரம்பித்து செவ்வாய்கிழமை வரை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10-15cm வரையிலான பனி பொழிவு, பனிக்கட்டி குவிப்பு போன்றன எதிர்பார்க்கப் படுகின்றது. அத்துடன் பலத்த காற்று வீசுவதால் பனி சிதறி வீசப்படுமாகையால் வாகனம் செலுத்தும் நிலைமை மோசமடையலாம் என கூறப்படுகின்றது. இந்த நிலைமை உறை பனி மழையாக செவ்வாய்கிழமை காiலை மாறலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. திங்கள் ... Read More »

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் பூலோகம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பூலோகம். இப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போக, ஒரு வழியாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது. படத்தில் வட சென்னை பாக்ஸர்கள் பற்றி காட்டியிருப்பது சென்னை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. பூலோகம் கடந்த 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். Read More »

சிம்பு என்ன பயங்கரவாதியா? டி.ஆர் பதிலடி

சிம்புவிற்கு மிகவும் கஷ்டக்காலம் போல. அவர் எது செய்தாலும் பிரச்சனையில் தான் சென்று முடிகின்றது/ இந்நிலையில் யாரோ லீக் செய்த பீப் பாடலால் சிம்புவிற்கு கோர்ட், வழக்கு என ஆரம்பித்து கைது வரைக்கும் தற்போது வந்துள்ளது. மேலும் சிம்பு தலைமறைவாகி விட்டார் என சில கூற, கோபமானடி.ஆர் ‘சிம்பு என்ன பயங்கரவாதியா? அவர் இங்கு தான் இருக்கிறார். எங்கும் ஓடி ஒழிய வில்லை, எத்தனை பிரச்சனை வந்தாலும் தமிழகத்தை விட்டு செல்ல மாட்டோம்’ என கூறியுள்ளார். Read More »

சந்தானத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்

சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவர் அடுத்து தன் நண்பர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவராம். மேலும், இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயாணன் என கூறப்படுகின்றது. மேலும், இப்படத்திற்கு சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் தான் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. Read More »

அதை நாம் மாற்ற வேண்டும்- சூர்யாவின் கருத்து

சூர்யா பசங்க-2 வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பசங்க-2 வெற்றி குறித்து பேசினார். இதில் ‘நாம் அனைவரும் நம் பிள்ளைகளை சம்பளத்திற்காக தான் படிக்க வைக்கின்றோம், அவர்கள் கனவை பற்றி கவலைப்படுவதே இல்லை. அவர்களிடம் உள்ள திறமையை கண்டுப்பிடிப்பது பெற்றோர்களாகிய நம் கையில் தான் உள்ளது, இந்த படிப்பு முறையை நாம் மாற்ற வேண்டும்’ என பேசியுள்ளார். Read More »

சீனி மற்றும் பருப்புக்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம்

சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை காரணமாக குறித்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது. Read More »

Scroll To Top