Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 2)

Author Archives: Analai Express

Feed Subscription

வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA

சிம்புவின் வாலு படம் பெரிய பிரச்சனைக்கு பிறகு வெளியானது. நீண்ட வருடத்திற்கு பிறகு படம் வந்தாலும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அதே வேகத்தில் இது நம்ம ஆளு படமும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. தற்போது சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இளைஞர்களை மகிழ்விப்பதற்காகவே என்று படக்குழு கூறியிருந்தனர். படமும் வெளிநாடுகளில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. ரசிகர்களின் விமர்சனத்தை சிம்புவே தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் சில பிரச்சனைகளால் படத்தின் முதற் ... Read More »

இயந்திரவியல் பகுதிகள் இன்றி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது ரோபோ

ரோபோக்களை உருவாக்கும்போது பொதுவாக இலத்திரனியல் பகுதிகளும் இயந்திரவியல் பகுதிகளும் காணப்படும். ஆனாலும் முதன் முறையாக மோட்டார் உட்பட எந்தவொரு எந்திரவியல் பகுதிகளும் இன்றிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும் இந்த ரோபோ முற்றுமுழுதாக இலத்திரனியல் பாகங்களையே உள்ளடக்கியுள்ளது. DeployBot எனப்படும் இதனை கடல் படுக்கைகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பு என்பவற்றில் பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவை தென் கொரியாவின் Seoul National பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கடலின் அடிப்பகுதி மற்றும் விண்வெளியில் இயந்திரவியல் சாதனங்களை பயன்படுத்தும்போது எதிர்நோக்கப்படும் ... Read More »

பெருமாளின் சயன நிலைகள்

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும். அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களையும் தரிசிக்க வேண்டும். வயதாகி முதுமை வந்தால்தான் இதுபோன்ற திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் காணப்படுகின்றது. அது தவறாகும். இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் போதே புண்ணிய ஷோத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிட வேண்டும். ஸ்ரீரங்கம் – வீர சயனம் மகாபலிபுரம் – தல சயனம் ... Read More »

கிவி பழத்தின் மருத்துவ குணங்கள்

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். இப் பழத்தில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. போலிக் அமிலம் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் ... Read More »

சுகாதார அமைச்சுக்கு மில்லியன் கணக்கான பாதிப்பு

நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து ஏற்படுத்திய குழப்ப நிலையால், அமைச்சின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு மில்லியன் கணக்கான சேதம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் 4000க்கும் அதிக குழுவினர் இருந்ததாகவும், இதற்குப் பின்னால் சில அரசியல் அழுத்தம் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மருத்துவ பீட மாணவர்கள் மட்டுமன்றி பிற மாணவர்களும் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார் Read More »

சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயற்பட முடியாது

சாதாரணமானவர்களுக்கோ, மதப்பெரியார்களுக்கோ யாராகினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தை முறியடிக்கும் அல்லது அதனை கவனத்தில் கொள்ளாது யாராலும் செயற்பட முடியாது. நாம் அனைவரும் சட்ட திட்டங்களுக்கு செயலாற்றுவதற்கும் சட்டத்தை நிலைநாட்டுவதற்கும் கடமைப்பட்டுள்ளோம். பிரதமர் நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களின் காரணமாக சில இஸ்லாமிய நண்பர்கள் இப்தார் நிகழ்வுகளை நடத்தாது அந்த நிதியை ... Read More »

பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை

கொட்டாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொரண வீதியில் வீடொன்றில் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. ஆலோகா எனப் பெயருடைய 26 வயதான பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விசாரணைகளின் பின்னர் சடலம் ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகள் இன்று (23) இடம்பெவுள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read More »

நாக தோசம் உள்ளவர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பாம்புரம்

சிவபெருமான் கொடுத்த சாபத்தால் தங்கள் சக்திகள் அனைத்தையும் இழந்த நாக இனத்தினர், தங்கள் சக்திகளைத் திரும்பப் பெற்ற இடமே திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோயிலாகும். இந்த ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் பேரளம் என்ற கிராமத்தில் இருந்து மேற்கே 7 கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்றது. இத்தலத்தில் உள்ள இறைவனுக்கு பாம்புபுரேஸ்வரர் எனும் பெயரினை விட ‘பாம்புரநாதர், சேஷபுரீஸ்வரர்’ எனும் வேறு பெயர்களும் உண்டு. இங்கு இருக்கும் அம்மன் வண்டமர் பூங்குழலியம்மை என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றவர்கள் ... Read More »

உதட்டின் வறட்சியை போக்க இலகுவான வழிமுறைகள்!

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் உதடு வறட்சி மற்றும் உதடு காய்ந்து போதல். அந்தவகையில், இதற்காக காரணம் மற்றும் அதிலிருந்து தப்பி கொள்வதற்காக வழிகள் தொடர்பில் பார்க்கலாம். நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்பநிலை அதிகரிப்பே காரணம். ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு ... Read More »

நோக்கியா அறிமுகம் செய்யும் மற்றுமொரு இலத்திரனியல் சாதனம்!

ஒரு காலத்தில் கைப்பேசி வடிவமைப்பில் கொடி கட்டி பறந்த நிறுவனமாக நோக்கியா இருந்தது. இடையில் தளம்பல்களை சந்தித்து தற்போது மீண்டும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதித்துள்ளது. இந்நிலையில் மற்றுமொரு இலத்திரனியல் சாதனத்தினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உடல் நலத்தைப் பேணக்கூடிய கேட்ஜட் ஒன்றினையே அறிமுகம் செய்யவுள்ளது. இதன் ஊடாக BMI மற்றும் குருதி அமுக்கம் என்பனவற்றினை அறிந்துகொள்ள முடியும். Wi-Fi வலையமைப்பின் ஊடாக ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இதனை இணைத்து பயன்படுத்த முடியும். மேலும் இச் சாதனத்தின் ஊடாக பெறப்படும் அளவுகள் நம்பிக்கை ... Read More »

Scroll To Top