Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 20)

Author Archives: Analai Express

Feed Subscription

சுப நிகழ்வில் வாழை மரம் கட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

சுப நிகழ்வு நடக்கும் வீட்டுக்கு அடையாளமே வாசலில் வாழைக் குலையுடனான மரம் கட்டுவது தான். இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இதற்க்கும் ஆன்மிக காரணமும் அறிவியல் காரணமும் உண்டு அதனை நோக்கலாம்: தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன. சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள். அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும் அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து ... Read More »

நாவற்குழி விஹாராதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நாவற்குழி விஹாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமணதேரருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நாவற்குழியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விஹாரைக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையினால் சாவகச்சேரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததையடுத்தே நாவற்குழி விஹாராதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி திருமதி. சிறிநிதி நந்தசேகரம் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். உரிய அனுமதிகள் பெறப்படாமல் மேற்கொள்ளப்படும் குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி விஹாராதிபதிக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தும் மேற்படி கட்டுமானப்பணிகள் தொடர்ந்த நிலையிலேயே சாவகச்சேரி பிரதேச சபையினால் ... Read More »

தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி

காமெடியன் சூரி தான் இப்போது தமிழில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். பரோட்டா சூரி அண்மையில் ஜி.வி. பிரகாஷின் செம பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசும்போது அவர், தல, தளபதியின் பட கால்ஷீட் கூட வாங்கிடலாம் போல, ஜி.வியின் கால்ஷீட் வாங்குவது மிகவும் கடினம். ஏனெனில் அவர் அவ்வளவு படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்றார். பல படங்களில் கமிட்டாகி இருக்கும் ஜி.வி. தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் நடித்து வருகிறார். Read More »

விஜய்யை முதன்முதலாக பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்படியா கேட்டார்?

சினிமாவில் ரீமேக் படங்கள் என்று இப்போது நிறைய வருகின்றன. அந்த வகையில் இளையதளபதி விஜய் நிறைய ரீமேக் படத்தில் நடித்து இருக்கிறார், இவருடைய படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரபு தேவா ரவுடி ராதோர் என்ற பெயரில் விக்ரமார்குடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்திருந்தார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஜய் நடனமாடியிருந்தார். படப்பிடிப்பின் போது விஜய்யை முதன்முதலாக நேரில் சந்தித்த அக்ஷய் குமார், பிரபுதேவாவிடம் அவருக்கு வயது 17 தானே ... Read More »

இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு நாளை பைரவா ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் தற்போதைய மாஸ் நடிகர்கள் அஜித், விஜய். இவர்களது பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடு திருவிழா கோலம் தான். அண்மையில் முடிந்த அஜித் பிறந்தநாளுக்கு என்னென்ன ஸ்பெஷல் விஷயங்கள் நடந்தது என்பது நமக்கு தெரியும். அடுத்து வரும் ஜுலை 22ம் தேதி விஜய் பிறந்தநாள் வர இருக்கிறது. இதற்காக இப்போதே பல திரையரங்குகளில் விஜய் படம் திரையிடப்பட இருக்கிறது. ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக பல விஷயங்களை செய்து வரும் நிலையில் பிரபல இசை தொலைக்காட்சி விஜய் ரசிகர்களுக்கு நாளை சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கின்றனர். ... Read More »

தல படம் வெச்சதுனால உன்ன சும்மா விடுறேன்- பிரபல தொகுப்பாளினி பிரியங்கா ஆவேசம்

பிரபல தொலைக்காட்சியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி அண்மையில் விருது கூட பெற்றவர் பிரியங்கா. அந்த விருது நிகழ்ச்சியில் இவர் தான் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று அவர் கூறியது பலரையும் மிகவும் தாக்கியிருந்தது. இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கம்பார்ம் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த அவர், மக்களே இவன என்ன செய்யலாம்?. என் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று ... Read More »

ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் ரஜினியின் கால்ஷிட் எப்போது கிடைக்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர். ரஜினியும் தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதன் வெளிப்பாடே கபாலியை தொடர்ந்து தற்போது காலாவின் வந்து நிற்கின்றது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி படம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் ... Read More »

அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?

சின்ன குஷ்பு என்ற பெயரோடு விஜய், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஹன்சிகா. கடைசியாக இவரது நடிப்பில் தமிழில் போகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க இயக்குனர் சுந்தர்.சி முன்வந்தாராம். ஆனால் இப்பட தயாரிப்பு குழு அவருக்கு மார்க்கெட்டே இல்லை, அவரை ஒப்பந்தம் செய்தால் படத்தை வாங்க யாரும் முன் வர மாட்டார்கள் என்று கூறிவிட்டனராம். தற்போது புதிய நாயகி தேடும் பணி நடந்து வருகிறதாம். ஆனால் ... Read More »

நண்பர்களுடன் வரம்பு மீறிய வருங்கால மனைவி

வருங்கால மனைவி தனது நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டியில் மது அருந்தி விட்டு நடந்து கொண்ட விதத்தால் வருங்கால கணவர், நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அமெரிக்காவில் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. திருமணத்திற்கு முன் மணப்பெண் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி அளித்துள்ளார் அந்த பார்ட்டி ஒரு கட்டத்தில் எல்லை மீறி போக மது போதையில் மணப்பெண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். அப்போது பெண்ணின் நண்பர் ஒருவர், அரைகுறை ஆடையுடன் நடனமாடும் ஸ்ட்ரிப்பரை அழைத்து கொண்டு ... Read More »

கனடா செல்லும் மற்றுமொரு இலங்கையை சேர்ந்த பிரபலம்

இலங்கையில் பாடல் மூலம் புகழ்ப்பெற்ற விஹாரத சஹல்லி ரோஹானா கமகே கனடா செல்லவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் திருமணம் முடிக்கவுள்ள பிரபல பாடகி, திருமணம் முடித்த பின்னர் கனடாவில் வாழ திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,இருவரும் கனடாவின் மருத்துவ சபையில் பரீட்சை ஒன்றை எழுத திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடகி, “விஷார்தா” பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பங்குக் கொண்ட மூன்று ஆயுதப் படைகள் ... Read More »

Scroll To Top