Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 3)

Author Archives: Analai Express

Feed Subscription

குளவியை மென்று தின்ற ஜனாதிபதி

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது.குளவியை மென்று தின்றார் கொஸ்டா ரிக்காவின் ஜனாதிபதி சோலிஸ் ரிவேரா. மத்திய அமெரிக்க நாடானா கொஸ்டா ரிக்காவின் அதிபர் சோலிஸ் ரிவேரா பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, பறந்துவந்த ஒரு குளவி அவரது வாயில் தெரியாமல் நுழைந்து விட்டது. பேச்சுவாக்கில் அதை மென்று விட்டார். பத்திரிகையாளர்கள் அதைப் பார்த்துச் சிரித்ததும், மிச்சத்தையும் மென்று விழுங்கிய அதிபர், இது சுத்தமான புரதம் என்று நகைச்சுவையாகக் கூறிச் சமாளித்தார். இந்தக் காட்சியை ஊடகங்களின் கமராக்கள் படம்பிடித்தன. செய்தியாளர்கள் சூழ்ந்திருக்க, இந்தக் காட்சி நேரலையிலும் ஒளிபரப்பானது. Read More »

கட்டிபிடிக்க மறுத்த இவங்கா டிரம்ப் – வைரலான புகைப்படம்

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் மகள் இவங்கா டிரம்பின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவாங்கா டிரம்ப் வாஷிங்டனில் உள்ள Capitol Hill-ல் சட்ட வல்லுனர்களை சந்திப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை அமெரிக்க பாரளுமன்றத்தின் புளோரிட மாகண செனட் உறுப்பினரான Marco Rubio வரவேற்றுள்ளார். அப்போது அவர் இவங்கா டிரம்பை மரியாதை நிமித்தமாக கட்டிபிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் அவ்வாறு செய்யும் போது, இவாங்கா டிரம்ப் கண்டுகொள்ளாமல் நிற்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால், இது தவறான ... Read More »

இஸ்ரேலில் காணாமல் போகும் குழந்தைகளின் பரிதாப கதைகள்..! கண்ணீர்விடும் பெற்றோர்..!

இஸ்ரேலில் குழந்தைகள் காணாமல் போவது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. 1969 களில் இருந்தே இந்த கலவர பூமியில் குழந்தைகள் வளர்வதற்கு ஒரு சாபக்கேடான பூமியாகவே இருந்து வருகிறது. அதிலும் யேமினில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த யூதர்களின் குழந்தைகள் காணாமல் போவது அதிசயம் தான் என்கிறார்கள். அவர்களின் பெற்றோரும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. போரின்போது இறந்திருக்கலாம் அல்லது யாராவது கடத்திச் சென்று பணக்கார அமெரிக்க யூதர்களுக்கு விற்பனை செய்திருக்கலாம் என்று எண்ணி தங்களை திருப்தி படுத்திக்கொள்கின்றனர். லியா ஆரோனி 50ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன குழந்தையை ... Read More »

நாட்டின் மிக மோசமான ஜனாதிபதி யார்.? மாளிகை முழுக்க காண்டம்..!பாட்டில்…ரத்தக்கறை..??

நாடு முழுக்க அப்படி ஒரு சர்வே எடுத்தார்கள். அதாவது நாடு குடியரசு ஆனதில் இருந்து இது வரை சிறந்த ஜனாதிபதி யார், படு மோசமான ஜனாதிபதி யார்..? மிக நுணுக்கமாக நடத்தப்பட்ட ஆய்வு இது. மிக கவனமாக எடுத்தார்கள். காரணம் ஜானதிபதி தான் தேசத்தின் அடையாளம். அப்படி ஒரு ஆய்வை மேற்கொண்ட முடிவுகளை அவர்கள் மீடியாக்கள் முன்பாக வெளியிட்டனர். ஆடிப் போனது தேசம். ஆம் அமெரிக்க தேசம். அமெரிக்க வரலாற்றில் மிகச்சிறந்த ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன்..! இல்லையே இடிக்குதே.. மிகச்சிறந்த உலகப் புகழ் பெற்ற ... Read More »

மனைவி குழந்தைகளுடன் சவுதியில் செட்டிலாக நினைப்பவர்களுக்கு வருகிறது ஆபத்து

சவுதியில் புதிதாக குடும்ப வரி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு வேலைபார்த்து வரும் வெளிநாட்டினர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சவுதியில், மனைவியுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 100 ரியால் வரி கட்ட வேண்டும். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 300 ரியால் வருடத்திற்கு 3600 ரியால் வரிசெலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி வரும் 2020 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு முறை 100 ரியால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதியில் தங்கி வேலை செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ... Read More »

விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்

இளையதளபதி விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மெர்சல் என வெளியானது. இப்படத்துக்கு இரண்டு அசத்தலான போஸ்டர் வெளியானது. இதில் மெர்சல் எழுத்தில் காளை மாட்டின் கொம்பு, வால், 61 என்ற எண், தலைகீழாக பார்த்தால் Vijay என்ற வார்த்தை என பல விஷயங்களை அதற்குள் உள்ளடக்கியுள்ளனர். இந்த போஸ்டரை டிசைன் செய்தவர் கோபி பிரசன்னா. இதை தேனாண்டாள் நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் டிசைன் செய்ததது மூலம் கோபி ஒரே இரவில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அசத்தலான போஸ்டர் செய்த கோபிக்கு ... Read More »

பார்வையற்ற மாணவர்களின் ‘பறக்கும்’ ஆசை! நிறைவேற்றிய நடிகர் ‘மைம்’ கோபி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வில்லன் நடிகர்களில் ஒருவர் ‘மைம்’ கோபி. இவர் பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தார். மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து நல்ல உணவு விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி ... Read More »

விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்திற்கு மெர்சல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. இதுவரை விவேகம் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன பர்ஸ்ட் லுக்காக இருந்து வருகின்றது, இதை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர். ஆனால், இன்று வெளிவந்த மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே 22 ஆயிரத்திற்கும் அதிகமான RT பெற்றுள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக RT ஆன ... Read More »

விஜய் படத்தின் டைட்டிலில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது எது? சினிஉலகம் கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் என ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சினிஉலகம் பேஸ்புக் பக்கத்தில் உங்களுக்கு பிடித்த விஜய்யின் டைட்டில் எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினோம். இதில் பலரும் துப்பாக்கி, தலைவா டைட்டிலை தான் தேர்ந்தெடுத்துள்ளனர், கமெண்ட் பாக்ஸில் பெரும்பாலும் தலைவா டைட்டிலை தான் குறிப்பிட்டுள்ளனர். Read More »

Scroll To Top