Saturday , June 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 30)

Author Archives: Analai Express

Feed Subscription

தண்ணீர் தருவதாக மோசடி செய்தவர்கள் தாக்கப்பட்டனர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். நீர் பாதுகாப்பு என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர் கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்கு வதாக கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன், சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு ... Read More »

ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (5) அங்கு விஜயம் செய்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக நியுயோக் சென்றிருந்த பிரதமருக்கு மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சமுத்திரங்கள் மற்றும் கடல் வள நிலையான அபிவிருத்திக்கான செயன்முறைகள் மற்றும் கடற்கரை சார் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது. Read More »

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

பேதுருதுடுவ – அல்வாய் வடக்கு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பணம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பலியானவர் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவராகும். அத்துடன், கொலையாளி என சந்தேகிக்கப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேதுருதுடுவ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More »

25,000 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 25,000 பேர் வரை தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய, 226 நலன்புரி நிலையங்களில் 7,046 குடும்பங்களைச் சேர்ந்த 24,962 பேர் தங்கியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 214 பேர் உயிரிழந்தததோடு 79 பேர் வரை காணமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

முருகதாஸின் அடுத்தப்படத்தின் கதை இதுதான்

முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றார். இந்நிலையில் ஸ்பைடர் படத்தின் கதை கசிந்துள்ளது. இப்படம் புலனாய்வுத்துறை குறித்தது என்பது தான் என்று டைட்டில் வைத்தே சொல்லிவிடலாம், மேலும் படத்தின் கதை ஒரு பயோ பயங்கரவாதம் குறித்தது என்றும், அதுமட்டுமின்றி புலனாய்வு துறையில் உள்ள அதிகாரிகளின் ஊழலை வெட்டவெளிச்சமாக்கும் கதை என்றும் கூறப்படுகிறது ராகுல் ... Read More »

மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி

அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்னை அறிந்தால். நீண்ட நாட்களாக மாஸ் இமேஜில் மட்டும் இருந்த அஜித்திற்கு என்னை அறிந்தால் கிளாஸ் இமேஜையும் பெற்று தந்தது. இப்படத்தில் அஜித்திற்கு இணையாக ஸ்கோர் செய்தவர் அனைவருக்குமே தெரியும் அருண் விஜய் தான், தற்போது அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்க கௌதம் மேனன் ரெடியாகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கவுள்ளதாகவும் கூறி வருகின்றனர். Read More »

தளபதி 2.7 கோடி தல 2.4 கோடி- கடும் போட்டி எதற்கு தெரியுமா?

  தமிழ் சினிமாவை பொறுத்தவரை தலதளபதி தான் தற்போதுள்ள நடிகர்களில் நம்பிக்கட்டும் பந்தயக்குதிரைகள். படம் வெற்றியோ தோல்வியோ போட்ட பணத்திற்கு கேரண்டி. இவர்களின் மோதல் தற்போது யு-டியூபிலும் தொடங்கிவிட்டது, யாருடைய டீசர் அதிக ஹிட்ஸ், அதிக லைக்ஸ் என போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் யு-டியூபில் 2.7 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது. அஜித்தி நடித்த வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா 2.4 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, இதனால், விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி ... Read More »

ட்ரம்ப் தனது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளார்

உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதில் தனக்கான பொறுப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிட்டுள்ளதாக ஒன்ராறிய முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். பச்சைவீட்டு வாயு விளைவுகளை குறைப்பதற்காக 195 நாடுகள் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பரிஸில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார். பரிஸினால் முன்வைக்கப்பட்ட குறித்த உடன்படிக்கை அமெரிக்காவுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் பலர் வேலையின்றி தவிக்க நேரிடும் என்றும் தேசிய இணையாண்மையை பாதிக்கும் எனவும் ட்ரம்ப் ... Read More »

கனடா செல்லும் இலங்கையின் பிரபலம்

இலங்கையின் பிரபல திரைப்பட நடிகை காயத்ரி டயஸ் கனடா செல்லவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காயத்ரி டயஸின்,இரண்டு மகள்களின் கல்வி நிலை கருதியே அவர் கனடா செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,நடிகை மற்றும் அவரின் இரண்டு மகள்களுடன், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கனடா செல்லவுள்ளளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அழகு கலை நிபுனராகவும் செயற்படும் காயத்ரி டயஸ்,கனடா சென்று சொந்த தொழில் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More »

Scroll To Top