Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 4)

Author Archives: Analai Express

Feed Subscription

இளம் பெண் கைது கனடா பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடா – ரொறொன்ரோவைச் சேர்ந்த மருத்துவர் எனச் சந்தேகிக்கப்படும் 19 வயது யுவதி ஒருவரை, முறையற்ற வகையில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவத்தினை (பிளாஸ்ட்டிக் சேர்ஜரி) செய்த குற்றத்திற்காக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி வீடு ஒன்றில் நிலத்திக் கீழ் அமைக்கப்பட்டிருந்த அறை ஒன்றில் வைத்து பெண் ஒருவருக்கு அண்மையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையினை செய்து வைத்துள்ளார். எனினும் இருவாரங்களின் பின்னர் சிகிச்சை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு தொற்று நோய் ஏற்பட்டு வேறு ஓர் மருத்துவரிடம் சென்று மீண்டும் ஒட்டுறுப்பு அறுவையினை செய்து ... Read More »

தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்ட கனேடிய பிரதமர்

தீபாவளித் தினத்தை முன்னிட்டு டுவிட்டர் மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி தினத்தை முன்னிட்டு ட்ரூடோ தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி முபாரக்… ஒட்டாவில் நாங்கள் இரவு கொண்டாடவுள்ளோம், தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என பதிவேற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, முபாரக் எனப்படும் வார்த்தை ஓர் அரபுச் சொல் எனவும் தீபாவளி வாழ்த்துக்கு அதனை பயன்படுத்தியது தவறு எனவும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. எந்தவொரு பண்டிகைக்கும் ட்ரூடோ தனது வாழ்த்துக்களைத் தொடர்ந்தும் தெரிவித்து ... Read More »

பாடசாலை பேரூந்தினால் மோதப்பட்ட 7 வயது சிறுவன்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அபொட்ஸ்வோட் என்ற இடத்தில் 7வயது சிறுவன் அவனது வீட்டின் முன்னால் பாடசாலை பேரூந்தினால் மோதப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7வயதுடைய குர்ராஜ் என்ற இச்சிறுவன் அக்டோபர் 6ல் மோதப்பட்டான்.இச்சம்பவம் சமூக மீடியாவில் பகிரப்பட்டதை தொடரந்து பகிரங்கமானது. கல்சா மிசன் பள்ளி மாணவனான இவன் பாடசாலையில் இருந்து வீட்டில் விடப்பட்ட பின்னர் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து சாரதியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக சீக்கிய சுதந்திர பள்ளி தெரிவித்துள்ளது. சிறுவன் பேரூந்திற்கு முன்னால் கடந்து செல்லும் போது மோதப்பட்டது பின்னர் வாகனம் ... Read More »

கூகுளின்சகோதரி கம்பனி ரொறொன்ரோவில் உயர்-தொழில் நுட்ப சமுதாயத்தை உருவாக்குகின்றது

ரொறொன்ரோவின் பன்முக கலாச்சார மக்கள் தொகை மற்றும் கனடாவின் குடியேற்ற கொள்கை இரண்டும் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தை 50மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்திற்கு தெரிந்தெடுக்க காரணமாக அமைந்ததென Alphabetன் நிர்வாக தலைவர் எரிக் சிமித் தெரிவித்தார். கனடா குடியேறுபவர்களின் வீடு என தெரிவித்த இவர் தொழில் நுட்பம் புலம் பெயர்ந்தோர் மூலம் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 2015 மத்திய தேர்தலின் பின்னர் தான் ட்ரூடோவை சந்தித்த போது கலிபோர்னியாவில் இருக்கும் முன்னணி தொழில் நுட்ப மையமான சிலிக்கோன் பள்ளத்தாக்கு போன்ற அடுத்த ... Read More »

கனடாவில் ஒரு பெண்ணிற்கு சிறந்த நகரம் எது

அண்மை காலங்களில் ஆண் பெண்ணிற்கான ஊதிய இடைவெளி மிக மோசமாக இருப்பினும் பெண் ஒருவருக்கு கனடாவில் சிறந்த நகரம் விக்டோரியா என ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. பொருளாதார மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான பெண்களின் அணுகல், கல்வி, சுகாதாரம் மற்றும் தலைமைத்துவ நிலைமைகள் குறித்து பெண்கள் மற்றும் ஆண்களிற்கிடையிலா வேறுபாடுகளின் அடிப்படையில் கொள்கை மாற்றுக்கான கனடிய மையம் நடாத்திய கணிப்பில் கனடாவின் 25 பெரிய நகரங்களில் விக்டோரியா முதலிடத்தை பெற்றுள்ளது. விக்டோரியாவில் மட்டுமே ஆண்களை விட அதிகமான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனரெனவும் அறிக்கை தெரிவிக்கின்றது. ... Read More »

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு சாலையில் நடந்த விபத்து

ஹாலிவுட்டில் சாகசங்களுக்கு பஞ்சமே இருக்காது. பலருக்கு பிடித்ததன் காரணமே இது தான். இதில் சில நடிகர்களுக்கு நிஜமாகவே சாகசங்களை செய்து காட்டுவார்கள். அப்படியாக அந்த சினிமாவில் பைக் ரேஸ் பிரியராக இருக்கும் ஜெரார்ட் பட்லர். இவருக்கு பைக் ஓட்டுவது என்றால் அப்படி ஒரு இஷ்டமாம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் இவர் நேற்று அந்நகரில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராடத விபத்து ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு காயம் மட்டுமே, எலும்பு முறிவு ஏதும் ... Read More »

மெர்சல் முதல் நாள் பிரமாண்ட வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படத்தை பார்க்க லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருக்க, அவர்களுக்கு விருந்தாக படம் இன்று வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்தது, ஏனெனில், ஏற்கனவே விஜய்-அட்லீ கூட்டணியில் வெளிவந்த தெறி செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் மெர்சல் ப்ரீமியர் நேற்று அமெரிக்காவில் தொடங்க, இப்படம் 273K டாலர் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு பிறகு அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்தது மெர்சல் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். Read More »

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது; இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய வத்சலா பெரேரா உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயது மற்றும் 14 வயதுடைய ஏனைய இரண்டு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயது குழந்தையின் தாயான 19 வயதுடைய வத்சலா பெரேரா, அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரி மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதான தமிழ் சிறுமி ஆகிய முவரும் காணாமல் ... Read More »

முச்சக்கரவண்டி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 220 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து ஹட்டனிற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பாதெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த ... Read More »

Scroll To Top