Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 5)

Author Archives: Analai Express

Feed Subscription

புதிய கடற்படை தளபதியாக சின்னையா

புதிய கடற்படை தளபதியாக ரியர் அத்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த வெற்றிடத்திற்காக அவருக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More »

BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்

இறுதியாக BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் ஷக்தி. தற்போது இவர் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிராக ஏதாவது கருத்தை தான் தெரிந்தோ தெரியாமலோ கூறியிருந்தால் அதற்கு உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். BiggBoss வீடு பல புதிய அனுபவங்களை தந்ததாக கூறிய ஷக்தி தினமும் ஒன்றரை மணி நேரம் மட்டும் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் இதன் மூலம் மட்டுமே யார் நல்லவர்? அல்லது யார் கெட்டவர் என்பதை ... Read More »

சுஜா வருணியை கலாய்க்க பிந்துவும் சினேகனும் போட்ட மாஸ்டர் பிளான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று புதுவராவாக நடிகை சுஜா வருணியை களமிறங்கினர். வீட்டில் ஒரு புது நபர் வந்திருக்கிறார் ராக்கிங் பண்ணாமல் இருக்க முடியுமா என்ற சுஜா வருணியை தவிர வீட்டில் உள்ள அனைவரும் பிந்துவும் சினேகனுக்கும் சண்டை வரும்படி நடித்தனர் . பிந்துவும் சினேகனும் வார்த்தை சண்டையில் ஈடுபட்டு சுஜா ஏமாற்றினார். இதை சுஜாவும் நம்ப தொடங்கியுள்ளார். Read More »

உண்மையில் இதற்காக தான் என் முடியை வெட்டினேன்! நெகிழ்ந்த ஓவியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு அவரின் புதிய ஹேர் ஸ்டைல் வைரலானது. மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தான் அவர் இப்படி செய்தார் என தகவல் பரவியது. ஆனால் இன்று ஓவியா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் செய்வதற்காகத் தான் என் முடியை கொடுத்துவிட்டேன், வேறு எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார். Read More »

பாலா இயக்கும் படத்தில் கஷ்டப்படும் ஜி வி பிரகாஷ்

“தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ் கிரிமினலாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பது குறித்து ஜி.வி.பிரகாஷிடம் கேட்டபோது, “நாச்சியார் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதைக்கு இந்தப் படத்தை பற்றி எதுவும் சொல்லமுடியாது. பாலா சாரிடம் ஒவ்வொரு சீனில் நடிப்பதும் கஷ்டமான விஷயம். சும்மா போய் நடித்துவிட்டு வந்துவிட முடியாது. ... Read More »

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்! வருத்தத்தில் திரையுலகம்

நடிகர் அல்வா வாசு துணை காமெடி நடிகராக பல திரைப்படங்களில் நடித்தவர். 90களில் தொடங்கிய அவரது பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவர் வடிவேலுவின் முக்கிய காமெடி காட்சிகளில் தூணாக இருந்தவர். கடந்த சில தினங்களாக இவர் உடல் நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருந்தார், இதை அறிந்த திரைப்பிரபலங்கள் பலரும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் சிறிது நேரத்துக்கு முன்பு தான் அவர் காலமானார். அவரது குடும்பத்துக்கு சினிஉலகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.   Read More »

நள்ளிரவு முதல் வாகன பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

சில வாகனங்களில் உற்கத்திவரியானது நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர் தெரிவித்தார். அதன்படி 150 சிசி இற்கு குறைந்த மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனம் மற்றும் பாரவூர்திகளுக்கு அறவிடப்பட்டு வந்த உற்பத்தி வரியானது 90 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த வரியானது 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More »

ஹட்டனில் ஒரு தொகை போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் குடாகம பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை போதைப் பொருட்களுடன் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச்சந்தேக நபரிடமிருந்து 100 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 30 க்கும் மேற்பட்ட கேரள கஞ்சா பக்கட்டுக்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவற்றை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரு போதை மாத்திரை 500 ரூபாவுக்கு விற்கப்பட்டு வந்துள்ளதாகவும் கலால் திணைக்கள ... Read More »

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல்; 13 பேர் பலி – இரண்டாவது தாக்குதல் முறியடிப்பு

ஸ்பெயினின் காம்ப்ரில்ஸ் நகரில் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த இரண்டாவது தாக்குதலை முறியடித்த ​பொலிசார் 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. மக்கள் மீது வேனை மோதவிட்டு அதனை ஓட்டி வந்தவன் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர ... Read More »

எத்தனை முட்டை சாப்பிடலாம்

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம். முழுக்க முழுக்க புரதம் நிறைந்த ஒரே உணவுப்பொருள் முட்டை. அந்த அளவுக்கு புரதமும் அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு முழு முட்டையில் ஆறு கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாம் மஞ்சள் கருவை சாப்பிடவில்லையென்றால் வெறும் மூன்று கிராம் அளவு புரதம் மட்டுமே கிடைக்கும். மஞ்சள் கரு கொலஸ்ட்ரால் நிறைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நமக்குத் தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்களான குளோனின், செலீனியம், ஜிங்க், வைட்டமின் ... Read More »

Scroll To Top