Friday , October 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express (page 994)

Author Archives: Analai Express

Feed Subscription

ரஜினி முதன் முதலாக செய்த விஷயம்- ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்சிகளுக்காக சமீபத்தில் மலேசியா சென்றார். அங்கு அப்துல் மாலிக் என்பவரின் ஷோரூம் ஒன்றை ரஜினிகாந்த் தன் கையால் திறந்து வைத்துள்ளார். இதுநாள் வரை ரஜினி எந்த ஒரு கடையையும் திறந்து வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அப்துல் மாலிக் தான் கபாலி படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. Read More »

பீப் பாடல் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மக்களே மறந்து போய் விட்டார் இந்த பீப் பாடலை. ஆனால், இதன் வழக்கு இன்னும் நீதிமன்றந்தத்தில் நடந்து தான் வருகின்றது. இந்த வழக்கில் சிம்பு, அனிருத் இருவரும் கோயமுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்பே கூறியிருந்தது. அனிருத் ஏற்கனவே ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டார். ஆனால், சிம்பு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிம்பு வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். Read More »

மீண்டும் ஒரு கில்லி- விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து

இளைய தளபதி விஜய் தெறி படத்தின் ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்த பிறகு இயக்குனர் பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். பரதன் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியது மட்டுமில்லாமல்,கில்லி படத்தின் வசனகர்த்தாவும் இவர் தான். சமீபத்தில் வந்த தகவலின்படி விஜய்-60 கில்லி ஸ்டைலில் ஒரு வேகமான திரைக்கதை கொண்ட படம் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. Read More »

நயன்தாரா வாழ்க்கையில் விளையாடிய சென்ட்ராயன்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மலையாள படம் புதிய நியமம் வசூல் சாதனை படைக்கின்றது. இப்படத்தில் நயன்தாரா மிகவும் ஜாலியான பெண். ஆனால், சென்ட்ராயன் மற்றும் அவருடைய நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் போதையில் நயன்தாராவை பாலியல் பலத்காரம் செய்கிறார்கள். இதை தொடர்ந்து நயன்தாரா அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதே மீதிக்கதை. Read More »

நடிகர் மம்மூட்டி மருத்துவமனையில் அனுமதி

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராம் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘பேரன்பு’ படம் சமீபத்தில் தான் படபிடிப்பை தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருந்த அவர் நேற்று மீண்டும் இந்தியா திரும்பினார். தொடர்ந்து பயணம் செய்ததாலும், தூக்கம் இல்லாததாலும் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார் அவரை உடனே மும்பையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு அவர் பெங்களுரு புறப்பட்டு சென்றுள்ளார். Read More »

யாழில் நடிகை பூஜா

இலங்கைக் கலைஞர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வரும் ‘யாழ்தேவி’ முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹொட்டேலில் இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகை பூஜா உமாசங்கர், இவ் விழாவில் யாழ் தேவி இசைத்தட்டை வெளியிட்டார். ராஜ்ஸ்டோன் புரொடக்ஷன் தயாரிப்பில் லோககாந்தன் இப் படத்தை இயக்குகிறார். சங்கர், கிரிஸ், நிரோஷா, மிதுனா உட்பட 50 இற்கும் அதிகமான கலைஞர்கள் இப் படத்தில் நடிக்கின்றனர். சுதர்ஷன் இசை அமைக்கிறார். பாடல்களை கவிஞர் ராஜேந்திரகுமார் மற்றும் கஜி எழுதி ... Read More »

நீரில் மூழ்கிய மூன்று மாணவிகள் – ஒருவர் மீட்பு, இருவர் மாயம்

வெல்லம்பிடிய பகுதியில் களனிய கங்கையில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதோடு, இவர்கள் 13 வயதுடைய பாடசாலை மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது. Read More »

இலங்கையில் சீதனத்தை தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்

இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இலங்கையில் சீதன நடைமுறையினால் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலேயே பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீதனம் என்பது பெண்கள் மீது வைக்கப்படுகின்ற தேவையற்ற முன்நிபந்தனையாக உள்ளது என்று பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா வாசுகி தெரிவித்தார். தமிழர் பிரதேசங்களில் சில வழக்காறு சட்டங்கள் மூலமாக சீதனம் வாங்குகின்ற நடைமுறை சட்ட ... Read More »

கட்சி ஒழுக்கத்தை மீறியவர்கள் ஒழுக்காற்று குழு முன் ஆஜராக அழைப்பு

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை எதிர்வரும் தினங்களில் கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜராவதற்கு அழைக்கப்படவுள்ளனர். அதன்போது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமாக விளக்கமளிக்க சந்தர்ப்பம் இருப்பதாக அந்தக் கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடிய போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் மாத்திரம் இதுவரை விளக்கம் அளித்திருப்பதாக ... Read More »

யோசித்தவுக்கு ஆதரவளித்த நான்கு வீரர்கள் நீக்கம்

இலங்கை கடற்படை றக்பி அணியில் இருந்து நான்கு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் நேற்று ஹோமாகம – தியகமவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்ற றக்பி போட்டியின் போது, யோசித்த ராஜபக்ஷவை நினைவுபடுத்தும் வகையில் பட்டியை கைகளில் அணிந்திருந்தமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நேற்று வீரர்கள் அணிந்திருந்த பட்டியில் யோ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது. இவர்களை றக்பி அணியில் இருந்து நீக்கி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கடற்படைத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் ... Read More »

Scroll To Top