Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: axpress

Author Archives: axpress

Feed Subscription
S. Shutharsan - Web Developer & Editor - [email protected]

கண்டிய நடனத்தால் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கு இடையில் அடிதடி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களும், சிங்கள மாணவர்களும் மோதலில் ஈடுபட்டு தணிந்துள்ள போதும் இப்பொழுது விடுதியை விட்டு மாணவர்களை வெளியேறச் சொல்லியதால் வளாகத்தில் உடமைகளோடு செய்வதறியாது காத்திருப்பதாக அறிய முடிகிறது. போர் நிறைவுக்குப் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட சிங்கள மாணவர்களின் தொகை இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையும் சிங்களமயமாக்கி அடக்குமுறைக்குள் கொண்டுவந்துவிட்டது. சிங்கள மாணவர்களின் வருகையின்பின் தமிழ் சிங்கள மாணவர்களிடையே அவ்வப்போது புகைந்து கொண்டிருந்த இனவாத நெருப்பு இன்றைய ஆடி மாதத்தின் முதல்நாள் காற்றிலேயே கொழுந்துவிடத் தொடங்கி விட்டது. இந்த ஆரம்பம் எந்தத்தரப்பினர்க்கும் ஆரோக்கியமாக அமையப்போவதில்லை. ... Read More »

பிரம்டன் தமிழ் சங்கம் நாடாத்தும் ஈழம்சாவடி- 2016

பிரம்டன் தமிழ் சங்கம் நாடாத்தும் ஈழம்சாவடி பல்கலாசார நிகழ்வுகள்  எதிர் வரும் யூலை 8,9,10 ஆகிய 3 நாட்கள் தொடர்ச்சியாக 1495 Sandalwood Parkway East இல் அமைந்துள்ள Brampton Soccer Centre இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் சூப்பர் சிங்கர் புகழ் நிருஜன்உட்பட 500 இக்கும் மேற்பட்ட ஈழ கலைஞர்களின் கலாசார நிகழ்வுகள், நாவுக்கினிய ஈழ உணவுகள், ஈழ வர்த்தகர்களின் சிறப்பு மலிவு விற்பனை அனைத்தும் ஒரே இடத்தில் கோடையில் ஈழத்தில் ஒரு வசந்தம் காண திரண்டு வாரீர்!! தகவல் பிரம்டன் தமிழ் சங்கம் Read More »

யாழ் மண்ணில் மதீசனின் அதிரடி இசையில் ஆங்கிலப்பாடல்!

யாழ் மண்ணிலிருந்து உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் ஆங்கிலப்பாடல் திரு- மதீசன் தனபாலசிங்கம் அவர்களுடைய 60வது பாடலாக இந்த உலக சுற்றுச் சூழல் தினத்தில் உலக மொழியான ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த குப்பைப்பாட்டு. உலக சுத்தத்தை தேடும் இளைஞர்களாக இந்தப் பாடல் குழுவினர் அனைத்து இளைஞர்களையும் உலக சுத்தத்துக்கு அழைக்கிறார்கள். ஈழத்தில் இருந்து உலகத்தரத்துக்கு தயாராகியிருக்கிறது பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை விவேக் எழுத, மதீசன் இசையமைத்து பாடுகின்றார். மேலும் சிவராஜ், திசாங்கன், கிருஷ்ணா, உஷாந்த், கதிர், மகிழ்நன், கபில் , ... Read More »

40 ஆண்டுகள் பூர்த்தி செய்தும் நிறைவேறாத வட்டுக்கோட்டைத் தீர்மான நினைவு நாள்!

நேற்றுடன் 40 நெடிய ஆண்டுகள். 1976 மே 14இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய நாள். ஈழத் தமிழர் வாழ்வில் வரலாற்றுத் திருப்புமுனை நாள். தமிழரசுக் கட்சியின் மூதறிஞர் சா ஜே வே செல்வநாயகம் அங்கிருந்தார். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ ஜீ பொன்னம்பலம் அங்கிருந்தார். மலையகத்தின் மாபெரும் தலைவர் சௌ. தொண்டமான் அங்கிருந்தார். மூவர் தலைமையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை இலங்கைத் தமிழர் இயற்றினர். 1976 மே மாதத்தில் அந்தத் தீர்மானத்தின் ஆங்கில வாசகங்களைத் தட்டச்சிட்டேன், தவறற்ற ஆவணமாகத் தயாரித்தேன் என்பதால் வரலாற்றுக்குச் சாட்சியாக ... Read More »

கிளிநொச்சியில் புதிய சிவபூமிப் பாடசாலை ஆரம்பமாகவுள்ளது!

கிளிநொச்சியில் புதிய சிவபூமிப் பாடசாலை – கலாநிதி ஆறு.திருமுருகனின் மற்றொரு சாதனை. கோண்டாவிலில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயற்படுவதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் சிவபூமி மனவிருத்திப்பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா எதிர்வரும் 26.05.2016 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய சிவபூமி பாடசாலையில் நடைபெறவுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவராக கலாநிதி ஆறு.திருமுருகன் விளங்குகின்றார். சைவச் சூழலில் சமூகப்பணிகளை இந்நிறுவனத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Read More »

மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் இயற்கை எய்தினார்!

மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்(வயது-67) திடீர் மாரடைப்பின் காரணமாக இன்று 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார். திடீர் சுகயீனம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலை 5.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் நகர சபைத்தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப்பெற்று மன்னார் நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read More »

பிரான்சுக்கு அருகாமையில் ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி !

ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி. தமிழர்கள்க்கு பரிச்சயம் இல்லாத இடம். தமிழர்கள் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன். சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு. ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் ... Read More »

யாழ் பொன்னாலையில் மினி சூறாவளி வீடுகள், கட்டிடக் கூரைகள் சேதம்!

யாழ்- பொன்னாலையில் இன்று சனிக்கிழமை மதியம் திடீரென்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடை மற்றும் பொதுக் கட்டிடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இதில் அண்மையில் வழங்கப்பட்ட இந்தியன் வீடு ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டது. கடந்த சில மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வலி.மேற்கின் பல இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்தது. இதன்போது 2.30 மணியளவில் பொன்னாலையில் மினி சூறாவளியொன்று வீசியது. இந்த சூறாவளியால் பொன்னாலை ... Read More »

ரெறொண்டோவில் இனிதே நிறைவேறிய இசை எம்பயர்- 2016!

கனடாவில் தமிழர்கள் வரலாற்றில் இசை என்னும் பரிணாமத்தில் “இசை எம்பயர்” என்று அழைக்கப்படுகின்ற தனியார் நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு சாதித்துள்ளார்கள். ரெறோண்டோவிலுள்ள முழுமையாக கனேடிய இளம் இசை தேர்ச்சி பெற்ற தலைமுறையினரை உள்வாங்கி நடத்தப்பட்ட மாபெரும் இசை நடனத் திருவிழா! மண்டபம் நிரம்பி வழிந்த ரசிகர்கள் கூட்டம்! தாராளமாக சுவையான உணவுகளுடன் பல்வேறுவகையான கேக் வகைகளையும் வழங்கி இசை எம்பயர் நிறுவனம் மக்களின் மனதில் நிலையானது. ராம் அகராதியின் நடனக்குழுவினர் அசத்தலாக பாடல்களுக்கு மட்டுமன்றி வித்தியாசமான நடனங்களை வழங்கி ரசிகர்களை இன்பம் ... Read More »

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு இது சமர்ப்பணம்!!

இலங்கையின் வடபுலமாகிய முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சுவிஸ்லாந்து நாட்டிற்கு சட்டவிரோத முறையில் செல்ல முற்பட்டு துருக்கியில் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணமான வட்டுவாகலைச் சேர்ந்த காண்டீபனின் சடலம் இன்று அவரது சொந்தக்கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வாரம் மகன் காண்டீபன் இறந்த செய்தியினைக் கேட்டு அவரது தாயாரும் அதிர்ச்சியில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு ஆசையில் தவறான நபர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டுபவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம். Read More »

Scroll To Top