Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / Author Archives: Analai Express

Author Archives: Analai Express

Feed Subscription

தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிக Ideal Isai Inc கழகம் உதயம்!

கனடா ரொறண்டோ பெரும்பாகப் பகுதியிலுள்ள தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் இசைக் கலையினை வளர்க்கும் வகையில் முன்னணிக் கலைஞர்கள் ஒன்று கூடி “Ideal Isai Inc.” என்ற கழகத்தினை உருவாக்கி உள்ளனர். இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று ஞாயிறு (03-01-2016) பிற்பகல் ஸ்காபுறோவிலுள்ள JC Banquet Hall மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஊடக வியலாளர் மகாநாட்டில் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள், இணையத்தளங்கள், வானொலிகள் ஆகியவற்றினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இசைக் குயில் சகோதரிகளான செல்விகள் பிரதாயினி, விதுசாயினி பரமநாதன், மற்றும் ... Read More »

துரோகி சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்ற அவுஸ்திரேலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றுக்காக அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழரசுக்கட்சிக் கிளையினரால் சுமந்திரன் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் நடைபெறத் தொடங்கிய நேரத்திலிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பிலான தொடர் கேள்விகளை மக்கள் எழுப்பினர். இதன் போது அங்கிருந்த தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு எதிராக கேள்வி கேட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. சம்வத்தினை அடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒன்று கூடல் தொடரமுடியாத அளவிற்கு இடம் ... Read More »

மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனைத் தொடக்கி வைத்துள்ளார். வடமாகாண சபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடித்து வருகிறது. இதன் நடவடிக்கைகளில் ஒன்றாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர்க்க ண்காட்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னணியில் உள்ள தாவர உற்பத்தியாளர்கள் 16 காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். மாகாண விவசாயத் திணைக்களமும் தனியான ... Read More »

தமிழர்களையும் பெருமைப்படுத்திய பல்கலாச்சார ஊடக விழா!

கனடியப் பல்கலாச்சார ஊடக அமைப்பின் 35வது வருடாந்த விருது வழங்கும் விழாவில் தமிழர்களில் பலரும் விருதுகளைப் பெற்றனர். ஓன்றாரியோ மாகாண சட்டசபையில் உள்ள ஒன்ராறியோ ஆளுநர் நாயகம் அவர்களின் உத்தியோகபூர்வ அலுவலகத்திலேயே இவ்விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது கனடாவில் உள்ள மாற்றுமொழியூடங்களிற்கான விருதுகள், சமூக சேவை விருதுகள், சிறந்த பொதுச்சேவையாளர்களிற்கான விருதுகள் என்பன வரிசையில் தேர்வு செய்யப்பட்ட தமிழர்களில் நான்கு முக்கிய தமிழர்களும் அடங்குகின்றனர். இந்த வகையில் ஆறு பத்திரிகையாளர்கள், 3 பதிப்புரிமையாளர்கள், 2 இலத்திரணியல் பதிப்பாளர்கள், ஒரு ஆவணத் திரைப்பட இயக்குனர் ... Read More »

பிரதம மந்திரியாக பதவியேற்ற ஒரு மாத காலத்தினுள், நான்கு அனைத்துலக மகாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ள ஜஸ்ரின் ட்ரூடோ!

ஜஸ்ரின் ட்ரூடோ கனடாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஒரு மாத காலத்தினுள், நான்கு அனைத்துலக மகாநாடுகளில் கலந்து கொள்வாரென அறிவிக்கப்படுகிறது.அவரது தலைமையிலான புதிய அரசு இன்று காலை பதவியேற்றுக்கொண்டுள்ளது. துருக்கியில் 15 மற்றும் 16 ஆந் திகதிகளில் நடைபெறவிருக்கும் ஜீ-20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மகாநாடு, பிலிப்பீன்ஸில் நடைபெறவிருக்கும் ஏபெக் உச்சி மகாநாடு, மோல்ட்டாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மகாநாடு, மற்றும் இந்த மாதத்தின் இறுதியில் பாரிஸில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மகாநாடு ஆகியவற்றில் அவர் பங்கெடுப்பாரென அறிவிக்கப்பட்டது. அனைத்துலக ... Read More »

ரஷ்யாவுடன் மோதுமா அமெரிக்கா? எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் குவித்து வரும் அமெரிக்கா

ரஷ்யாவுடன் மோதுமா அமெரிக்கா? எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் குவித்து வரும் அமெரிக்கா. சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நிகராக, ஏவுகணைகள் தாங்கிய போர் விமானங்களை துருக்கியில் அமெரிக்கா குவித்து வருகிறது.பஷார் அல் ஆசாத்துக்கு ஆதராவாக களமிறங்கியிருக்கும் ரஷ்யா, அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றது.இதனால் பல முறை அமெரிக்கா கண்டனம் வெளியீட்ட போதும் பொருட்படுத்தாமல் ரஷ்யா சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந் நிலையில், ரஷ்யாவுடனான போருக்கு ... Read More »

இலங்கையில் வாழும் தமிழர்களின் ஏற்றம் குறித்த முக்கிய புதிய அறிவித்தல் கனடாவில் வெளிவரவுள்ளது.

கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இவ்வாரம் வியாழக்கிழமை வெளியிடவுள்ளார். ஸ்காபரோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோயில் மண்டபத்தில், மாலை 4 மணிக்கு வருகைதரவுள்ள கௌரவ ஜேசன் கெனி அவர்கள், அங்கு வருகைதரும் தமிழ் மக்கள் மத்தியில் இந்த முக்கிய அறிவித்தலை வெளியிடவுள்ளார். இலக்கம் 1380 பேர்ச்மௌன்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோயில் மண்டபத்திற்கு, வியாழக்கிழமை 5 மணிக்கு வருகை தந்து, இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் சமயம் உங்கள் ஆதரவை வழங்குமாறு தமிழ் ஆர்வலர்கள் ... Read More »

யுத்தத்தின் காயங்களை ஆற்றுவதில் உண்மையை கண்டறிதல் முக்கியம்!- பிரிட்டன் உயர்ஸ்தானிகர்

யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் செயற்பாட்டில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானதாகும் என்று இலங்கைக்கான பிரிட்டனின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்தார். அத்துடன், இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டுகின்றது. மேலும் உள்ளக நம்பகரமான விசாரணை செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் எம்மிடம் உதவுமாறு கோரிக்கை விடுக்குமானால் அதனை பரிசீலிக்க பிரிட்டன் தயாராக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். அந்தவகையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவு தற்போது இடம்பெற்றுள்ளது. அவரின் வருகையை நாங்கள் ... Read More »

பிரபாகரனின் சிலையை இரவோடு இரவாக அகற்றிய தமிழக அரசு.

தமிழகத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிலை இரவோடு இரவாக தமிழக அரசால் அகற்றப்பட்டுள்ளது.வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் கடந்த 4ம் திகதி கிராமத்தினர் பேச்சியம்மன்கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர். கோயிலின் தெற்கு பகுதியில் வைக்கப்பட்ட இரண்டு குதிரை சிலைகளை வடிவமைத்தனர்.அதில், ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர். தன் இனத்தையும், மக்களையும் பாதுகாத்தவர்களின் ... Read More »

Scroll To Top