அரசு நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பொதுமக்கள் மரணம்

சிரியா நாட்டில் அரசு நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பொதுமக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அரசுப்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் உண்டாகி வருகின்றன.

நேற்று சிரியாவின் வடகிழப்பு பகுதியில் அரசுப் படையினர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் மற்றொரு தாக்குதல் சிரியாவின் பின்னிஷ், ரம்ஹம்தான், டப்தனாஸ் ஆகிய பகுதிகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 16 பேர் மரணம் அடைந்துளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 8 ஆம் தேதி அரசுப்படைகளுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது 44 பேர் மரணம் அடைந்தது தெரிந்ததே.

Sharing is caring!