கோகோ கோலா நிறுவனர் பற்றிய ராகுல் பேச்சு… இணையத்தில் செம டிரெண்ட் அடிக்குது… அடிக்குது!

புதுடில்லி:
செம டிரெண்ட் அடித்து வருகிறது காங்., தலைவர் ராகுல் பேசிய பேச்சு. என்ன விஷயம் தெரியுங்களா?

கோகோ கோலா நிறுவன நிறுவனர் குறித்த காங்., தலைவர் ராகுல் பேசிய பேச்சு டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது. டில்லியில் ஓ.பி.சி., பிரிவினரிடையே காங்., தலைவர் ராகுல் நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கோகோ கோலா நிறுவனத்தை நிறுவியவர் முதலில் எலுமிச்சை சாறு விற்றவர். நீரில் சர்க்கரை கலக்கிய அவரது பரிசோதனை அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பணத்தில் அந்நிறுவனம் துவங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

கோகோ கோலா நிறுவனத்தை அமெரிக்க டாக்டர் ஒருவர் நிறுவிய நிலையில் ராகுலின் இப்பேச்சு, #AccordingToRahulGandhi என டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!