சீனாவில் பறவை முகம் கொண்ட அதிசய மீன்

சீனாவில் பறவை முகம் போன்ற தோற்றம் கொண்ட அதிசய மீன் ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசீன பகுதியில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய அந்த மீனின் தலைப்பகுதியில் ஒரு புறம் பறவையின் முக செயலிலும், மறுபுறம் டால்பின் போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது.

இது மீன் இனத்தை சேர்ந்ததா, அல்லது மரபு வழி குறைபாட்டினால் உருவானதா என்று விஞானிகள் இஞ்சி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.தண்ணீரில் ஏற்பட்ட மாசு காரணமாக இது போன்ற தவறான உருவாக்கம் நடக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச தண்ணீருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மீனை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆராய்ச்சிக்கு பின்னர் இது என்ன குறைபாடு காரணமாக உருவானது என்று கண்டறியப்படும் என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!