பங்கேற்கிறார்… முன்னாள் ஜனாதிபதி பிரணாப் இப்தார் விருந்தில் பங்கேற்கிறார்

புதுடில்லி:
கண்டனங்கள் எழுந்ததால் தன் முடிவிலிருந்து பின் வாங்கி உள்ளது காங்கிரஸ் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். என்ன விஷயம்ன்னா…

காங் தலைவராக ராகுல் பொறுப்பு ஏற்ற பிறகு, முதன் முறையாக இப்தார் விருந்து அளிக்க உள்ளார். டில்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் இந்த இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த இப்தார் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் காங்.க்கு ஆத்திரத்தையும் மூட்டியது.

இதனால் இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பில்லை என செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் எழுப்பினர். இதனால் திடீரென காங். மனம் மாறியது, இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என தெரிவித்தது.

காங், செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கூறுகையில், நாங்கள் விடுத்த அழைப்பை பிரணாப் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!