“பேரணியா வந்தாரு… திடீர்ன்னு சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினாரு”

புதுடில்லி:
ஐயா… முதல்வரய்யா… இப்படி திடீர்ன்னு ரோட்டில் உட்கார்ந்து போராடலாமா? அப்புறம் எதிர்கட்சிகள் ஸ்டண்ட் அடிக்கிறீங்க என்று சொல்லிட போறாங்க என்று கிண்டல் அடிக்கின்றனர் நெட்டிசன்கள். எதற்காக?

டில்லியில் துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தியதுதான் வைரலாகி வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக டில்லி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த டில்லி அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் இழுத்தடித்து வருகிறாராம். (அட ஏங்க உங்க அரசியல் சண்டையில் பெண்களின் பாதுகாப்புக்கான விஷயம் கால தாமதம் ஆகலாமா?

இந்நிலையில் இத்திட்டத்தை வேணும்னே காலதாமதம் செய்கிறார் என்று கண்டித்தும் அவரது இல்லத்தை நோக்கி, அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ.க்களுடன் பேரணியாக சென்றார்.

பேரணியாக சென்றவர் என்ன நினைத்தாரோ தெரியலை… துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே திடீரென்று சாலையில் அமர்ந்து, கெஜ்ரிவால் போராட்டத்தில் ஈடுபட்டார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கெஜ்ரிவாலுடன் இணைந்து போராட்டம் நடத்த பெரும் பரபரப்பு உருவாகி விட்டது.

நன்றி – பத்மா மகன், திருச்சி

Sharing is caring!