Sunday , July 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம்

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

விநாயகர் முன் தலையில் தோப்புக்கரணம் போடுவது ஏன்?

முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கும். அந்த வகையில், தான் தலையில் குட்டு போடுவதும், தரையில் தோப்புக்கரணம் போடும் முறைகள் வழக்கத்தில் உள்ளது. ஏனெனில் நமது காதுகளில் உள்ள 200 நரம்புகள் சீராக இரத்தம் செல்வதற்கும், புதிய இரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் இந்த வழக்க முறைகள் பெரிதும் உதவுகிறது. எனவே தான் சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள். Read More »

இன்பமாக வாழ முருகனை தரிசிப்போம்

முருகனை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நமது வாழ்வில் பிறவித் துன்பம் இருந்தால், அதனால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்துமே தடைபடும். மற்றவர்கள் நமக்கு செய்கின்ற இடையூறுகள், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற வினைகளின் பாதிப்புகள் நம்மை தாக்காமல் தடுக்கிறது. பாம்பு, பிசாசு, கொடிய பூதம், இயற்கைச் சீற்றமான வெள்ளம் மற்றும் பகைவர்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். தீமை விளைவிக்கும் கொடிய நஞ்சு கொண்ட விலங்குகள் போன்று எவை வந்தாலும் அதில் இருந்து எதிர்த்து போராட தைரியம் கிடைக்கும். நமது வாழ்வில் எவ்வித நோய் ... Read More »

கிரகங்களால் ஏற்படும் பாதகங்களை போக்கும் தினசரி மருத்துவ குளியல் முறை

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் கிட்டும். சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம். சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு ... Read More »

சரவணபவ என்பதன் பொருள் யாது?

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். ச- என்றால் மங்களம் ர- என்றால் ஒளி கொடை வ -என்றால் சாத்துவீகம் ந -என்றால் போர் பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம் ஒளிக்கொடை சாத்வீகம் வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்று கூறுவர். Read More »

மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் இரகசியம்

ஒரு குழந்தை பிறக்கும் போது, குழந்தையின் இராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கணித்து எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் எழுதப்படுகின்றது. இப்போது, மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் இரகசியத்தின் உண்மைகள் என்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்! 27 நட்சத்திரங்களின் வரிசையில் 19 ஆவது இடத்தை பெறுவது மூலம் நட்சத்திரமாகும். இந்த மூலம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும மூலம் நட்சத்திரம் தனுசு இராசிக்கும் உரியதாகும். மூலம் நட்சத்திரம் வாயு புத்திரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரமாகும். இந்த ... Read More »

தீய எண்ணங்களை விரட்டும் எலுமிச்சை விளக்கு

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் போது எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது இயல்பான விடயமாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணம் என்ன? எந்த நாளில் விளக்கேற்றினால் அதற்கான பலனை பெறலாம் என்பது தெரியுமா? எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுவது எப்படி? தோல் மெல்லியதாக உள்ள எலுமிச்சை பழத்தினை எடுத்து கொண்டு அதன் தோலை நெகிழ்வாக உருட்டி செங்குத்தாக சரிபாதியாக வெட்டி, சாற்றினைப் பிழிந்து கொள்ள வேண்டும். பின் பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து, அதில் எண்ணெய் அல்லது நெய் ... Read More »

தவம் என்னும் இந்துக்களின் கலை

நம்மில் பலர் தவம் என்றால் முத்திக்காக அனுஸ்டிப்பது என்றும் அது ஒரு சன்னியாசியினால் மேற்கொள்ளப்படுவது என்றுமே புரிந்து வைத்துள்ளோம். தவம் என்பது ஒரு கலை. அதை சாதாரணமானவர்கள் அனுஸ்டிப்பது கூட சிறந்த பழக்கம். எனவே தவங்களில் சிறந்த தவம் பற்றி எடுத்து நோக்கலாம். தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை ‘தவம்’ என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ‘நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் ‘தவஷி’ (ஆண்) அல்லது ‘தவஷ்வினி’ ... Read More »

பூணூல் அணிவதன் நோக்கம்

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை வணங்கும் போது ஒருவன் அறிவிலும், வீரத்திலும் சிறந்தவனாக விளங்குகின்றான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை அங்கும் இங்கும்  சிதற விடாமல் காக்கின்றது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும். பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகின்றது. முதன் முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் ... Read More »

ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னர் செய்ய வேண்டியவை

ஆலயத்திற்குள் நுழையும் முன்னர் முதலில் எமது பாதத்தை கழுவ வேண்டும். பின்னர் கால், கைகளை கழுவிய பின் சில துளிகளை தலையில் தெளித்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும். பின்னர் வாயிற்காப்போர்களான துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்வதற்கு முன்னர் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும். அந்த படியை தாண்டும் போது, ‘நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை ... Read More »

வளம் பெற வைக்கும் முருகனின் விரதம்

முருகப்பெருமான் வைகாசி விசாகம் அன்று அவதாரம் செய்த தினம் ஆகும் . உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாக தோன்றினார். விசாக நட்சத்திரத்தில் வரும் இந்த சிறப்பு நாளில் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும், அறுபடை வீடுகளிலும் விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும். இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம். புத்தர் அவதரித்ததும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என பவுத்தர் இதனைக் கொண்டாடுவர். இந்நன்னாளில் நம்மாழ்வார் அவதரித்தருளினார். தெற்கு திசையின் திக்பாலகரான யமதர்ம இராஜனுக்குரியது வைகாசி விசாகமே. ... Read More »

Scroll To Top