Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 10)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

வீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ்வளவு சம்பந்தமா??

வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும், பில்லி சூனியமும், நம்மை ஒன்றும் செய்யாது. வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் கூறுகின்றன. அவற்றில் தெய்வ சக்தியை அதிகரிக்கும் செயல்களை பற்றி இங்கே காணலாம்… ஏன் தெய்வ சக்தி நுழைய வேண்டும்? ஒரு வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால், அந்த வீட்டில் நல்லவை அதிகம் நடக்கும், வீட்டில் இருக்கும் ... Read More »

நடராஜரின் கையிலுள்ள அக்னி எதனை உணர்த்துகின்றது?

நடராஜரின் கையிலுள்ள அக்னி, ஞானத்தின் குறியீடாகும். ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ அவருக்கே கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பதை அவர் ஏந்தியுள்ள தீச்சட்டி உணர்த்துகிறது. இறைவன் செய்யும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் நெருப்பானது அழித்தலைக் குறிக்கும். மனதில் இருக்கும் ‘அறியாமை’ என்னும் காட்டை நடராஜர் அழிக்கிறார் என்பதை அவர் ஏந்தியுள்ள நெருப்பு உணர்த்துகின்றது. கையில் கற்பூரம் வைத்துக் கொண்டு ஒருவன் ஒன்றைச் சொன்னால், ‘சொல்வது சத்தியம்’ என்பர். நடராஜரும் எமக்கு சத்தியம் செய்து கொடுப்பது போன்றதையே அவருடைய தீச்சட்டி உணர்த்துகின்றது. Read More »

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு

பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம் என்கின்றனர் முன்னோர்கள். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு ஆகும். சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் எமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடும் பிரதோஷ வழிபாடு ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது. நான்கு வேதங்கள், 64 கலைகள் ... Read More »

கோரிக்கைகளை நிறைவேற்றும் சாகம்பரி தேவி மந்திரம்

சாகம்பரி தேவிக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரிக்கும்போது எமது கோரிக்கைகள் யாவும் நிறைவேறும் என்பதும் பலரது நம்பிக்கையாக உள்ளது.வறுமையில் வாடுபவர்கள், சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உணவு, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றி கிடைக்கும் என்பது ஐதீகம். சாகம்பரி த்யானம் : ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம் ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம் வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ லோகாநாம் ஜநநீம் ... Read More »

மூன்றாம் பிறை தரிசனம்

மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி ‘சந்திர மௌலீஸ்வரராக’ காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல.  சிவபெருமானின் ஒரு பகுதியை நாம் தரிசிக்கும் பாக்கியத்தை  பெறுகிறோம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது என்பதுடன் செல்வவளம் பெருகும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்பது ஐதீகம். மூன்றாம் பிறை தரிசன நாளில் விஷேசமான ஸ்தலத்தில் இருந்து மூன்றாம் ... Read More »

அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்

அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிகவும் முக்கியமானவை. எங்கும் எதிலும் நிறைந்தவன் இறைவன் என்ற வகையில் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என பூஜை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தேங்காய் : தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோன்று  அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்போது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும். ... Read More »

கோமாதா பூஜைப் பலன்கள்

பசுவை பூஜை செய்வதே கோபூஜை. சகல தெய்வங்களும் பசுவின் உடலில் வீற்றிருப்பதாக ஐதீகம். பசுவிற்கு ஒரு பிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுப்பதை புண்ணிய செயலாக வேதம் குறிப்பிடுகிறது. கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களை இங்கு பார்ப்போம். கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிடைக்கும். நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையை செய்வது சிறந்த பலனை அளிக்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். கோமாதா பூஜையினால் செல்வச் செழிப்பு ஏற்படுகிறது. வியாதிகள் ... Read More »

குரு பகவான் வழிபாடு

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சாஸ்திரமறிந்தவர்கள் கூறுவர். பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான் சுபக்கிரகமாக விளங்குகின்றார்.வாழ்க்கையில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை கிடைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.ஆன்மீக ஞானத்தை வழங்குவதனால் ஞானகுருவான வியாழ பகவானுக்கு ‘பிரகஸ்பதி’ என்ற பெயர் ஏற்பட்டது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த சாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதிகள் கூறுகின்றன. ... Read More »

வீட்டில் செல்வம் பெருக!

நாம் உழைக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறுக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து மொத்த பணத்தையும் செலவு செய்ய வைத்துவிடும். கைநிறைய உழைத்த பணத்தினை ஒரு பக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். செல்வம் கொழிக்க உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய வேண்டியவை- வியாழக்கிழமைகளில் குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கற்கண்டுபோட்டு தீபம் ஏற்ற ... Read More »

கடவுளை வணங்கும் முறையில் உள்ள சம்பிரதாயங்கள்

கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உண்டு என்கின்றனர் முன்னோர்கள். முன்னோர்கள் கூறும் சில ஆன்மீக தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம். திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோயில் மூடியிருக்கும் போதும் திருமஞ்சன பூஜையின் போதும் அல்லது திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது. எலுமிச்சம் பழ தீப விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் ... Read More »

Scroll To Top