Sunday , August 20 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 2)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

இன்பமாக வாழ முருகனை தரிசிப்போம்

முருகனை தரிசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நமது வாழ்வில் பிறவித் துன்பம் இருந்தால், அதனால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்துமே தடைபடும். மற்றவர்கள் நமக்கு செய்கின்ற இடையூறுகள், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற வினைகளின் பாதிப்புகள் நம்மை தாக்காமல் தடுக்கிறது. பாம்பு, பிசாசு, கொடிய பூதம், இயற்கைச் சீற்றமான வெள்ளம் மற்றும் பகைவர்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். தீமை விளைவிக்கும் கொடிய நஞ்சு கொண்ட விலங்குகள் போன்று எவை வந்தாலும் அதில் இருந்து எதிர்த்து போராட தைரியம் கிடைக்கும். நமது வாழ்வில் எவ்வித ... Read More »

கிரகங்களால் ஏற்படும் பாதகங்களை போக்கும் தினசரி மருத்துவ குளியல் முறை

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் கிட்டும். சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம். சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு ... Read More »

மனிதன் பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமிகள் என்ன சொன்னார்?

சடங்குகள் அவசியம்தானா? நெல்லிலிருக்கும் அரிசிதான் அதை முளைக்கச் செய்வதற்கு அவசியமானதென்பதும், அதன் மேலிருக்கும் உமி பயனற்றதென்பதும் சாதாராணமான கருத்து. இருப்பினும், உமி நீங்கிய அந்த அரிசியை விதைத்தால், அது முளைத்துப் பயிராகி நெல் விளைவதில்லை. நெல் விளைய வேண்டுமானால் உமியுடன் கூடிய தானியத்தை அப்படியே விதைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு அரிசி வேண்டும்போது நெல்லிலிருந்து உமியைப் பிரித்து நீக்க வேண்டும். அது போல ஒரு தர்மம் நிலைத்து வளர்வதற்குக் கிரியைகளும் சடங்குகளும் அவசியம். முளைக்கும் வித்தாகிய உண்மையை அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன. ஆதலால், ஒவ்வொரு ... Read More »

விபூதி எப்படி உருவாகியது?

விபூதி தோன்றிய கதை உங்களுக்குத் தெரியுமா? பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்குக் கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனைச் சுற்றிச் சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீரக் கனிகளைச் சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை ... Read More »

மகாலட்சுமி அருள் கிடைக்க வீட்டில் செய்ய வேண்டியவை

மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்ய, அருள்புரிய சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதிகாலை எழுந்ததும் கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி லட்சுமியை வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கும் கொடுக்கலாம். இவ்வாறு ... Read More »

அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்

அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிகவும் முக்கியமானவை. எங்கும் எதிலும் நிறைந்தவன் இறைவன் என்ற வகையில் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என பூஜை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தேங்காய் : தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோன்று  அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்போது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும். ... Read More »

யேசுவிடம் கற்ற பெண் சீடர்கள்

ஏட்டுக் கல்வி இல்லாத அந்தக் காலத்தில் கல்வியானது ‘குரு – சீடர்’ உறவின் அடிப்படையில் இருந்தது. சமய குருவின் ஆசிரமத்தில் சீடர்கள் தங்கியிருந்து சமயக் கோட்பாடுகளையும் இறைவனைப் பற்றிய செய்திகளையும் கற்றுக்கொண்டனர். இயேசுவானவர் தன்னுடைய இப்பூலோகப் பணிக்காலத்தில் சீடர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்குப் போதனைகளை நேரடியாகவும் கதைகள் உவமைகள் செய்முறை பயிற்சி மூலமாகவும் கூறி வந்தார். அவ்வாறு  யேசுநாதர் கற்பித்த பெண் சீடர்கள் பற்றி அறிவீர்களா? நற்செய்தி நூல்களில் வரும் பெண்களின் சீடத்துவம் ஆக்கப்பூர்வமான முன்மாதிரியானது. பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களிலிருந்தும் குணமான பெண்கள் சிலரும் ... Read More »

இஸ்லாம் மதத்தில் நபிகள் நாயகம் சொன்ன உண்மைகள்

1.செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 3.அமானிதத்தை  (அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை. 4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும். 5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சைத்தானின்  தன்மையாகும். 6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார். 7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். ... Read More »

நீங்களும் சீரடி சாயி பாபா பக்தரா? அவர் அப்படி என்ன சொன்னார்?

1.சீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் அனைத்தும் மறைந்து நலமடைவான். 2. துவாரகாமாயியை அடைந்த பொழுதில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான மகிழ்ச்சியை அடைவார்கள். 3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். 4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு நிறைய ஆசிகளையும் புத்திமதிகளையும் கொடுக்கும். 5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும். 6. என்னுடைய மசூதியில் இருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன். 7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னைத் தஞ்சம் அடைபவர்களுக்கும் என் ... Read More »

தியானம் என்றால் என்ன? தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. • ஆக்சிஜன் உபயோகத்தை ... Read More »

Scroll To Top