Wednesday , May 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 20)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

‘கந்த சஷ்டி விரதம்’ அனுஷ்டிக்கும் முறை

சஷ்டி விரதமிருப்பவர் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபடவேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும். இது கந்த புராணம் கூறும் முறை. உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின்போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா ... Read More »

சுபகாரியங்களை ராகு காலத்தில் செய்ய நேரிட்டால்?

புதிதாக ஒரு முயற்சியில் இறங்கும்போது சுபநேரம் பார்த்துச் செய்வது நல்லது. ஆனால், தவிர்க்க முடியாத பட்சத்தில், ராகுகாலத்தில் ஒரு செயலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது என்ன செய்வது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் விஷ்ணுதுர்க்கையை மனதிற்குள் பிரார்த்தனை செய்துகொண்டு காரியத்தை தொடங்கலாம். அத்துடன், அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சுமங்கலிப் பெண்ணின் கையால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செயலில் இறங்கினால் எடுத்த பணி வெற்றிகரமாக நடந்தேறும். செயலில் வெற்றி கண்டதும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தல் ... Read More »

ஆரத்தி எடுக்கப்படுவதற்கான காரணம் என்ன?

நம் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. இதில் ஆழமான அர்த்தம் அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள் மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ... Read More »

காப்பு கட்டுதலுடன் சிறப்பாக ஆரம்பமான கந்த சஷ்டி விரதம்

மக்களால் விரும்பி மன ஒருமைப்பாட்டுடன் அனுஷ்டிக்கப்படும் கந்தனுக்குரிய மிகச் சிறந்த விரதமான ‘கந்த சஷ்டி விரதம்’ இன்று பெரும்பாலான ஆலயங்களில் காப்பு கட்டுதலுடன் ஆரம்பமானது. அதன்படி, புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில், ஆலய பிரதம குரு சிவாகம சிவஸ்ரீ நாராயண சபாரத்தன குருக்கள் தலைமையில், மிகச்சிறப்பாக கந்த சஷ்டி விரதத்திற்கான விஷேட பூஜைகளும் ஆராதணைகளும் நடைபெற்றது. இதன்போது, இடம்பெற்ற காப்பு கட்டுதல் நிகழ்விலும், ஒமம் வளர்த்தல், அபிஷேகம், ஆராதணை, விஷேட பூஜைகள் போன்ற தெய்விக நிகழ்வுகளிலும் பூஜைகளிலும் பெரும் திரளான மக்கள் கலந்துக் ... Read More »

‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தின் அர்த்தம்

ஹரே கிருஷ்ணா மந்திரம், கிருஷ்ணரின் ஒலிப் பிரதிநிதித்துவம் ஆகும். ஆகவே, ஒரு சாதாரண சொல்லின் அர்த்தத்தை ஆராய்வது போல, ஹரே கிருஷ்ண மந்திரத்தின் அர்த்தத்தைப் பற்றி பேச முடியாது. ஹரே கிருஷ்ணா மந்திரத்தின் அர்த்தம் அதனுள்ளேயே அடங்கியுள்ளது. சாதாரண சொற்களைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. உதாரணமாக ‘நீர்’ என்னும் சொல், ‘நீர்’ எனும் பதார்த்தத்தை விட வித்தியாசமானது. நீங்கள் தாகமாக இருக்கும் பொழுது ‘நீர், நீர், நீர்’ என்று கூறினும் நீங்கள் தொடர்ந்தும் தாகமாகவே இருப்பீர்கள். ஆனால் கிருஷ்ணர் அவருடைய நாமத்தில் இருந்து வேறுபட்டவரல்ல. ஆகவே, நாங்கள் ... Read More »

கிரகணமும், இறைவழிபாடும்

சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். சூரிய, சந்திர ஒளி இல்லையேல் பகல், இரவு என்னும் காலங்கள் இல்லை. மழை பெய்யாது. பயிர்கள் விளையாது. பூமி மற்றும் அதில் வாழும் உயிர்கள், அவற்றின் உணவுப் பொருட்கள் எல்லாமே சூரிய சந்திர ஒளிக்கதிர்களினால் அன்றாடம் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி இறையருளால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய சந்திரர்களின் இயல்பான ஒளி மறைக்கப்பட்டு குறிப்பிட்ட நாழிகை அவற்றின் கிரகண கால ஒளி, பூமி மற்றும் அதில் ... Read More »

சிவன் ஆலயங்களில் நந்தி சிலை வைக்கப்பட்டிருப்பது ஏன்?

சிவன் ஆலயங்களில் வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி பலருக்கு தெரியாது. பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த ... Read More »

நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது நன்மை பயக்குமா?

கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. ... Read More »

பூஜையின்போது மணி உபயோகப்படுத்துவதற்கான காரணம் என்ன?

மணியடிப்பது என்பது துர்தேவதைகளை விரட்டுவதற்காக என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள். தீய சக்திகள் விலகி இறைசாந்நித்யம் இந்த இடத்தில் பெருகட்டும் என்பது இதன் பொருள். மணியடிப்பது என்பது அதற்காக மட்டுமல்ல. பூஜையின்போது நமது மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தாலும், முக்கியமான தருணத்திலாவது இறைவனின் பால் நமது மனம் ஒன்றவேண்டும் என்பதற்காகவே மணி ஓசையை எழுப்புகிறார்கள். தீபாராதனையின்போது மணி ஓசை எழுவதால் நாம் ... Read More »

திருமண முகூர்த்தம்

தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் திருமணப் பேச்சு நடத்துகின்ற பொழுது, முதலில் ஜாதகத்தைக் கொடுத்து பொருந்துகின்றதா? என்று பார்க்க வேண்டும். நல்ல பொருத்தமாக இருந்தால் மணமகளுக்கு மணமகனைப் பிடித்திருக்கிறதா?, மணமகனுக்கு மணமகளைப் பிடித்திருக்கிறதா? என்றும் கேட்டு முடிவு செய்து அதன்பிறகு நிச்சயதார்த்தம் செய்ய முடிவெடுப்பர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறிக்கும் போது அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய ... Read More »

Scroll To Top