Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 30)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

கோயில்களில் திருமணம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது. ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர். மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு ... Read More »

கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். ... Read More »

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகிமை

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை எவர் ஜெபிக்கிறார்களோ அவர்கள நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்துகொள்கின்றனர். ‘ஓம்’ எனும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் (ஈசன்) அடக்கம். ‘ஓம்’ எனும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். தொடர்ந்து ஜெபித்து வருவதால், கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும். மன சாந்தி ஏற்படும். உலகத்தோடு ஒட்டி வாழலாம். வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ... Read More »

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் இதன் பொருள் யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.   Read More »

விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலைமீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம். விநாயகருக்கு வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் ... Read More »

கைகளில் கட்டப்படும் கயிறுகளுக்குரிய காலம் எவ்வளவு?

பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ... Read More »

நவக்கிரக வழிபாட்டு முறை

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா?  சூரியன் – 10 சுற்றுகள் சுக்கிரன் – 6 சுற்றுகள் சந்திரன் – 11 சுற்றுகள் சனி – 8 சுற்றுகள் செவ்வாய் – 9 சுற்றுகள் ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம் புதன் – 5, 12, ... Read More »

தினசரி கடைபிடிக்கப்படும் விரதங்கள்

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய நாள். சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் செய்யலாம். இதைச் சொன்னால் சூரிய நமஸ்காரம் செய்த பலன் உண்டு. திங்கட்கிழமை விரதம் சிவபெருமானுக்குரிய விரதம். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரம் சிறப்பான விரதமாகும். செவ்வாயக்கிழமை விரதம் அங்காரக விரதம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த விரதம் நல்ல பலனைத் தரும். புதன்கிழமை விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். இந்நாளில் ... Read More »

நவராத்திரியும் ஒன்பது நாளும்!

நவராத்திரியின் போது ஒன்பது நாள்களும் செய்யவேண்டியவை: ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்: • முதல் நாள் – பொட்டு • இரண்டாம் நாள் – கட்டம் • மூன்றாம் நாள் – மலர் • நான்காம் நாள் – படிக்கட்டு • ஐந்தாம் நாள் – பறவையினம் • ஆறாம் நாள் – தேவி நாமம் • ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர்களால் ஆன கோலம்) • எட்டாம் நாள் – பத்மம் (தாமரைக் கோலம்) • ஒன்பதாம் நாள் ... Read More »

தீயவற்றில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமா?

தீய பழக்கம், ‎தவறான தொடர்புகளில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.‬ இரவில் குளித்து முடித்து 10 மணிக்கு பத்ரகாளி படத்தின் முன் நல்லெண்ணெய் விளக்கேற்றித் தெற்கு முகமாக அமர்ந்து யார் தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமோ அவர் திருந்த வேண்டும் என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு கீழ்காணும் மந்திரத்தை 108 எண்ணிக்கை உள்ள கருமணி மாலையால் 15 சுற்று ஜெபிக்க வேண்டும். விளக்கின் முன்னால் பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தை வைத்துக்கொள்ளவும். ஜெபம் செய்து ... Read More »

Scroll To Top