Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 4)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

தவம் என்னும் இந்துக்களின் கலை

நம்மில் பலர் தவம் என்றால் முத்திக்காக அனுஸ்டிப்பது என்றும் அது ஒரு சன்னியாசியினால் மேற்கொள்ளப்படுவது என்றுமே புரிந்து வைத்துள்ளோம். தவம் என்பது ஒரு கலை. அதை சாதாரணமானவர்கள் அனுஸ்டிப்பது கூட சிறந்த பழக்கம். எனவே தவங்களில் சிறந்த தவம் பற்றி எடுத்து நோக்கலாம். தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை ‘தவம்’ என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ‘நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் ‘தவஷி’ (ஆண்) அல்லது ‘தவஷ்வினி’ ... Read More »

பூணூல் அணிவதன் நோக்கம்

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை வணங்கும் போது ஒருவன் அறிவிலும், வீரத்திலும் சிறந்தவனாக விளங்குகின்றான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை அங்கும் இங்கும்  சிதற விடாமல் காக்கின்றது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும். பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகின்றது. முதன் முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் ... Read More »

ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னர் செய்ய வேண்டியவை

ஆலயத்திற்குள் நுழையும் முன்னர் முதலில் எமது பாதத்தை கழுவ வேண்டும். பின்னர் கால், கைகளை கழுவிய பின் சில துளிகளை தலையில் தெளித்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும். பின்னர் வாயிற்காப்போர்களான துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்வதற்கு முன்னர் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும். அந்த படியை தாண்டும் போது, ‘நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை ... Read More »

வளம் பெற வைக்கும் முருகனின் விரதம்

முருகப்பெருமான் வைகாசி விசாகம் அன்று அவதாரம் செய்த தினம் ஆகும் . உயிர்களுக்கு நேரும் இன்னல்களை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாக தோன்றினார். விசாக நட்சத்திரத்தில் வரும் இந்த சிறப்பு நாளில் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும், அறுபடை வீடுகளிலும் விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும். இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம். புத்தர் அவதரித்ததும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என பவுத்தர் இதனைக் கொண்டாடுவர். இந்நன்னாளில் நம்மாழ்வார் அவதரித்தருளினார். தெற்கு திசையின் திக்பாலகரான யமதர்ம இராஜனுக்குரியது வைகாசி விசாகமே. ... Read More »

விபூதி எப்படி உருவாகியது?

விபூதி தோன்றிய கதை உங்களுக்குத் தெரியுமா? பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்குக் கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனைச் சுற்றிச் சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீரக் கனிகளைச் சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை ... Read More »

திருமகளான இலட்சுமி யாரை அழைத்து வருவார்!

பிறருக்கு உதவி செய்து வாழ்வதில் இன்பம் காணும் நல்லவர்கள் தாங்கள் வறுமையில் வாடினாலும் தன் இயல்பான பிறருக்கு உதவி செய்யும் பண்பிலிருந்து விலக மாட்டார்கள். இவர்களிடம் உறவினர்களையும், செல்வச்செழிப்பையும், நல்ல அழகையும் திருமகளாகிய இலட்சுமி வரும்போது அவர்களது வீட்டுக்குள் அழைத்து வருவாள். அவள் நம்மை விட்டு நீங்கினால் மேற் கூறியவையாவும் இலட்சுமியுடன் சேர்ந்து நீங்கி விடும். மரம் தன்னை வெட்டுபவர்களுக்கும் நிழல் தந்து வெயிலால் வாடாமல் நம்மை காக்கின்றது. அதுபோல அறிவுடையவர்கள் தாம் வாழும் காலம் வரைக்கும் தமக்கு தீமை செய்தாலும் தம்மை நாடி வருபவர்களுக்கு தம்மால் ... Read More »

விரதம் இருப்பதென்பது உடலிற்கு அவசியமானதொன்று

அன்னத்தை அடக்கியவன் கண், காது, மூக்கு, வாய், உடல், ஐந்தையும் அடக்குவான் என்பார்கள். இவைகளை கட்டுப்படுத்தும்போது நம் மனம் ஞானத்தை தேடி செல்கிறது என்பதை அத்தனை தத்துவ ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். பசியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணில் பட்டதையெல்லாம் சாப்பிடுபவர்கள், பின்னர் பல்வேறு உபாதைகளுக்கு பிறகு உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பது தற்காலத்தில் வழக்கமாகவுள்ளது. நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது வெறுமையாக இருக்க வேண்டும். இதனையொட்டித்தான் அமாவாசை, பெளர்ணமி என விரதங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகின்றது. ஜீரண உறுப்புகள் சீராகின்றது என சித்த ... Read More »

நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா

யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா, இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேரிழுத்தனர். கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமான நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் தொடர்ந்தும், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர். 14ஆம் நாளான இன்று காலை 5 மணிக்கு ... Read More »

விபூதி எப்படி உருவாகியது?

விபூதி தோன்றிய கதை உங்களுக்குத் தெரியுமா? பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்குக் கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனைச் சுற்றிச் சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீரக் கனிகளைச் சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை ... Read More »

சடங்குகள் அவசியம்தானா?

நெல்லிலிருக்கும் அரிசிதான் அதை முளைக்கச் செய்வதற்கு அவசியமானதென்பதும் அதன் மேலிருக்கும் உமி பயனற்றதென்பதும் சாதாராணமான கருத்து. இருப்பினும் உமி நீங்கிய அந்த அரிசியை விதைத்தால் அது முளைத்துப் பயிராகி நெல் விளைவிப்பதில்லை. நெல் விளைய வேண்டுமானால் உமியுடன் கூடிய தானியத்தை அப்படியே விதைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு அரிசி வேண்டும் போது நெல்லிலிருந்து உமியைப் பிரித்து நீக்க வேண்டும். அது போல ஒரு தர்மம் நிலைத்து வளர்வதற்குக் கிரியைகளும் சடங்குகளும் அவசியம். முளைக்கும் வித்தாகிய உண்மையை அவை தம்முள் புதைத்து வைத்திருக்கின்றன. ஆதலால் ஒவ்வொரு மனிதனும் ... Read More »

Scroll To Top