Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 54)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

கோவில்களும் கிரக ரகசியங்களும்

நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக பலன்களை நமக்குத் தரவல்லவை. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர். இவை அனைத்தும் மகத்தான மந்திர சக்தி பெற்றவையாகும். உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும். இத்தகைய கிரக சக்தி கொடுக்கப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் ... Read More »

யோகம் தரும் நவக்கிரகங்கள்

1. சூரியன் – ஆரோக்கியம் 2. சந்திரன் – புகழ் 3. செவ்வாய் – செல்வச் செழிப்பு 4. புதன் – அறிவு வளர்ச்சி 5. வியாழன் – மதிப்பு 6. சுக்கிரன் – வசீகரத் தன்மை 7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை 8. ராகு – தைரியம் 9. கேது – பாரம்பரியப் பெருமை – See more at: http://athavannews.com/?p=257098#sthash.JAvqXrdB.dpuf Read More »

கோயில்களில் திருமணம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது. ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர். மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு ... Read More »

முக்கிய விரதங்களை மேற்கொள்ள முடியாமல் போனால் என்ன பரிகாரம் செய்யலாம்?

வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பணிக்குச் சென்று விடுவதால் முக்கிய விரதங்கங்களை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போகிறது. இதுபோன்ற நேரத்தில் அந்த விரதத்தின் பலனை அடைய என்ன பரிகாரம் செய்யலாம்? பொதுவாக விரதங்கள் என்பது திதி, நட்சத்திரம், நாள் அடிப்படையில்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக சங்கடஹர சதுர்த்தி என்றால் சதுர்த்தி திதி இருக்கும் வரைக்கும் மட்டுமே கொண்டாடப்படும். கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள், சஷ்டி திதி இருக்கும் காலத்தில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கோகுல அஷ்டமி என்றால் அஷ்டமி திதி இருக்கும் ... Read More »

விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் என்ன பலன் கிடைக்கிறது

சுலபன் என்ற மன்னன் எருதாகவும், அவனது மனைவி சுபத்திரை மாடு மேய்க்கும் பெண்ணாகவும், மன்னனைக் காணவந்த அந்தணர் கழுதையாகவும் மாறும் வகையில் சாபம் பெற்றனர். இவர்கள் மூவரும் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது. அன்று பெரும் காற்றும் மழையும் வீசியது. சுபத்திரை தனது மாடுகளுக்காக அருகம்புல் அறுத்து கட்டுகட்டி வைத்திருந்தாள். மழை அதிகரிக்கவே அங்கே உள்ள ஒரு விநாயகர் கோயிலில் அந்தப் பெண் ஒதுங்கினாள். அதே கோயிலில் மாடும் ஒதுங்கியது. சுபத்திரை அறுத்து வைத்திருந்த அருகம்புல்லைத் தின்றது. அதன் வாயிலிருந்து சில புற்கள் காற்றில் சென்று ... Read More »

வீட்டில் வழிபாட்டிற்காக வைத்த மஞ்சள்பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபடுவது அவசியம். விநாயகர் வழிபாட்டால் தொடங்கிய செயல் தடையின்றி இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். பூஜை முடிந்த மூன்றாம் நாள் வெற்றிலை, பாக்கு சேர்த்து மஞ்சள்பிள்ளையாரையும் ஓடும் ஆற்றிலோ, குளத்திலோ கரைத்து விட வேண்டும் என்பது நியதி. Read More »

ஏன் கை வைத்து வணங்க வேண்டும்

கை வைத்து வணங்குதல் என்ற முறை மாசாணியம்மன் கோவிலில் உள்ளது. கை வைத்து வணங்குதல் என்பது அம்மன் கோயிலின் பின்புறமாக சுவற்றில் இரு கைகளையும் விலக்கி வைத்து கண்களை மூடிக்கொண்டு, தம் மனதில் ஏதாவது ஒரு காரியத்தை நினைத்து மாசாணியம்மனை வணங்குதல் ஆகும். இரண்டு கைகளும் தாமாக இணைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இவ்வழிபாடு நடக்கிறது. எனவே உறுதியான நம்பிக்கையுடனும் பக்தியுடனும் மனதில் ஏதாவது ஒரு விடயம் தொடர்வில் நினைத்துக்கொண்டு வணங்கினால் நிச்சயம் அந்த ஆசை நிறைவேறும்.   Read More »

சனீஸ்வர தீபம் எதற்காக

தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து பரிகாரம் தேடுவதற்காக பலரும் பல வழிகளை எதிர்பார்க்கின்றனர். முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர். இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் – நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி ... Read More »

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?

பல காரணங்களால் வீடுகளில் துர்சக்திகள் புகுந்துவிடுகின்றன. 1. தெய்வக்குற்றம் (கடவுளுக்கு நாம் செய்யும் அபவாதம்) 2. பிதிர் குற்றம் (பிதிர்களுக்கு நாம் செய்யும் அபவாதம்) 3. செய்வினை சூனியம் கோவில்களுக்கு போகும் பக்தர்கள் தெய்வநிந்தனை செய்வதாலும், ஆலயங்களுக்குள் செய்யத்தகாத வியங்களைச் செய்வதாலும் தெய்வக்குற்றம் ஆகிவிடுகிறது. இறந்த ஆத்மாக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் உதாசீனம் செய்யும் போது அது பிதிர்க்குற்றம் ஆகிவிடுகிறது. தெய்வக்குற்றம், பிதிர்க்குற்றம் ஏற்படும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் தாமாக இலகுவில் புகுந்துவிடும். அதைவிட செய்வினை சூனியம் மூலமாக தீயசக்திகளை பிறர் ஏவிவிட வைக்கின்றனர். ... Read More »

வழிகாட்டிக்கு வந்தனம்

எப்போதாவது ஏதாவது அதிசயம் நடந்தால், அதை, ‘அபூர்வ நிகழ்வு’ என்று சொல்வோம். அத்தகைய அபூர்வ நிகழ்வு, இந்த தை அமாவாசையன்று, நம்மை நோக்கி வருகிறது. அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களை, ‘அமா சோமவாரம்’ என்பர். அமாவாசைகளில் மிகவும் உயர்வானது, ஆடி மற்றும் தை அமாவாசை! ஆடி அமாவாசையன்று நம்மைக் காண பூலோகம் வருகின்றனர், நம் முன்னோர்; தை அமாவாசையன்று, விடை பெற்று, பிதுர்லோகம் செல்கின்றனர் என்பது ஐதீகம். இந்த ஆண்டு, தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. இது, நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க, மிகச்சிறந்த ... Read More »

Scroll To Top