Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / ஆன்மீகம் (page 62)

பதிவு வகை: ஆன்மீகம்

Feed Subscription

பெரிய புராணத்தில் சுந்தரரும் தோழமையும்!

இளமைக்கே உரிய பண்புகள் பொருந்திய இளையரே சுந்தரரே பாட்டுடைத்தலைவனாக கொண்டது பெரிய புராணம், இது ஒரு பக்தி நூல்- அன்பு நூல் அன்பையே இறைவனாகக் கண்டார்கள் இந்துக்கள், அன்பின் நிறையுருவமாக இறைவனை சிவமாக கண்டார்கள் சைவர்கள், அன்பும் சிவமும் ஒன்றே – அன்பே சிவம் – என்கிறார் திருமூலர், அந்த அன்பின் நிறைவுருவமாக இறைவனை அன்பால் ஆராதித்த 63 நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் ஓர் அன்பு காவியம் தான் பெரியபுராணம், இதில் கூறும் 63 பேரும் அன்பு வழி நின்ற சிவனடியார்கள், அந்த ... Read More »

வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா?

 வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது.  1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது. வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் ... Read More »

ஈழத்து கவிஞனால் நயினை நாகபூசணி அம்மனுக்கு ஒலிப்பேழை வெளியீடு!

நயினாதீவு நாகபூசணி அம்மனுக்காக நயினைஅன்னை மகன் என முகப்புத்தகம் வாயிலாக அழைக்கப்படும் திரு- மகாதேவன் நவரூபன் அவர்களின் கவிவரிகளில், உருவாகி கடந்த  2015 ம் ஆண்டு தைப்பூச தினத்தன்று நயினை ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்கில் வெளியான “அலைபாடும் ஆனந்த கீதங்கள்” 12 பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வுகளின் காணொளிப் பதிவினை கீழே உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம். அத்துடன் ஆலய தர்மகத்தாவினால் பாராட்டி அவருக்கு  சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Read More »

“கோபுர தரிசனம் கோடிபுண்ணியம்”

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான இராஐ கோபுரத்திருப்பணி ஆரம்பித்தகாலம் முதல் இன்று வரை தங்களது இணையத்தளம் வாயிலாக முழுமையான ஒத்தாசை நல்கி வருகின்றீர்கள் மிக்க மகிழ்ச்சிகளும் நன்றியும்.  தயவு செய்து வழமை போல உங்கள் இணையத்தளத்தின் செய்தி பிரிவில் எங்கள் தகவலினை பதிவு செய்து ஒத்தாசை நல்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்க்கின்றோம்.   திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம். தெளிவாகபார்வையிடுவதற்கு http://onlinethiruvenkadumandaitivu.blogspot.fr/2015/03/blog-post_20.html இங்ஙனம். ஆலய தர்மகர்த்தாக்கள் பொ.வி.திருநாவுக்கரசு இரத்தினசபாபதி யோகநாதன்  (இந்திரன்) திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு ... Read More »

அனலைதீவு ஸ்ரீ கௌரி அம்பாள் ஆலய தலவரலாறு பற்றிய பகுப்பாய்வு!

 அனலைதீவு, துறைமுகம் அருள்மிகு கௌரி அம்பாள் ஆலய தலவரலாறு கண்ணகி அம்மன் வழிபாடு ஒரு  காலக்கண்ணோட்டம்- இலங்கைத்  திருநாட்டினிலே, தமிழர்தம் சீரிய பண்பாட்டின்  தலைநகராம் யாழ்ப்பாணம் சிவநெறியில் சிறந்து விளங்குகின்றது. இதில் அனலைதீவு, புண்ணிய  தனிச் சிவச்சேத்திரமாக போற்றப்படுகின்றது. இங்கு பன்னெடும்காலமாக சைவத் தமிழர்களே(தற்போது அதிகமாய்)  வாழ்ந்துவருகின்றனர். இவர்களது வழிபாட்டுமுறை இயற்கையைப் போற்றியும், எல்லாம் வல்ல சக்தியை பெண்தெய்வமாக உருவகித்து வழிபாடியற்றும் மரபினையும்  காணலாம். அந்தவைகையில் அனலைதீவின் துறைமுக வாயிலில் (ஐயனார் துறை என்பது அதன் பெயராவுள்ளது: இலங்கை படவரைகலை திணைக்கள பதிவுகளின்படி)காலம் காலமாய் ... Read More »

சனி பிரதோஷ விரதம்

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. இத்தகைய ... Read More »

சிதம்பர தரிசனம்

 இன்றைக்கு சுமர் 350 ஆண்டு களுக்கு முன் தென் தமிழ் நாட்டில் தூத்துக்குடி (தற்போது வ.உ.சி) மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தார்குமரகுருபரர். அவ்வூர் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் பெருமை யுடையது. ஐந்து வயது வரை  வாய் பேசாமல் இருந்த குமரகுருபரர் செந்தில் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார். பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவ ஞான உபதேசம் பெற வேண்டுமென்று தருமை ஆதீனத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடம் துறவுநிலை ... Read More »

சிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்

சமுதாய சீர்திருத்தவாதிகள் தனி மனிதர்களாக தம்மை வெளிப் படுத்திக் கொள்ளாமல் ஒரு சக்தியாகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவ்வகையில் 12 ம் நூற்றாண்டில் கன்னட இலக்கிய மற்றும் பக்தி உலகில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்த ’வசனகாரர்கள் ’ என்ற அடை மொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து ’வசனங்கள் ’மூலம் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர்.வசனங்களைப் படைத்தவர்கள் ‘வசனகாரர்கள்’ என அழைக்கப் படுகின்றனர். சுத்த சைவம், பூர்வ சைவம் , மார்க்க சைவம் ,ஆதி சைவம் , வீர சைவம் என சைவம் பல வகைப் ... Read More »

அருளாளர் அருணகிரிநாதர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்

அருளாளர் அருணகிரிநாதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? கௌமாரம் சமயத்தின் முதன்மை ஆச்சாரியர்களில் ஒருவராக விளங்கியவர் அருணகிரிநாதர். கௌமாரம் முருகனை முழுமுதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமரா, கந்தா, சண்முகா அல்லது கார்த்திகேயனைப் பேரின்ப வடிவமாக வழிப்படும் சமயக் கோட்பாட்டை உடையது. திருப்புகழ் மூலம் முருகப் பெருமானின் பெருமை, அலங்காரம், அருள் ஆகியவற்றைப் பாடி கந்தனின் ஆசி பெற்றவர். தனித்துவத்திற்குப்  பிரசித்திப் பெற்ற அருணகிரிநாதர் அருளிய பாடல்கள் மனங்களில் தெய்வச் சுடர் பரப்பியது மட்டுமல்லாமல், அறிவுக் கூர்மையைத் தீட்டும் வகையிலும் அமைந்தன. அருணகிரிநாதர் பற்றி ... Read More »

திருவண்ணாமலை – இந்துக்களின் புனித திருத்தலம்

திருவண்ணாமலையில் உள்ள சிவன் பக்தர்களால் அண்ணாமலையார் என்றும் அருணாச்சலேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயம்தான் உலகிலேயே பிரத்தியேகமாக சிவப்பெருமானை வழிப்படுவதற்காக கட்டப்பட்ட மிகப் பெரிய ஆலயமாக நம்பப்படுகிறது. இதுவே தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். அருணாச்சலேஸ்வரர் ஆலயம் அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 217 அடி உயரமான இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் தமிழகத்திலேயே உயரமான கோபுரமாக திகழ்கிறது. முருகக் கடவுள் இந்த கோவிலில் தரிசனம் தந்ததாக சொல்கின்றனர். சம்பந்தாண்டான் என்னும் புலவன் அருணகிரியாரிடம் முருகனை நேரில் ... Read More »

Scroll To Top