Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள்

பதிவு வகை: கட்டுரைகள்

Feed Subscription

பகல் புத்தகம்

பகலொரு புத்தகம்போல் விரிந்தது என்முன்பு! பகலினது பக்கத்துக்;கு ஒளியூட்டும் வெயில் நின்று! பகலினது அடுத்த அடுத்த பக்கத்தைப் புரட்டிற்றுக் காற்று, வரலாற்று வரிகளினைப் படியெடுத்துப் போயிற்று… நின்று பார்த்த முகிலிலொன்று! பக்கமொன்றில் இருந்த பழத்தோட்டம் படம் பார்த்து எக்கச்சக்கக் கிளிகள் குயில்கள் வந்தும் கூடிற்று! இன்றைய பக்கத்தில் எழுதப்பட் டிருந்தவற்றை தேவதைகள் வாசித்து திசைகளுக்குச் சொல்லினவாம்! இன்னுமின்னும் எழுதாத பக்கம் பல உள்ளதையும் அவற்றை எழுதி நிரப்பவல்ல ஆற்றலுள்ள கவிஞர் தமையும் கண்டெங்கள் தலைமுறையின் அடுத்த தொடர்ச்சியதும்; எதிர்கால வெற்றிக்காய் உத்திகளும்; தேடி அவையவற்றை ... Read More »

பெரியோய்

நீங்கள் பெருஞ்செல்வம் ஏதுமே சேர்க்கவில்லை. நீங்கள் எதும்சொத்துத் தேடித் தொகுத்ததில்லை. நீங்கள் பெரும்வசதி வாய்ப்புகளைப் பெற்றதில்லை. நீங்கள் பெருஞ்சுகங்கள் கண்டு மகிழ்ந்ததில்லை. நீங்கள் பெருங்கல்வி கற்றுச் சிறந்ததில்லை. நீங்கள் பெரும்பதவி பெற்றும் உயர்ந்ததில்லை. “நான்சொந்தக் காலில் நிற்பேன்” எனுந்துணிவில், “நான்நினைத்த வாழ்வை நான்வாழ்வேன்” எனும்நிமிர்வில், “என்னிருப்பை யாரும் – இருஎழும்பு – எனமேய்க்க என்சுதந்திரம் தன்னை இழக்கேன்” எனும் இயல்பில், யாருக்கும்அஞ் சாமல், யாரிடமுங்கை ஏந்தாமல், நேர்மையை நெஞ்சுக்கு நீதியை மறக்காமல், பேராசை கொள்ளாமல், காசாசை இல்லாhமல், ஈசனை மறவாமல், மனச்சாட்சிக்கு விரோதமாய் போகாமல், ... Read More »

மூளை விற்றவர்களின் கதை

நான் சிறுவனாக இருந்தபோது அயலூரில் ஒரு மூளைதின்னி இருந்தானென்று அம்மா சொல்வாள். வேகும் பிணத்தின்முன் சுடுகாட்டில் காத்திருப்பானாம். இப்போ மூளை விற்ற மனிதர்களைக் கண்டுகொண்டேன். பறக்கும்தட்டுக் கிரகவாசிகளுக்கு நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள் செம்மறியாட்டினதும் குரங்கினதும் காண்டாமிருகத்தினதும் மூளைகளை மாட்டிக் கொள்கிறார்கள் சித்தம் கலங்கிப் பேய்களாகிறார்கள் உடையுண்டு நிறமுண்டு கையுண்டு நகமுண்டு காலில்லை பேயென்று என் குழந்தை சொல்கிறது நான் சொல்லிக்கொள்கிறேன் அவர்கள் மூளை கழற்றியவர்கள் என்று நாங்களும் யோசிக்கலாம் எங்கள் மூளைகளை நல்ல விலைக்கு விற்பதுபற்றி…! ஆக்கம் – கவிஞர் துவாரகன் Read More »

கிழித்துப்போடு

மண்டைக்குள் குறவணன் புழு நரம்புகளுள் கொழுக்கிப்புழு வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம் உடலெங்கும் ஊனம் இன்னும் பேசிப்பேசியே வாசனை பூசு கவச குண்டலம் பந்தியில் பறிபோனது காண்டீபம் திருவிழாவில் தொலைந்து போனது சாரதியும் தேரோடு செத்துப்போனான் இந்த அழகிய உலகில் அழுகிய மனிதர்களோடு இன்னமும் வாழ்கிறேன் என்று உன் வரலாற்றில் எழுது. இல்லையெனில் இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு! ஆக்கம் – கவிஞர் துவாரகன் Read More »

ஒளி

ஒளி ஞாயிற்றின் தூய சுடர் இருள் விரட்டி அறிவேற்றும் குறி விளக்கேந்திய பெருமாட்டியும் இருள்விரட்டி உயிர்த்திரி தூண்டினாள். அப்போதும்கூட விளக்குகள் விளக்குகளாகவே ஒளிர்ந்தன. கடவுளின் தூண்டாமணி விளக்கு களவுபோனதிலிருந்து விளக்குகளுக்கு இருள் பற்றிய பயம் தொடங்கிவிட்டது. விளக்கைச் சுற்றிய ஈசல்கள் மழையில் செட்டைகழற்றிச் செத்துக்கிடந்த நேரம் பார்த்து கொல்லைப்புறத்தால் கடவுள் வந்தார். கையில் அணைந்துபோன விளக்கு. ஒரு மின்மினிப் பூச்சியை அடையாளமாகப் பற்றிப் பிடித்திருந்தார். ஆக்கம் – கவிஞர் துவாரகன் Read More »

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது

உயிரைக் கொண்டோடிய கணத்தில் தாயைப் பறிகொடுத்தாள். சோதரி கைபிடித்து மீண்டு வந்தாள். வாரப்படாத தலை கறைபடிந்த பற்கள் உயிர்ப்பற்ற சிரிப்பு குமரியானாலும் குறுகி நடந்தாள் தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள் சில அப்பாக்களைப் போலவே ஒருநாள் புதுத்துணைவியோடு பெற்றவன் வந்தான். வாடிய பூக்களிடையே மீண்டும் அவள் காணாமற்போயிருந்தாள். அவளுக்கென்று எதுவுமில்லாதபோது ஒருநாள் அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள். அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது. ஆக்கம் – கவிஞர் துவாரகன் Read More »

என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி

நகரச் சந்துகளில் கூவிக்கூவி விற்ற கடலை வியாபாரி ஒருநாள் என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான் மழை பெய்து ஓய்ந்திருந்த மாலைப்பொழுதில் சிறுவர்கள் மாபிள் அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் கோவிலில் கடவுளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் மூச்சிலும் சிறுவர்களின் பேச்சிலும் ஊர் உயிர்த்திருந்தபோது ஊரின் ஒதுக்குப் புறத்தால் வந்துபோனான் கடலை வியாபாரி கடவுளைத் தூக்கி வீதியுலாச் செல்ல இளைஞர்களைத் தேடியபோது அவர்கள் யாருக்கும் தெரியாமல் கடலை கொறித்துக் கொண்டிருந்தனர். அழகான கிராமத்தின் குச்சொழுங்கைகள் எல்லாம் அசிங்கமாயின பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால். ஆக்கம் – ... Read More »

சாம்பற்பூச்சிகளென

சிரி அணை சிதை ஊரைக்கூட்டு உனதென்று சொல் இரத்த நாளம் மூளைத்திசு எங்கும் மூட்டைப் பூச்சியாய் களிம்பாய் ஒட்டு. துலா மிதித்து வந்தாரை வாழவைத்து வளர்ந்த சாதி வாய் கிழியச் சொல். சுட்டுவிரல் நாற்காலி உச்சக்குரலோடு சேர்ந்து நீயும் விழுங்கு சாம்பற்பூச்சிகளென! ஆக்கம் – கவிஞர் துவாரகன் Read More »

உக்கிப்போன சொற்கள்

நாற்றத்தைத் தூவும் சொற்களைத் தூக்கி எறி பழைய ஓலைப்பாயைப்போல் போகும் இடமெல்லாம் நீதானே அந்தச் சொற்களைத் தூக்கிச் செல்கிறாய் வெள்ளையும் மஞ்சளுமாய் உளுத்துக் கொட்டிக் கொண்டிருக்கும் காய்ந்துபோன மாமரக் கொப்பென சொற்கள் வழியெங்கும் சிதறுகின்றன. வீட்டு யன்னல்களை இறுகப் பூட்டிக்கொண்டு ஒரு கணம் வீட்டையும் நாற்றத்தையும்கூட குற்றம் சொல்கிறாய். அந்தச் சொற்களைத் தூக்கி எறி. விறகுக்கட்டின் கீழிருந்து செத்துப்போன ஒரு எலியைத் தூக்கி எறிவதேபோல்! ஆக்கம்- கவிஞர் துவாரகன் Read More »

கீறல் விழுந்த ஒலித்தட்டு

மீளவும் அதே வார்த்தைகள் மீளவும் அதே குரல்கள் மனம் லயிக்காத இசை. ஆனாலும் ‘கேள்’ என்கிறது. காது மந்தமானோரும் மூளை மடிப்புக் குறைந்தோரும் அந்தக் கீறல் விழுந்த ஒலியே தங்கள் வீட்டுத் துளசிச் செடி என்றனர். பிரதான வீதியின் இரைச்சல்போல், சைக்கிள்டைனமோ சுழற்றிப் பாட்டுக்கேட்கும் அவசரம் போல் ஒழுங்கின்றி ஒலிக்கிறது கீறல் விழுந்த ஒலித்தட்டு. கழற்றி எடுத்து மாற்றுவார் யாருமில்லை. கீறல் விழுந்த ஒலித்தட்டில் கதை நேரம் “நீங்கள் குரலும் கூடும் இல்லாத ஊமைப்பறவைகள்” காகங்களைப் பார்த்துக் கூறின; புறாக்களும் குயில்களும். ஆக்கம் – ... Read More »

Scroll To Top