Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / கவிதை முற்றம் (page 4)

பதிவு வகை: கவிதை முற்றம்

Feed Subscription

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான். தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’ எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய் வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை வெளித்ததென் றெண்ணி துன்பம், துயர்,பயம் தனையே நித்தம் அறுத்தும் எடுப்பதால்… அன்று விதைத்தோரில் சாபம் இடுகிறோம். நல்ல விதைகளை நமது முன்னோர் அன்று நட்டி ருப்பின்இன் றிடர்களே காய்க்குமா? நல் வினைகளை முன்னோர் புரிந்திருந் தால்… நாம் இன்றுதீ வினையைச் சுமப்பமா? இல்லை… நம் முன்னோர் செய்த பழிபாவம் எம்மைச் சூழ்ந்தது, இன்றும் வதைக்குது! தொல்லை ... Read More »

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து அரசாளத் தோன்றிய பகலாய் ஒளிர்ந்தது பெருவாழ்வு! சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன பேயிருளில், மினுங்கித் திரிகின்ற மின்மினிப் பூச்சிகளின் ஒளியாய்… கண்கூச வைக்கிறது காண்…இன்றை வாழ்வு! சூரியன் தொலைந்துபோனான்! யாராரோ மின்மினிகள் சூழ்ந்துவந்து “இருள்விரட்டி மீட்போம் பகலை” யெனக் கைநீட்டி தம்ஒளியின் பின்னால் வருகவென்று அழைத்துளன. சூரியனின் வண்ணப் பகல்நினைவுக் கேங்கி…அச் சூரியனின் இன்மையினை எண்ணி, “மின்மினிதான் சூரியனோ” என்று சூரியனை அறியாத சேய்கேட்க என்சொல்வ தென்று இளைத்துவாடி மின்மினிகள் பின்சென்றெம் வெளியில் கயிறுதனைப் பாம்பென்றும்… பாம்பைக் கயிறென்றும்…பார்த்துக் கதிகலங்கிச் ... Read More »

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம். கிளைத்திட்ட ஆறுகள் சேர்ந்து கடலாயிற்று. இதயங்கள் குமுறின எரிமலைக ளாக. குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல. கேள்விகள் வெட்டின மின்னற் தெறிப்புகளாய். ஏது முடிவு?, பதில் எதுவரும்? என்றறியாது எங்களது நெஞ்சின் அவசங் களையெல்லாம் கொட்டினோம்… வேறு கொட்டும் இடங்களின்றி! அவர்கள் குப்பைக் கூடைகள் தானோ? அவர்கள் பணத்தை கறக்கும்உண்டியல் தாமோ? அவர்கள் குறைகளைக் கேட்கின்ற பெட்டிகளோ? அவர்கள் பாவ மன்னிப்புக் கூண்டுகளோ? அவர்கள் வெறுஞ்சட்டம் பேசுகிற நூல்வகையோ? அவர்கள்அறத் தீர்ப்புரைக்கும் நீதியின் காவலரோ? ஏதும் அறியோம்: இந்த ... Read More »

பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது. எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது. கும்மிருட்டின் கொடுமை குறையுது. கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது. விம்மி அழுத துயரக் கனவுகள் வெடித்துக் கலையுது. கூசும் விழிகளை செம்மைக் கீற்றொளிக் கைகளால் சூரியன் திறக்கிறான்…புதுத் ‘தை’ மீண்டும் பூத்தது. திரண்ட கட்டியாய் அடர்ந்த இடர்வலி தீர்ந்து… யாவரும் சிறந்திட வில்லைதான். வரங்கள் எல்லாம் வசப்பட வில்லைகாண். மனங்கள் முழுதும் மகிழவும் இல்லையாம். திரண்டு சிறிது சிறிதாய் அமைதி…தோள் சேர..,துயர்தந்த கைகள்சோர்ந் தோய்ந்திட, அருணனின் சுடர் வாடும் இலைகளில் ... Read More »

சென்று வா கோப்பாய் செந்தூரா! உன் கனவு நனவாகட்டும்!!!!

ரயில் வருகிறது என்றால், உனக்கு மரண பயம் வரும் என்று உன் அக்கா என்னிடம் கூறினாரே! ரயிலுக்கு பயந்த நீ எவ்வாறு துணிவு கொண்டாய் தண்டவாளத்தில் தலை வைத்து சாவதற்கு அதற்குள் நீ தண்டவாளத்தில் தலை வைத்து சாக முற்பட்தை அவதானித்த ரயில்வே ஊழியர் பிடித்து இழுத்து வந்த போது உன் மனம் மாறியிருக்க வேண்டும் ஆனால் மீண்டும் நீ எங்கோ ஒளித்திருந்து ரயில் கிட்ட வரும் போது இரண்டாவது தடவை ஓடிச்சென்று ரயிலில் மோதி உயிர் விட எவ்வாறு மனது வந்தது உனக்கு!!!!! ... Read More »

அனலைதீவு ஐயனாா் தோ்த்திருவிழா!

அனலை சூழ்ந்துள்ள அலை பொங்கும் ஆழியாம் புனலில் மிதந்து வந்த புண்ணியனே!– கனலை கையிலே ஏந்தியசெங் கருத்தாவின் கைபிறந்த ஐயனே இன்னருளைத் தா. கூழா வடியுறையும் குகனுக்குச் சோதரனே கேளா திருக்குமோ நம்ஓலம்?– வாளா திருத்தல் முறையோ திடா்வந்து சூழுங்கால் துரத்தல் உன்கடனே காண். நாட்டுக்கு நல்லாட்சி நல்கிடுக; நம்முடைய வீட்டுக்கு வீடு வெற்றியளி!– காட்டுக்குள் புலியேறி வந்த புனிதா புகழுடையாய் கலிதீரக் காத்தருள வா. Va Vadivalakaiyan Read More »

மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது!

மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது! வாக்காளனே! உன் வாக்குகளுக்கு விலை கூறி வாடிக்கையாளர்கள் வருவார்கள்! வசமிழந்து விடாதே! -நீ வாக்குகளுக்காய் வாங்கும் பணம் உன் மனசாட்சிக்கும் சேர்த்துதான்! உன் மனசாட்சிக்கு விலை வைக்கும் அரசியல்வாதிகள் நாளை உன்னையே விற்றுவிடுவார்கள்! – நீவாக்களிக்கும்போது உன் ஆள்காட்டி விரலில் இடும் மையால்தான் நாளை வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி கையொப்பம் இடுகிறாய்! மனசாட்சி உன்னோடே இருக்கட்டும்! மக்களின் ஆட்சி நன்றாய் மலர்திட நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது ,ஈழ அரசியலில் இவர்களை தவிர வேறு மாற்று கிடையாது, ... Read More »

தேர்தல் கவிதை – 01 ஒரு நள்ளிரவிற்குப் பின்

தேர்தல் கவிதை – 01 ஒரு நள்ளிரவிற்குப் பின் ————————————————————- வெற்றிலை கொப்பளித்து துர்நாற்றம் வீசும் எச்சில் வாய்களோடு – சிலர் இனிச் சிலகாலம் எங்கள் காலடிகளைச் சுற்றிவருவார்கள் என் அக்காளையும் அண்ணன்களையும் புனிதர்கள் என்று புகழ்வார்கள் கல்லறைகளை கடவுளர்களின் கோயில்களாக்குவதாய் கதைவிடுவார்கள் இருக்கிறதை வைத்துக்கொண்டு இல்லாததைப் புடுங்குவோம் என்பார்கள் பல்லுக்காட்டி சொகுசு வாகனம் வாங்கமாட்டோமென்பார்கள் மத்தியில் அரசோடு ஒட்டு-உறவில்லை என்பார்கள் பின் எங்கள் விடுதலைக்காய் – இரகசிய ஒப்பந்தங்கள் பல செய்ததாய் பிதற்றுவார்கள் எங்கள் வீட்டு மதில்களில் பல்லை இளிப்பார்கள் தாங்களே எங்கள் ... Read More »

வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை, மரபுகள்.

  வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு – தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது – எங்கள் கற்புக்கரசி கண்ணகிக்கு கோயிலுங் கண்டது. நந்திக்கடலோரத்தில் தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற தனையனிடம் – தலைகடிக்கிறது ஓர்தடவை பார்மகனே என்றாளாம். பார்த்தவன்.. பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம். தலையெல்லாம் ஆயிரங் கண்கள். அதனால்த்தானே நாம்…. கண்கள் கொண்ட மண்பானையில் கற்புரம் ஏற்றுகிறோம் – எம் சீமாட்டி திருவருளால் திருக்கோவிலும் அமைத்துள்ளோம். ஆரம்பத்தில்… மடாலயமிது – ... Read More »

டெங்கு ஒழிப்போம் வாரீர்!

உயிர்கொல்லி நோயதுவாம் டெங்கு–அதை ஒழிப்பதிலே உனக்கிருக்கு பங்கு சுற்றுப் புறந்தன்னை சுத்தமாக்க மறந்தாயேல் நீபலநாள் சிறையினிலே தங்கு–அது சட்டத்தில் இருக்கிறது இங்கு ரயர்சிரட்டை தகரடப்பா பேணி–அவை இல்லாமல் சுற்றாடல் பேணி வாரத்தில் ஒருதடவை வளவுகளை கூட்டிவிடு; சுத்தமாக இருக்குமுந்தன் காணி–அது சமுதாய வளர்ச்சிக்கோர் ஏணி நுளம்புவரும் நாள்,இடங்கள் கண்டு–நீ மிகுதியாக எச்சரிக்கை கொண்டு நுளம்புவலைக் குள்ளிருந்து நித்திரைநீ செய்துவந்தால் உனக்கேது இந்தவகைக் காய்ச்சல்–பின்னர் இருக்காது ஆஸ்பத்திரி மாய்ச்சல் டெங்குதரும் நுளம்புகளின் முட்டை–அவை பெருகுமிடம் சிறியகுளங் குட்டை முட்டைகளைத் தின்னுகின்ற மீனினங்கள் வளர்த்துவிடில் டெங்குகொசு முட்டையேறுங் ... Read More »

Scroll To Top