Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / கவிதை முற்றம் (page 5)

பதிவு வகை: கவிதை முற்றம்

Feed Subscription

மேதினப் பேரணி!

தொழிலாளா் வா்க்கத்தை துாக்கி நிறுத்திய நாள். பேரணியிற் கலந்துகொள்ள பொழுது புலா்வதன்முன் புறப்பட்டுச் சென்றிருந்தான் தொழிலாளி. பேரணியில்…. முன்னுக்கு கொடிபிடித்து மும்மரமாய் சென்றுகொண்டான் முதலாளி. ஊா்வலம் நிறைவடைந்து ஊா்க்கோடி மத்தியிலே மைதானப் பெருவெளியில் கூட்டம் தொடங்கியது. அட! அங்கும் முன்வாிசை மேடையிலே அவனுடைய கைவாிசை முழங்கித் தள்ளுகிறான் முதலாளி. மூலையிலே முனகலுடன் மேதினத்தின் வேரான தொழிலாளி வழமையைப் போல் வோ்க்க விறுவிறுக்க விறைத்தபடி நின்றுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். ஆக்கம்- காரை கவி- வடிவழகையன் Read More »

பெண்ணழகு!

தை அழகு மாசி அழகு! பங்குனியில் 8ஆம் நாள் அழகு! நிலம் அழகு நீர் அழகு மீன் போன்ற உன் கண் அழகு! பூ அழகு பொட்டழகு உன் இதழ் சிந்தும் தேன் அழகு! உடை அழகு இடை அழகு நளினமான உன் நடை அழகு! மண் அழகு விண் அழகு பௌர்ணமியாய் உன் முகம் அழகு! பகல் அழகு இரவு அழகு கார்கூந்தலாய் உன் முடி அழகு! கை அழகு விரல் அழகு அதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு! மயில் அழகு ... Read More »

புலம் பெயர் தமிழர்…!

வாழ்ந்த மண்ணும் வந்த மண்ணும் சொந்த மண் தான் புலம் பெயர்ந்த தமிழருக்கு. வணக்கம் என்றே சொல்லி நிற்போம்.. பிற மொழி பேசுபவனையும் வணக்கம் என்று சொல்ல வைப்போம். அன்னை மொழி சுமப்பதில் ஆனந்தமே எங்களுக்கு . ஆனாலும் கற்கிறோம் அந்நிய மொழிகளும் . அதுகூட ஆனந்தமே. மொழிகளை மதிப்பதும் ..அறிவதும் உயர்வுதான். தேசம் விட்டு வந்தாலும் நேசம் மறப்பதில்லை. பாசம் சுமக்கின்றோம்.. தாய் மண்ணை மதிக்கின்றோம். தமிழுக்கு நாடில்லை என்பவரே .. நம் நம் மனங்கள்தான் நாடு .. மறக்காதீர். மனங்கள் தங்குதடையின்றி ... Read More »

யாழ் வில்லிசையின் குரல் ஓய்ந்தது!

வில்லும் சொல்லும் கவிபாட வைத்தீர் .கல்லும் கரையும் .உங்கள் கணீர்குரலாலே.கதையும் காவியமும் நீங்கள் படிக்கும் விதமும் .நடிக்கும் விதமும் பாடும் விதமும் கண்டு மகிழ்ந்திருந்தோம்.இன்று அசைவுகள் அற்ற இசையாகக் கண்டோம்..எங்கு சென்றீர் ஐயா..?வில்லுப் பாட்டு என்ற சொல்லு வரும்போதே சின்ன மணி என்ற பெயர் வருமே.நவரசங்களும் உங்கள் குரலை வணங்கும் .நாங்களும் தான் வணங்கி நின்றோம்.திரு விழா நாயகன் நீங்கள்..திகட்டாத செந்தமிழால் தந்த வில்லிசை மெல்லிசையாக இன்னும் மனங்களில் வாழ்கிறது.வில்லைசைக்கு உயிர் கொடுத்தீர்..கலை வடிவம் வளர்த்து விட்டீர். இன்று காவியமாகி விட்டீர்.அழியாத உங்கள் புகழ் ... Read More »

அனந்தி ஒன்றும் அமாவாசை அல்ல!

அனந்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் , தோற்றுவாயின் அடையாளம். ஆணை அடக்கப் புறப்பட்ட, அரியாத்தை , கூனிக்குறிகி நடக்கத் தெரியாத, பள்ளியில் பயின்ற தமிழச்சி, நுள்ளி வீசுவதற்கும் ,,,,கிள்ளி எறிவதற்கும் , தந்து விட்டுப் போகவில்லை ,,,,தலைமை . கட்சியின் நிலைப்பாடு ,,,கடைசியில் தான் வந்தது . மக்களோடு நிப்பவருக்கே மக்கள் மனநிலை புரியும் ,, ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மட்டும் சிதறவில்லை . வடக்கும் பணத்துக்கு சோரம் போய் விட்டதோ?? மகள் பிரதிநிதிக்கே ,, மக்கள் நாடித்துடிப்பு நன்றாகத் தெரியும். ஊட்டிக்கு போனவருக்கு ... Read More »

வாழ்க அனலை FM!

தரணிபோற்றும் தமிழ்மகளின்தாய்பூமியாம் யாழ்மண்ணிலேஅணிகொண்ட அனலைதீவின்தனிப்பெரும் தலைமகனாய்தலைநிமிர்ந்தாய் பாரே-எங்கள்அனலையெனும் பண்பலையே வாழ்க!முத்தமிழின் வித்துவத்தைஎத்திசையும் ஒலிபரப்பிஇக்கணமும் எக்கணமும்எங்கள் கதை தான்நிரப்பிசர்க்கரையும் தேன்கனியும்தத்துவத்தின் உட்பொருளாய்சித்திரையின் திங்கள்போல்திகழொளியாய் திகழ்ந்திடவேதிடமான மனங்கொண்டுவாழ்கெனவே வாழ்த்துகிறேன்!மண்வாசனையின் பரிமளிப்பும்பண்பாடுகளின் பரிணமிப்பும்எம்பாடுகளின் எதிரொலிப்பும்ஏற்றம்நிறை மாங்களிப்பும்எங்கும் அனலையாய்எதிலும் அனலையாய்அலையலையாய் புகழ்சேரஅணியணியாய் சேவை செய்துஅனைவருமே வியந்திடவேஅகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்!வாழ்க பண்பலையே!!வளர்க தமிழலையே!!! ஆக்கம் – Artist shan Read More »

விடியும் வரை காத்திரு..

வெண்ணிலா வெளிச்சம் விடிந்தால் தருவேன் .மண்ணிலே சொர்க்கம் விடிந்தால் தருவேன்.மலர்களின் மயக்கம் விடிந்தால் தருவேன்,மனதிலே மகிழ்ச்சி விடிந்தால் தருவேன்.அள்ளியே தமிழை விடிந்தால் தருவேன்.அருளினை ஆசியை விடிந்தால்தருவேன்.பொருளினைப் புகழினை விடிந்தால் தருவேன்.புதுமைகள் கனவுகள் விடிந்தால் தருவேன்அறுசுவை நகைச் சுவை விடிந்தால் தருவேன்.மின்மினி ,பொன் அணி விடிந்தால் தருவேன்.. முன்பனி மழைத்துளி விடிந்தால் தருவேன்.முத்துக்கள் சொத்துக்கள் விடிந்தால் தருவேன்.இப்போ கொஞ்சம் என்னை உறங்க விட்டு விடு. தமிழ் மகள்- மணிமேகலை. Read More »

வாழ்க்கை என்பதென்ன..?

ஒரு கனவு உயிர் பெற்று உலக வலம் வருதல்.உயிர் உழன்று சுழன்று படகென ஆகி கடலினில் மூழ்கி அமைதி கண்ட புயலென ஆகுதல்.அழுவதும் பின் தெளிவதும் தோற்பதும் பின் வெல்வதும் துணிவதும்தொடர்வதுமான பயணம்.ஒரு விரல் உலகைக் காட்டிட மறு விரல் தன்னையே காட்டிட பிழை எது ?சரி எது..?உணர்ந்திடத் தெரிந்திடாக் குழந்தை போன்றது.தடைகளைத் தாண்டி படிதனில் ஏறி விழவிழ எழுவதும் அழ அழத் தொழுவதும் பின் இறைவனே கதியென அடைக்கலமாதல் .வாழ்க்கை என்பதிதுதான்..அனுபவப் பாடமாகும்.அதுவே வேதமாகும். தமிழ் மகள் – மணிமேகலை Read More »

கை வீசி நடந்து வா தை மகளே…

தை மகள் தமிழ் சுமந்து தென்றல் ஆனாள்.சூரியனை வரவேற்க புன்னகை பானையெல்லாம் நிரப்பிஅன்பு வணக்கம் என்றாள்.வீடு நலம் பெற நாடு நலம் பெற நல்ல சேதி தர வந்தாள்.சொற்கள் வணங்கி நிற்க.சொர்க்கம் தமிழுக் கென்றாள் .வார்த்தைகளில் வெல்லம்கலந்து வாழ்த்துக்கள் வழங்க வந்தாள்.இனிய பொங்கல் இனி இனிப்பாக்கும் வாழ் நாளை.என்றாள்.அழுத விழிகள் இனிசிரிக்கட்டும் அழகாக என்றாள். அன்புடன் தமிழ் மகள்- மணிமேகலை Read More »

கல்லூரி!

காலத்தால்அழியாத காலம்கல்லூரிக்காலம் ….!!! கல்லாய் இருக்கும் மனசுஉருகி துடிக்கும் காலம்கல்லூரிக்காலம் ….!!! இங்கேமகளீர்கள் சிறகடித்துபறக்கும் பட்டாம் பூச்சிகள் …!!! ஆடவர்கள் கனவுகளோடுவாழும் காளையர்கள் ….!!!ஆசான்கள் அழகானசிற்பங்களை செதுக்கும்சிற்பிகள் …..!!! தாவணியுடன் பறக்கும்வண்ணாத்தி பூச்சிகள்சுடிதாருடன் சுழண்டுவரும் சிட்டு குருவிகள்சிரிப்புகள் நடமாடும்பூந்தோட்டம் -கல்லூரிவளாகம் ….!!! அவனைஅவள் முறைத்துபார்க்கும் கண்களும்அவளைஅவன் கருணையோடுபார்க்கும் கண்களும்கண்கள் எறிகணையாய்களம் பூந்து விளையாடும்களம் கல்லூரி வளாகம் …!!! அவன்ஜாதி எனக்கு தெரியாதுஎன் ஜாதிஅவனுக்கு தெரியாதுஎங்கள் ஜாதி ஓரே ஜாதிகல்லூரி நட்பு ஜாதி ….!!! ஒரு குவளை சோற்றைஓராயிரம் கைகள் பிசையும்ஒரு சோடி உடுப்பைஓராயிரம் உடல்கள் ... Read More »

Scroll To Top