Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / பண்ணும் பரதமும்

பதிவு வகை: பண்ணும் பரதமும்

Feed Subscription

மனவெளியின் அரங்கப் படைப்புகள்: சொற்களும் கருத்துக்களும் – சில விமர்சனக் குறிப்புகள்.

மனவெளியின் அரங்கப் படைப்புகள்: சொற்களும் கருத்துக்களும் –  சிலவிமர்சனக் குறிப்புகள்.மேடையேற்றத்துடன் ஒரு படைப்பு முடிவடைந்து விடுவதில்லை. அதற்குப் பின்பு தொடரும் உரையாடலிலும் அது தொடரும் என நண்பரும் இயக்குனருமான மெலிஞ்சியினது கூற்றையும் மற்றும் விமர்சனங்களை எழுதும்படி ஊக்குவிக்கும் செல்வனினதும் நிலைப்பாட்டையும் வரவேற்றும் மதித்தும் மனவெளியின் அரங்கப் படைப்புகள் தொடர்பான எனது கருத்துக்களை இங்கு முன்வைக்கின்றேன். மனவெளி அமைப்பினர் பலரின்  (மங்கை, பொன்னி, மற்றும் சிலர்) வழிகாட்டுதல்களில் அரங்கப் பயிற்சிப் பட்டறைகளை நாடாத்தியும் ஒரு வருடங்களாக பயிற்சிகள் செய்தும் இம் முறையும் நான்கு நாடகங்களை வெற்றிகரமாக ... Read More »

யாழில் ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தின் கலை விழா!

யாழ். பல்கலைக்கழக மிருதங்க விரிவுரையாளர் நல்லை க. கண்ணதாசனாலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி நடனபாட ஆசிரியை பாலினி கண்ணதாசனாலும் இயக்கப்படுகின்ற ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தின் கலை விழா Read More »

”சாஸ்திரிகத்திலிருந்து வழுவுகிறது பரதநாட்டியம்” அருட்செல்வி

நவீன காலத்தில் பரதநாட்டியம் சாஸ்திரிகத்திலிருந்து திரிவடைந்து எல்லாப் பாணிகளையும் உள்வாங்கி வழுவிச் செல்வதுடன் அடிப்டை விதிகளும் மாறுகின்றது. இதனால் பரதத்தின் அடிப்படைச் சாஸ்திரிகம் எதிர்காலச் சந்ததியினருக்குப் பிழையாகப் பதியப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் பரதநாட்டிய அலங்காரத்திலும் பெறும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என யாழ்.பல்ககைக்கழக நுண்கலைப்பிரிவின் நடனத்துறைத் தலைவர் அருட்செல்வி கிருபைராஜா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போழுது புதிய ஆடல் வடிவங்களை இணையத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது. இது எம் மாணாக்கர்களின் புதிய ஆக்கத்திறனைத் தூண்டுவதோடு புதுவகையான ஆடை அலங்காரங்களையும் அறிந்து ... Read More »

இளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும்

தமிழர் கலைகள் எல்லாம் ஆன்மீகத்துடனும் சமயச்சடங்குகளுடனும் இணைந்தும் பிணைந்தும் மரபுவழியாகப் பேணப்பட்டு சந்ததி சந்ததியாகக் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. இறைநம்பிக்கை சமய நம்பிக்கை என்ற இறுக்கமான பிணைப்புடன் எம்கலைகள் கட்டியெழுப்பப்பட்டதனால் அவை அழிவடையலாம் என்று எண்ணி அஞ்சவேண்டியதில்லை. என்று இந்நம்பிக்கைகளிற்கு பங்கம் வருகின்றதோ அன்று கலைகளும் தம் உயர் பண்பை இழந்து அழிவை நோக்கிய திசையில் பயணிக்கும். ஆன்மீக நாட்டம், தெய்வீக சிந்தனை என்ற வகையில் கலைகள் மக்களை அவ்வழி ஒருங்கிணைக்கும் பாலம் எனலாம். பரதக் கலையும் இவ்வகையில் தெய்வீகக்கலை எனும் உயர்செவ்வியல்கலையே எனில் அது ... Read More »

பூர்ணிமா முருகேசன் வயதோ 17… வாங்கிய சான்றிதழ்கள் 700!

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை’ என்பதற்கேற்ப பல துறைகளிலும் முத்திரைப் பதித்து வருகிறார், பன்முகத்திறமைக்கொண்ட பூர்ணிமா முருகேசன். வயதோ 17, ஆனால் வாங்கிய சான்றிதழ்கள் மட்டுமே 700, இதைத் தவிர வென்ற கோப்பைகளும் வாங்கிய பட்டங்களும் 250 –ஐ எட்டுகின்றன. இரண்டரை வயதில் நடனத்தோடு தொடங்கிய இவரது கலைப் பயணம், இன்று வரை தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈவினிங் காலேஜூ முடிந்து வந்த களைப்பு கூட இல்லாமல் நம்முடன் பொறுமையாகப் பேசினார் பூர்ணிமா. “பிறந்தது திருநெல்வேலி, வளர்ந்தது படிச்சது எல்லாம் புதுச்சேரிதான். எங்க ... Read More »

நாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்!

இந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஹீரோ, ஹீரோயின், கண்டதும் ஏற்படும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற அமைப்பியலிலே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இதிலிருந்து சற்றே மாறி, கதாநாயகன் ரொம்பவும் மோசமான குணங்கள் உள்ளவனாகவோ, சினிமாவின் முடிவு சோகமாகவோ, பாடல்கள் இல்லாத படமாகவோ, இவ்வளவு ஏன் ... Read More »

ஓவியக் கலைஞர் ஆசை இராசையா

16.08.1946 இல் அச்சுவேலியில் ஆசை – செல்லம்மா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த இராசையா தற்போது இல 36, பண்டாரிக்குளம் வீதி, நல்லூரைத் தனது வாழ்பதியாகக் கொண்டுள்ளார். இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் இவர் பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர். அச்சுவேலி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். ஓவியத்தின்பால் கொண்டிருந்த ஆர்வத்தினால் பாடசாலைக் காலத்தில் ஓவிய பாடத்திற்கே அதிக மதிப்பெண்களைக் பெற்றதாகக் கூறும் இவர் பாடசாலைக் காலத்தில் தனக்குச் சித்திரபாடத்துறையில் போதிய வழிகாட்டல் கிடைக்கவில்லை எனவும் அங்கலாய்க்கிறார். ஓவிய ... Read More »

‘நான் கற்கும் இசைக் கல்வி எனது குடும்பத்தைக் காப்பாற்றும்’ – மனம்திறக்கிறாா் ரஞ்சித்குமாா்

சிலவேளை சாப்பாடு இல்லாமல் இசைக்கல்வி பயிலச் செல்வேன். எனது நண்பர்கள் பணம் கொண்டு வந்து கடையில் வாங்கிச் சாப்பிடுவார்கள். நான் தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டுப்பயிற்சியை மேற்கொள்வேன். எனது நண்பர்களுக்கு எனது நிலைமையைச் சொல்ல முடியாது தவித்திருக்கிறேன். அவர்கள் என்னிடம் நீ சாப்பிட்டு விட்டாயா? என கேட்டால், நான் ஆம் எனப் பதில் சொலலி விடுவேன். என் வேதனையை நான் சொல்லவும் விரும்பவில்லை. மற்றவர்கள் என்னைப் பார்த்து பரிதாபப்படவும் விரும்பவில்லை எனத் தெரிவித்தார் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவின் இசைத்துறையில் 2ம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவன் திருக்குமரன் ... Read More »

வில்லிசைக் கலைஞர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை

சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936 இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக எம்மூரைத் தனது வாழ்பதியாக்கிக் கொண்டார். சின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957 இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான ரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக நிகழ்வுகளில் பங்கு கொண்டார். கொழும்பில் தங்கியிருந்து ... Read More »

சங்கீத வித்துவான் வல்லிபுரம் செல்லத்துரை

கைத்தொழிற்பேட்டை வீதி, அச்சுவேலியை வாழ்விடமாகக் கொண்ட திரு.வ.செல்லத்துரை 27.05.1935 இல் கொல்லங்கலட்டி தெல்லிப்பழையில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கொல்லங்கலட்டி விநாயகர் வித்தியாசாலையிலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த. சாதாரணதரம் வரையான கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் பெற்றவர். 1980 ஆம் ஆண்டில்; அச்சுவேலியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் புவனேஸ்வரியைத் திருமணம் செய்ததன் மூலம் தமது ஊரை வாழ்பதியாக்கிக் கொண்டார். இவரது தந்தை வழிப் பேரனாரும் தாய் வழிப் பேரனாரும் நாடகக் கலைஞர்களாக இருந்தமையே தனக்கு இசை ஆர்வம் ஏற்படப் பிரதான காரணம் என்கிறார். ... Read More »

Scroll To Top