Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / பண்ணும் பரதமும் (page 2)

பதிவு வகை: பண்ணும் பரதமும்

Feed Subscription

நடன அரங்கு

மனித வரலாற்றிலே கலைகள் ஒரு முக்கியமான இடத்தினை வகித்துள்ளமையும், அவை மக்கள் வாழ்வினை வழம்படுத்தியும் செம்மைப்படுத்தியும் வந்துள்ளன. ஆதி காலந் தொட்டு தமிழர் வாழ்விலே கலைகள் ஒன்றிணைந்து விளங்கி வந்துள்ளன. அவை பாரம்பரியமாகப் பேணப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அக்கலையறிவு மக்களுக்கு மனிதப் பண்பினை வளர்க்க உதவி செய்கின்றது என்பது தெளிவாகின்றது. இவ்வாறாக வளர்க்கப்பட்ட கலைகளின் எண்ணிக்கை 64 எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு  ஆய கலைகள் அறுபத்து நான்கு|| எனக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் தன் முன்னோரைப் பற்றிக் கூறியுள்ளார். இவ்வாறு கூறப்பட்ட கலைகளுள் இசையும் ... Read More »

பாவங்கள் பேசும் பரத நாட்டியக் கலை

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், இலங்கையிலும், மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரத நாட்டியம். ஒவ்வோர் இனத்தின் பெருமைகளைப் பறை சாற்றுவது அவ்வினத்தினால் ... Read More »

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையும் நீட்சியும் கொண்ட ஒரு மரபு, இடைப்பட்ட காலனிய ஆதிக்கத்தின் கீழ் மறக்கப் பட்டாலும், பின்னர் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது திரும்பக் கண்டெடுக்கப்பட்டு ஒரு மறுமலர்ச்சியாகப் பெற்றாலும், அதன் நீண்ட பழமை ஒரு சுமையாகவே இம்மரபின் மீது அமர்ந்து அழுத்துவதாகத் தோன்றுகிறது. இத்தகைய நீண்ட பழமையே ஒரு போதையாகவே செயல் படுகிறதோ என்னவோ. மறுமலர்ச்சி ஒரு மரபைத் தோற்றுவிக்காது. பழம் மரபையும் வடிவையுமே திரும்ப முன் வைக்கிறோமோ என்று தோன்றுகிறது. பழமையின் சுமை நம்மை, இன்று சிருஷ்டிபரமான ... Read More »

Scroll To Top