Wednesday , October 18 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / மலரும் நினைவுகள்

பதிவு வகை: மலரும் நினைவுகள்

Feed Subscription

பிளா

எமது முன்னோர்களின் கண்டு பிடிப்பில் இதுவும் ஒன்று. பனை ஓலையை வெட்டி மடித்து செய்யப்படும் பிளா இயற்கையான பனை, தென்னங் கள்ளினை குடிக்கப் பாவிக்கப்படுகின்றது. இப்படி ஓலையை மடித்துக்கட்டி கிராமப்புறங்களில் இறைச்சி, வெள்ளரிப்பழம் என்பவற்றினை காவிச்செல்லவும் பிளா மாதிரியாகத்தான் பின்னப்படுகிறது. பனையிலிருந்து இறக்கிய கள்ளை பனைக்குக் கீழே இருந்து பிளாவில் குடிப்பதும் சுகம்தானென்று தாத்தாமார் சொல்வது அன்றைய இயற்கை வாழ்வை எடுத்தியம்புகின்றது. நன்றி – தகவல் மூலம் www.ourjaffna.com இணையம் Read More »

நீத்துப்பெட்டி

இன்றும் கிராமம், நகரப்புறங்களில் பாவனையில் உள்ள நீத்துப்பெட்டி எம் முன்னோர்களால் எங்களுக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட்டாலும் காலை, இரவு வேளை உணவுகளில் பெரும்பாலும் பிட்டு காணப்படும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எல்லா வீடுகளிலும் ஒரு வேளையென்றாலும் பிட்டு சாப்பிடுவார்கள். அந்தளவிற்கு இந்த உணவு பிரபலமாக உள்ளது. அரிசி மா, கோதுமை மா கொண்டு தயாரிக்கப்படும் பிட்டு அவிப்பதற்காக இந்த நீத்துப்பெட்டி பாவிக்கிறார்கள். இது பெரும்பாலும் பனை ஓலை கொண்டு இழைக்கப்படும். தற்போது பிரம்பு கொண்டு இழைக்கப்பட்ட நீத்துப் பெட்டிகளும் ... Read More »

கள் முட்டி

யாழ்ப்பாணத்தில் பனை, தென்னையிலிருந்து கள் எடுக்கப்படுகிறது. அதிலும் பனங்கள்ளிற்கு தனி மரியாதை உண்டு. கள் என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது கூவில் கள் தான். இங்குள்ள கள் ஏனைய இடங்களை விட மிகவும் இனிமையானது. உடனடியாக எடுக்கப்பட்ட கள்ளில் பெருமளவு சத்துக்கள் உள்ளபடியால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அத்துடன் உடலிற்கு குளிர்மையுமானது. எமது மூத்தவர்கள் இந்த இயற்கையான பானத்தையே தமது வெம்மையை போக்க பாவித்தனர். முன்னர் தோசை, அப்பத்திற்குரிய மாவைப் புளிக்க வைக்கவும் கள்ளைப் பாவித்தனர். இப்படித் தயாரிக்கப்படும் உணவிற்கு தனிச் சுவையும் இருக்கும். பனையில் ... Read More »

தமிழர் பாரம்பரியம் மிக்க பூப்புனித நன்நீராட்டு விழா முறையாய் செய்வது எப்படி?

பூப்புனித நீராட்டுவிழா என்பது, பூப்படைந்தை பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா என பொருள்படும். அதாவது, பருவ வயதை அடைந்த ஒரு சிறுமி பால் முதிர்ச்சி அடைந்து (சிறுமியாக இருந்தவள் குமரியாக மாறும்) பருவ மாற்றம் பெற்று “பக்குவப் படும் போது” நடத்தப் பெறும் ஒரு சமயச் சடங்காகும். சந்தான விருத்தி (தாய்மை) அடையக் கூடிய பருவத்தை முதன் முதலில் பெறும்போது அதாவது முதல் கரு உற்பத்தியாகியதை (மாதவிடாய் வெளியானதை) காரணமாக வைத்து சமயச் சடங்குகள் செய்யப் பெறுகின்றன. இச் சடங்குகள் செய்வதன் மூலம் அப் ... Read More »

ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் வீரமணி ஐயர் (15/10/1931 – 08/10/2003)!

ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற ‘கற்பகவல்லி நின் பொற்பதம்’ என்ற பாடலை இயற்றியவர். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணி ஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக ... Read More »

ஈடிணையற்ற புகழ்பூத்த வயலின் மேதை உ.இராதாகிருஷ்ணன் அவர்களை இழந்தது ஈழதேசம்.

ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை உ.இராதாகிருஷ்ணன் அவர்கள் நல்லைக்கந்தன் திருவடியில் (06.09.2015) அன்று காலமானார். (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் காலமாகி விட்டதை மருத்துவர்கள் அங்கே உறுதிசெய்தனர். நம்ப முடியவில்லை அவரது மறைவை. ... Read More »

இது கூத்தல்ல நிஜம்..!

ஆடிக் காற்று பாணன்குளத்தில்பட்டுத் தெறித்ததோ இல்லையோ பார்வையாளர்களின் எண்ணங்களை பட்டமாய் பறக்கவைத்த ஆற்றுகையே “இது கூத்தல்ல நிஜம்”. செயற்றிறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் சமகாலத்தின் தேவையொன்றினை பக்குவமாய் பறைசாற்றிய பொழுது நேற்று மாலை ஏழு மணி. ராணி என்கின்ற ஒரு தற்காலத்து சாதாரண தாய் ஒருத்தியின் கதையை காவியத் தலைவி பாஞ்சாலியுடன் தொடர்புபடுத்தி மக்கள் அனைவரும் பார்த்து உணரவேண்டிய விதமாய் அரங்கிற்கு படைத்த முறைமை அற்புதம். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவங்களையும் விளைவுகளையும் தோலுரித்துக்காட்டும் நவீன அளிக்கை இது. தினப் பத்திரிகைகளில் ... Read More »

சொல்லுங்கள் இது இயந்திர வாழ்க்கையா?

சின்ன வயதிலிருந்து இப்போது வரை புலம்பெயர் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என்று பலர் புலம்புகிறார்கள். அந்தக்காலத்திலேயே உதயன்-சஞ்சீவி துக்கடா கவிதைகளில் “என்ன இது நரக வாழ்க்கை” என்று கவிதை எழுதி கீழே கனடா கமல் என்று பெயர் போட்டிருப்பார்கள். “கொழும்பு லைப் பிஸி” என்பார்கள். அனேகமான புலப்பெயர் சிறுகதைகளிலும் ராசப்பாவோ, நல்லசிவமோ முதல் பந்தியிலேயே இந்த “இயந்திர வாழ்க்கையை” சபிக்கத் தொடங்கி விடுவார்கள். கடந்த பதினைந்து வருடங்களில் புலம்பெயர்ந்து மூன்று ஊர்களில், ஊருக்கு ஐந்தாண்டுகள் வீதம் வசித்துவிட்டேன். அப்படி என்ன தான் இயந்திர வாழ்க்கை? ... Read More »

அமிர்தலிங்கம் கொலையும், அதன் உண்மையான பின்னனியும்!

ஜூலை 13, 1989 அன்று அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கொழும்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னனியை நீங்கள் பின்வருமாறு காணலாம். இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முரணான வகையில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைகளை அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாச அவர்கள் இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்ற புலிகளுடன் சேர்ந்து எடுத்த நடவடிக்கை ராஜீவ் காந்தி அரசை சீற்றம் கொள்ள வைத்தது. அதன் விளைவு, சைப்பிரஸ் நாட்டின் உருவாக்கத்தை ஒத்த நடமுறையினூடு இலங்கையில் தமிழருக்கு ஒரு தனி நாட்டிற்கு சமமான அரசியல் அதிகார அலகை திரு அமிர்தலிங்கம் ... Read More »

சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு வரலாறு: என்னையும் விழுங்கிய வியப்பு!

கனடா தமிழ்த் தோட்டமும், டொரண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து ஹவாயில் வசிக்கும் வைதேகி ஹெர்பர்ட்டைக் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் விருது வழங்கிக் கவுரவித்தது. முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை ஆகிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் சிறப்புற மொழிபெயர்த்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி அவரை நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் அவர் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். “சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டில் இதுவரை வேறு ஒருவரும் ஒரு நூலுக்கு மேல் முழுமையாக மொழி பெயர்த்ததில்லை; சங்கத் தமிழ் இலக்கியம் அறிந்த ... Read More »

Scroll To Top