Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / மலரும் நினைவுகள் (page 3)

பதிவு வகை: மலரும் நினைவுகள்

Feed Subscription

“ கலைக்காவலன் ” விருது பெற்ற பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்

வலிகாமம் கிழக்கு – கோப்பாய் பிரதேச செயலகமும் கலாசாரப்பேரவையும் இணைந்து 29-12-2014 திங்கட்கிழமை யாழ்ப்பாணம், ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தில் கலாசாரப் பெருவிழாவை நடாத்தியபோது, சிவஸ்ரீ.கு.தியாகராஜ குருக்கள், யாழ்.பல்கலைகழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, சைவஞானபானு .கலாநிதி. ஆறு.திருமுருகன், பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்,திருமதி.உஷா சுபலிங்கம், கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் செல்வி.ச.பிரேமினி, மேலதிக கல்விப் பணிப்பாளர் முத்து.இராதாகிருஷ்ணன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர். ச.லலீசன் கலாசார உத்தியோகத்தர், திருமதி.மிலாசினி. றோகேசன் ஆகியோர் முன்னிலையில் வலிகாமம் கிழக்கு-கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் உடுவை.எஸ்.தில்லை நடராசாவுக்கு “ ... Read More »

யேசுவுக்கு முன் பிறந்தது நத்தார் எனும் ஒளித்திருநாள் (சூரியசங்கிராந்தி)

உலகம் முழுவதும் யேசு கிறீஸ்துவின் பிறந்தநாள் மார்கழி 24இரவு சாதி மத இனவேறுபாடின்றி கொண்டாடப்படுவதை காண்கிறோம். இதற்கு யேசுவின் பிறந்த தினம் மட்டும் தான் காரணமா? மற்றைய மதங்களில், ஐதீகங்களில், கலாசாரங்களில் யேசு பிறப்பதற்கு முன்னால் இந்நாட்களில் ஏதாவது விசேடமாகக் கொண்டாடப்பட்டதா? மதங்கள் பல கலாசார, ஐதீக, வேற்று நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்புக் கொண்டதாகவே உள்ளன. உ.ம். அரசையே துறந்த புத்தரின் பௌத்தம் அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் ஆக்கிரமிப்பெற்றது விரிவுபடுத்தப்பட்டது. மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை என்று மார்கழிக்குளிரை பெண்ணுக்கு வர்ணித்தான் கவிஞன். ... Read More »

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பெயர் முக்கியத்துவம் வாய்த்தது. ஒரு மனிதனை அடையாள படுத்திக்காட்டுவதற்கு பெயரானது இன்றியமையாதது.  பெயரில் என்ன உள்ளது என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் பெயரானது வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஒருவரின் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது. அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம். பெயரின் முதல் எழுத்து A to Z: A: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். ... Read More »

காதலில் ஏமாறும் பெண்களே!

உயர்தரம் படித்து முடிந்த காலத்தில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியொன்றில் அக்கா ஒராள் அறிமுகமாகியிருந்தார். என்னை விட நான்கு வயது மூத்தவர். அன்று தனது காதலரோடு கண்காட்சிகளைப் பார்வையிட்டு வந்தவர் எனது ஓவியங்களைப் பார்த்து விட்டு சற்று நேரம் ஒவ்வொன்றைப் பற்றியும் கேட்டுக்கொண்டேயிருந்தார். ஓவியக்கலையில் அதீத ரசனை கொண்டவரென்பதை அவரது ஒவ்வொரு கேள்வியுமே உணர்த்திக்கொண்டிருந்தன. ஆனால் அவரது காதலருக்கு அவ்வளவு ரசனையோ ஈடுபாடோ இருந்ததாகத் தெரியவில்லை, எனினும் காதலியின் ரசனையை மதித்து அவ்வளவு பொறுமையாகக் காத்திருந்தார். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் வரை ... Read More »

சின்னத்திரை சினிமா ஆகுமா?

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நண்பர் வந்து பேசினார். இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டிக்கொண்டிருந்தாலும் அவரது மனம் எங்கேயோ தாவிக்கொண்டிருப்பதை தடுமாறும் பேச்சுக்கள் உணர்த்தின. “என்ன ஏதாவது பிஸியா?” என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன். “இல்ல, நாடகத்துக்கு நேரம் வந்துட்டுது….” என்றார். “ஓ… உங்களுக்கும் அந்தப் பைத்தியம் பிடிச்சிட்டுதோ?” என்று கேட்டதுமே மனுஷர் கடுப்பாகிவிட்டார்போலும், “ஏன் நாடகம் பார்க்கக்கூடாதா? அதுவும் சினிமா தானே, நாட்டில நடக்கிறதுகளைத்தானே நடித்துக்காட்டுறாங்கள். அதைப் பார்த்தவனெல்லாம் பைத்தியமா? அப்படியெண்டா நீங்கள் படப் பைத்தியமா?” என்று கொட்டித்தீர்த்தார். “ஏன், அப்படிச்சொல்கிறீர்கள்?” என்றதும் “இல்ல, ... Read More »

பாரதி சிங்களத் தீவென்றவர் ஈழத்தமிழரைப் புறக்கணித்தாரா?

பாரதியாரைப் புகழாதீர்கள், அவர் ஈழத்தமிழருக்கு துரோகமிழைத்தவர் என்ற வாதத்தோடு ஒரு நண்பர் வந்தார். என்ன துரோகம் என்றதற்கு பாரதியாரின் இந்தப் பாடலை எடுத்துக்காட்டினார். “சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுருத்தி வீதிசமைப்போம்” அவர் சொன்தில் ஆச்சரியமில்லை என உணர்கிறேன், ஏனெனில் எனது தமிழ் வாத்தியார் ஒருவரும் இதை முன்வைத்து பாரதியார் எங்களைப் புறக்கணித்தவர் என்று சொல்லித்தந்த ஞாபகம் இருக்கின்றது. அடிப்படை ஈழப்பற்றாளர்கள் இந்தப் பாட்டை வைத்து பாரதியார்மீது கொதித்தெழுவதில் நூதனமேதுமில்லைத்தான். ஆனாலும் அத்தகைய ஒரு எண்ணப்பாங்கினை நான் ஏற்கமாட்டேன். இந்தப்பாடல் பெரும்பாலும் வெளியில் தெரியவந்ததற்கான ... Read More »

இலக்கண ஆராய்ச்சியாளா் – கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன்!

ஈழத்தின் சிறந்த பேச்சாளா் மற்றும் இலக்கண ஆராச்சியாளா்  என்ற பெருமையைக் கொண்டவா் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன். வாழ்க்கை வரவாறு;  யாழ்ப்பாணம் கோப்பாயைச் சார்ந்த இவர், 1975ம் வருடம் நவம்பா் மாதம் 01ம் திகதி பிறந்தாா். தமது ஆரம்பக் கல்வியை கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தில் கற்று, புலமைப் பரிசில் பரீட்சையில் கோப்பாய் கல்வி வலயத்தில் அதிசிறந்த பெறுபேறு பெற்றவர். இடைநிலைக் கல்வியை புகழ்பெற்ற யாழ். இந்துக் கல்லூரியில் கற்று, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதல் மாணவனாய், அகில இலங்கை ரீதியில் ... Read More »

சொற்பொழிவாளா் சந்திரமௌலீசன் லலீசன்

சிறந்த சொற்பொழிவாளராக புகழ் பெற்றுள்ளவரும், யாழ்ப்பாணக் கம்பன் கழகத்தின் ஆரம்பத் தலைவா் மற்றும் யாழ்ப்பாண தழிழ்ச் சங்கத்தின் பொருளாளராகவும் விளங்குகிறாா் சொற்பொழிவாளா் சந்திர மௌலீசன் லலீசன். வாழ்க்கை வரலாறு   நீர்வேலி மத்தியைச் சேர்ந்த நவமணி – சந்திரமௌலீசன் தம்பதியரின் ஏகபுதல்வன். 19.09.1970 இல் பிறந்த இவர் இலங்கை கல்வியியலாளர் சேவையில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபராகவும் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். பாடசாலைக் கல்வியை சரசாலை சரஸ்வதி வித்தியாலயம், யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் பெற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கலைமாணி, ... Read More »

உலக அரங்கில் யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்திய சொற்பொழிவாளா் ஆறு.திருமுருகன்!

உலக அரங்கில் யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தக்கூடிய சொற்பொழிவாளர் என்ற பெருமையைக் கொண்டவரும், சொற்பொழிவின் மூலம் சமூகப் பணிகளை ஊக்குவிக்கலாம் என்று சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் நிரூபித்தமையை இன்றும் நிஜமாக்கிக் கொண்டிருப்பவரும் மற்றும்  இவரது சொற்பெருக்கு இடம்பெறாத சைவ ஆலயங்கள் இல்லை என்னும் அளவிற்கு தனது சொற்பெருக்கை நிலத்திலும் புலத்திலும் நிலைநாட்டியவா்  கலாநிதி ஆறு.திருமுருகன் ஆவாா். வாழ்க்கை வரலாறு: கோப்பாய் வராம்பற்றை, இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த ஆசிரியர் கந்தையா ஆறுமுகம் – இணுவிற்பதி ஆசிரியை சரஸ்வதி ஆறுமுகம் ஆகியோரின் புதல்வராக 1961 மே மாதம் 28 ... Read More »

மு.நித்தியானந்தன் கூலித் தமிழ் நூல் வெளியிடு!

மு.நித்தியானந்தன் அவர்களது முதலாவது நூல் சில தினங்கள் முன்னர் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். ‘கூலித் தமிழ்’ எனும் தலைப்பிலான இந்நூலினைத் தமிழகத்தில் ‘க்ரியா’ பதிப்பகம் அழகாகப் பதிப்பித்துள்ளது! ‘வீரகேசரி’, ‘தினகரன்’ பத்திரிகைகளில் நண்பர் நித்தியானந்தனது கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன என்பதோடு மூன்று, நான்கு நூல்களுக்குரிய விஷயங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்திருந்த போதும், ஒருவித அசிரத்தை காரணமாக, நண்பர் நித்தியானந்தனது நூல் எதுவும் இன்று வரை வெளிவராமை துரதிர்ஷ்டமே. இந்நிலையில், இப்போது அவரது முதலாவது நூல் வெளிவந்திருக்கின்றமை, புத்தாண்டில் மேலும் ஒரு சில ... Read More »

Scroll To Top