Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் / மலரும் நினைவுகள் (page 4)

பதிவு வகை: மலரும் நினைவுகள்

Feed Subscription

இந்த மலர் அழகானது !

கார்த்திகைப்பூவை வேலியோரம் காணும்போதெல்லாம் என் சின்ன வயது ஞாபகங்களே வந்துபோகும். அந்தளவிற்கு பிஞ்சு மனத்திலே ஆழமாகப் பதிந்துவிட்ட அழகானது இந்த மலர். கிராமத்துப் பாடசாலையென்பதால் இந்த மாதங்களில் என்சார்ந்த நண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டம். அன்று தான் ஆசிரியர் சொல்லித்தந்த “கண்மணிகாள் நீர்ச்சிரங்கு காலில் வரும் கவனம்” என்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாட்டையும் மீறி வீதியோர வெள்ளத்தோடு விளையாடிய படியே வீடு வந்து சேர்வோம். அப்பொழுது தான் வேலியோரமாய் பூத்திருக்கும் கார்த்திகைப் பூக்களின் அழகு கண்ணைப் பறிக்கும். நான் சின்ன வயதிலிருந்தே அழகுணர்ச்சியில் அதீத ஈடுபாடு கொண்டவன். அவற்றிலே ... Read More »

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!

 1, பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். 3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. 4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். 5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் ... Read More »

நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் — வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான். ஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் ... Read More »

ஈழத்து நாடக துறை வளர்ச்சியடைய வேண்டும்!

உலகளாவிய ரீதியில் நாடகக் கலை வளர்ச்சி அடைந்து செல்கின்றது. ஆனால் ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சி என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. கடந்த வருடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் மாணவர்களின் இறுதி அரங்கேற்ற நிகழ்வில் அவர்கள் இறுதி வருட மாணவர்கள் தான என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நாடகத்தின் தரம் காணப்பட்டமை மிகவும் மன வருத்தத்தை தந்தது. கிழக்கு பல்கலைக்கழகத்தை பொறுத்த வரை ஓய்வு நிலை பேராசிரியர் மௌனகுரு சிறந்த வகையில் கூத்து முறைகளில் புதிய விடையங்களை சேர்த்தும் மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றங்களை செய்தும் ... Read More »

சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம்

சமகால மலையக இலக்கியத்தில் ஸி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் (எம்.எம்.ஜெயசீலன்,விரிவுரையாளர், தமிழ்த்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்) (சி.வி.யின் 100வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மக்கள் பண்பாட்டுக் கழகம் கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஹட்டனில் நடாத்திய சி.வி பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) அறிமுகம் ‘மக்கள் நல்வாழ்விற்காகவும், அவர்கள் நாகரிகம் மேம்பாட்டை அடைவதற்காகவும் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்த பெரியார்கள் காலத்திற்குச் சொந்தமானவர்கள்’ என பேராசிரியர் கைலாசபதியின் அஞ்சலி உரையில் ஸி.வி. வேலுப்பிள்ளை கூறிய கூற்று அவருக்கும் பொருத்தமானதேயாகும். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகத் தீவிர அக்கறையுடன் ... Read More »

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டை விரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்? இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ... Read More »

சிறகொடிந்தது முதுபெரும் தமிழ்க்குயில்!

தமிழை அழுத்தம் திருத்தமாக உச்சரித்துப் பெருமை பெற்ற நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் வெகுசிலரே. அவர்களில் முதன்மையானவராகப் போற்றப்பட்டவரே எஸ்.எஸ்.ராஜேந்திரன். பகுத்தறிவார்ந்த பாத்திரங்களிலேயே நடிப்பதென்ற இலட்சியத்தோடு வாழ்ந்ததனால் ‘இலட்சிய நடிகர்’ என அறிஞர் அண்ணாவினால் அழைக்கப்பட்டார். இன்று தனது 86வது வயதில் காலமாகியுள்ளார். தமிழ் திரையுலகின் மூத்த தலைமுறை நடிகர்களில் கடைசியொருவராக வாழ்ந்த எஸ்.எஸ்.ஆரின் மறைவோடு திரையுலகின் ஒரு தலைமுறையே அத்தமனமாகின்றது. பல்வேறுபட்ட வெற்றிப்படங்களில் நடித்த எஸ் எஸ் ஆருக்கு பூம்புகார் திரைப்படம் வரலாற்று வெற்றியானது. சிவாஜி கணேசனுக்கு ஈடான நடிப்பாற்றலைக் கொண்டவராக-இன்னொரு சிவாஜி கணேசனாக வாழ்ந்தவர் ... Read More »

உலகால் அறியபடாத ரகசியங்கள்!

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும். 8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை ... Read More »

அழிந்துப் போன பண்டைய தமிழரின் இசைக் கருவி!

தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும். மிகப் பெரிய தமிழர் இசைக்கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும். குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதில் ஒரே ... Read More »

புலிகுகை, மாமல்லபுரம் – மௌன சாட்சிகள் தமிழர் மறைக்கப்பட வரலாறு!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம் அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO)  சின்னங்களில் ஒன்றான “புலிக்குகை” உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது. ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது ... Read More »

Scroll To Top