Sunday , October 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் (page 10)

பதிவு வகை: கட்டுரைகள்

Feed Subscription

மு.நித்தியானந்தன் கூலித் தமிழ் நூல் வெளியிடு!

மு.நித்தியானந்தன் அவர்களது முதலாவது நூல் சில தினங்கள் முன்னர் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். ‘கூலித் தமிழ்’ எனும் தலைப்பிலான இந்நூலினைத் தமிழகத்தில் ‘க்ரியா’ பதிப்பகம் அழகாகப் பதிப்பித்துள்ளது! ‘வீரகேசரி’, ‘தினகரன்’ பத்திரிகைகளில் நண்பர் நித்தியானந்தனது கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன என்பதோடு மூன்று, நான்கு நூல்களுக்குரிய விஷயங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்திருந்த போதும், ஒருவித அசிரத்தை காரணமாக, நண்பர் நித்தியானந்தனது நூல் எதுவும் இன்று வரை வெளிவராமை துரதிர்ஷ்டமே. இந்நிலையில், இப்போது அவரது முதலாவது நூல் வெளிவந்திருக்கின்றமை, புத்தாண்டில் மேலும் ஒரு சில ... Read More »

இந்த மலர் அழகானது !

கார்த்திகைப்பூவை வேலியோரம் காணும்போதெல்லாம் என் சின்ன வயது ஞாபகங்களே வந்துபோகும். அந்தளவிற்கு பிஞ்சு மனத்திலே ஆழமாகப் பதிந்துவிட்ட அழகானது இந்த மலர். கிராமத்துப் பாடசாலையென்பதால் இந்த மாதங்களில் என்சார்ந்த நண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டம். அன்று தான் ஆசிரியர் சொல்லித்தந்த “கண்மணிகாள் நீர்ச்சிரங்கு காலில் வரும் கவனம்” என்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாட்டையும் மீறி வீதியோர வெள்ளத்தோடு விளையாடிய படியே வீடு வந்து சேர்வோம். அப்பொழுது தான் வேலியோரமாய் பூத்திருக்கும் கார்த்திகைப் பூக்களின் அழகு கண்ணைப் பறிக்கும். நான் சின்ன வயதிலிருந்தே அழகுணர்ச்சியில் அதீத ஈடுபாடு கொண்டவன். அவற்றிலே ... Read More »

கல்லூரி!

காலத்தால்அழியாத காலம்கல்லூரிக்காலம் ….!!! கல்லாய் இருக்கும் மனசுஉருகி துடிக்கும் காலம்கல்லூரிக்காலம் ….!!! இங்கேமகளீர்கள் சிறகடித்துபறக்கும் பட்டாம் பூச்சிகள் …!!! ஆடவர்கள் கனவுகளோடுவாழும் காளையர்கள் ….!!!ஆசான்கள் அழகானசிற்பங்களை செதுக்கும்சிற்பிகள் …..!!! தாவணியுடன் பறக்கும்வண்ணாத்தி பூச்சிகள்சுடிதாருடன் சுழண்டுவரும் சிட்டு குருவிகள்சிரிப்புகள் நடமாடும்பூந்தோட்டம் -கல்லூரிவளாகம் ….!!! அவனைஅவள் முறைத்துபார்க்கும் கண்களும்அவளைஅவன் கருணையோடுபார்க்கும் கண்களும்கண்கள் எறிகணையாய்களம் பூந்து விளையாடும்களம் கல்லூரி வளாகம் …!!! அவன்ஜாதி எனக்கு தெரியாதுஎன் ஜாதிஅவனுக்கு தெரியாதுஎங்கள் ஜாதி ஓரே ஜாதிகல்லூரி நட்பு ஜாதி ….!!! ஒரு குவளை சோற்றைஓராயிரம் கைகள் பிசையும்ஒரு சோடி உடுப்பைஓராயிரம் உடல்கள் ... Read More »

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!

 1, பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். 3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. 4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். 5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் ... Read More »

நாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் — வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான். ஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் ... Read More »

ஈழத்து நாடக துறை வளர்ச்சியடைய வேண்டும்!

உலகளாவிய ரீதியில் நாடகக் கலை வளர்ச்சி அடைந்து செல்கின்றது. ஆனால் ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சி என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. கடந்த வருடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் மாணவர்களின் இறுதி அரங்கேற்ற நிகழ்வில் அவர்கள் இறுதி வருட மாணவர்கள் தான என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நாடகத்தின் தரம் காணப்பட்டமை மிகவும் மன வருத்தத்தை தந்தது. கிழக்கு பல்கலைக்கழகத்தை பொறுத்த வரை ஓய்வு நிலை பேராசிரியர் மௌனகுரு சிறந்த வகையில் கூத்து முறைகளில் புதிய விடையங்களை சேர்த்தும் மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றங்களை செய்தும் ... Read More »

சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம்

சமகால மலையக இலக்கியத்தில் ஸி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் (எம்.எம்.ஜெயசீலன்,விரிவுரையாளர், தமிழ்த்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்) (சி.வி.யின் 100வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மக்கள் பண்பாட்டுக் கழகம் கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஹட்டனில் நடாத்திய சி.வி பற்றிய ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை) அறிமுகம் ‘மக்கள் நல்வாழ்விற்காகவும், அவர்கள் நாகரிகம் மேம்பாட்டை அடைவதற்காகவும் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்த பெரியார்கள் காலத்திற்குச் சொந்தமானவர்கள்’ என பேராசிரியர் கைலாசபதியின் அஞ்சலி உரையில் ஸி.வி. வேலுப்பிள்ளை கூறிய கூற்று அவருக்கும் பொருத்தமானதேயாகும். ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகத் தீவிர அக்கறையுடன் ... Read More »

மறைந்த மலையகம்!

காலையிளம்பரிதி கதிர்விரிக்கும் நேரத்தில் கரிருள் மேகங்கள் கனதியாயின… பறவைகளின் கீச்சொலியால் எதிரொலித்த மலையரக்கன் பள்ளத்தாய்மீது தீராத வெறிகொண்டான்… வெறி…. காமவெறி! கரைபுரண்டோடும் கட்டுக்கடங்கா காமப்பசியில் கைவிரித்துக் கத்தியபடியே கவிண்டு வீழ்ந்தான்… கீழேகிடந்து நசிந்தாள் தாய் அவள் உணர்வுகள் அடக்கப்பட்டன வலி தணித்து உயிர் பிடிக்க – அவள் மூச்சுவிடும் உரிமையும் பறிக்கப்பட்டது… நெருக்கிப்பற்றித் திணித்த உணர்ச்சிகளால் தணித்துக்கொண்டான் தன் நெடிய தாகத்தை! துஷ்டனின் கொடிய பசியால் தூர்ந்து மறைந்தது அவள் மட்டுமல்ல அவள் பிள்ளைகளும்தான்! ஏற்றுமதியில் இந்நாட்டை ஏற்றிவைத்த தீபங்களே-உமை ஏற்றிவைக்கத் தவறியது இந்நாடு. ... Read More »

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டை விரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்? இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ... Read More »

சிறகொடிந்தது முதுபெரும் தமிழ்க்குயில்!

தமிழை அழுத்தம் திருத்தமாக உச்சரித்துப் பெருமை பெற்ற நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் வெகுசிலரே. அவர்களில் முதன்மையானவராகப் போற்றப்பட்டவரே எஸ்.எஸ்.ராஜேந்திரன். பகுத்தறிவார்ந்த பாத்திரங்களிலேயே நடிப்பதென்ற இலட்சியத்தோடு வாழ்ந்ததனால் ‘இலட்சிய நடிகர்’ என அறிஞர் அண்ணாவினால் அழைக்கப்பட்டார். இன்று தனது 86வது வயதில் காலமாகியுள்ளார். தமிழ் திரையுலகின் மூத்த தலைமுறை நடிகர்களில் கடைசியொருவராக வாழ்ந்த எஸ்.எஸ்.ஆரின் மறைவோடு திரையுலகின் ஒரு தலைமுறையே அத்தமனமாகின்றது. பல்வேறுபட்ட வெற்றிப்படங்களில் நடித்த எஸ் எஸ் ஆருக்கு பூம்புகார் திரைப்படம் வரலாற்று வெற்றியானது. சிவாஜி கணேசனுக்கு ஈடான நடிப்பாற்றலைக் கொண்டவராக-இன்னொரு சிவாஜி கணேசனாக வாழ்ந்தவர் ... Read More »

Scroll To Top