Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் (page 17)

பதிவு வகை: கட்டுரைகள்

Feed Subscription

உப்புக் காற்றில்… !

சொந்த மண்ணின் சுகமான நினைவுகளை மீட்டுப்பார்க்கும் ஞாபகங்கள் இன்னும் மறக்கவில்லை அந்த சோகத்தின் வடுக்களை… கடற்கரை நண்டுகளெல்லாம் காலை விறாண்டிக்கொண்டு ஓட காலன் அள்ளிச் சென்று காலாவதியாகிப்போன அந்தக் கணங்களைத் தேடிப்பார்த்த படி அந்தத் தேசத்தின் சிறுசுகள் சிறகடித்துப் பறந்து திரிந்து சிறுமணல் வீடுகட்டி சிந்தனையை வளர்க்க வேண்டிய சின்னஞ் சிறுசுகளெல்லாம் சுற்றிச் சுற்றித் தேடுகின்றன காற்றின் இடமெல்லாம் தம் பெற்றோர் விட்டுச் சென்ற இறுதிச் சுவாசக் காற்றினை கடற்கோளாய் வந்து காலனாய் அள்ளிச் சென்ற அந்தக் கடலை வெறித்துப் பார்த்து வேதனிக்கும் மனங்களெல்லாம் ... Read More »

தென்னோலைக் கிடுகு!

உச்சித் தென்னைமரத்தில் பச்சை ஓலை படபடத்து அழகு காட்டும். பழுத்துப் பழுப்பேறி மரத்தை விட்டுக் கழன்று காய்ந்து கீழே விழும்! உருமாறிய தென்னங்கீற்று ஓலை மட்டையாகி, நீரில் நனைக்கப் பட்டு நடுவாலே பிரிக்கப்பட்டு பாதி ஓலையில் மீதி நாடகம் அரங்கேறும்! ஆச்சி கைவிரலில் ஒரு கீற்றின் கீழே இன்னோரு கீற்று மடிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு ஒன்றுவிட்ட கீற்றினுள் இன்னொரு கீற்று புகுந்து கொண்டு அழகான ‘கிடுகு’ ! அருமையாய் உருவாகும். கிடுகுக் கட்டுகளில் இருபத்தைந்து சோடி சேர்ந்து ஐந்து, ஆறு கட்டுக்கள்.. வீட்டுக்குக் கூரையாகும். நம்மூரில் வேலிக்கும் மறைப்பாகும். காய்ந்த ... Read More »

அந்த நாள் ஞாபகம் !

முளை கட்டிய விதை நெல் மண்ணில் விழுந்து மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட நிலமகளும், நலமுடனே நிறம் காட்டிட பண்டாரவயலில் துள்ளித் திரிந்த அந்த நாட்கள்… பள்ளிக்கூட வாயக்கால் தண்ணீரில் காகிதப் படகு விட்டு காலாலே தண்ணீர் அடித்து விளையாடி, மாமரத்து அணில் போட்ட, மாங்காய் கடித்து மாலை வெய்யில் மஞ்சள் நிறம் ரசித்து, நாளை விடியலுக்கு காத்திருந்த அந்த நாட்கள்… நயினாகுளத்து நீரில் ஓடி விளையாடி குளித்து, களத்து மேட்டில் ஆட்டம் போட்டு, நினைத்ததைச் செய்து, ... Read More »

உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை. என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத தேசங்களில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைக் காண்கிறோம். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், நமது நாட்டின் விவசாயம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது? தற்போது ... Read More »

அமரர் உயர்திரு Dr. ஐயம்பிள்ளை சோமசுந்தரம் L.M.S

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள  சப்த தீவுகளில் அனலைதீவும் ஒன்றாகும். அந்த அனலை மண் பெற்றெடுத்த வைத்திய கலாநிதி ஐயம்பிள்ளை சோமசுந்தரம் தனது ஆரம்ப கல்வியினை அனலைதீவு சதாசிவ ஆங்கில பாடசாலையில் கற்றுள்ளார். இவர் தனது மருத்துவக்கல்வியை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் பெற்று பல்வேறு திறமைச் சித்திகளுடன் L.M.S பட்டம் பெற்றார். எமது கிராமத்திலிருந்து வந்த முதல் மருத்துவர் என்ற பெருமை இவருக்கே உரியதாகும். இவர் தனது முதல் பதவியினை மலேசியா நாட்டின் பினாங் நகரில் (Penang City) 01-02-1931 ம் ஆண்டு மேற்கொண்டார். ... Read More »

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்! Reading is good for Human Brain! வாசித்தல் என்பது மூளைக்கு நன்மை பயக்கவல்லது உடலுக்கும் என்ன உடற்பயிற்சி என்பது மனதிலுள்ளது’’ Reading is to the Mind what exercise is to the Body?  (Sir Richard Steele) மானிட சமுதாய வாழ்விற்கு வாசிப்பு பழக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது என்று பிரபல எழுத்தாளர் William Somerset Maughamகூறியுள்ளார். ‘If you once learn how to read, you’re forever more a free person.” ... Read More »

புழக்கப் பண்பாடு – (Material Culture)

ஒரு சமூகம் ஒன்றிணைந்து அதிலே உள்ள சகலரையும் ஏதோ ஒரு வகையில் உறவினராகக் கொண்டு நடக்கின்ற குழுமத்தையே சமுதாயம் (Community)என்று கூறுவார்கள். இந்த சமுதாயத்தின் வாழ்வில் அதனுடைய நடைமுறைப் பண்பாடு/ பண்பாட்டுப் பழக்கம் என்பது மிக முக்கியமானவொன்றாகும். எந்த ஒரு சமுதாயமும் இயங்குவதற்கு அதனுடைய பண்பாட்டு நடைமுறைகள் மிகமிக முக்கியமானவை. இந்தப் பண்பாட்டு நடைமுறைகள் என்று கூறும் பொழுது அவை ஒரே நேரத்தில் அந்தச் சமுதாயத்தினுடைய வரலாற்றுப் பேறுகளையும், அவர்களுடைய நடைமுறைத் தேவைகளையும் மாத்திரம் அல்லாமல் அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுடைய உறவின் பரஸ்பர தன்மைகள் ... Read More »

முப்பரிமாண நூலகம்

முப்பரிமாண நூலகம் சான்றாதாரக் கல்வியின் முதன்மை மூலகம் Three Dimensional Libraries Essential element for evidence based education சுருக்கம் (தற்போது நிலைகொண்டிருக்கும் நூலக முறைமைகளினூடாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடாக கருக்கொண்ட புதிய கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும். நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் கருவில் உதித்த இந்தப் புதிய கருத்துநிலையானது ‘சிந்தனைப் பதிவேடுகள் அன்றும் இன்றும்‘ என்ற தலைப்பில் நடமாடும் நூலகக் கண்காட்சியாக சுமார் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் 2009 ... Read More »

அமரர் ஸ்ரீமத் அருணாசலம் சின்னப்பா உபாத்தியாயர்

அமரர் ஶ்ரீமத் அருணாசலம் சின்னப்பா உபாத்தியாயரின் வாழ்க்கை வரலாறு: அனலைதீவு அருணாசலம் சின்னப்பா ஆசிரியர் அவர்களின் நினைவு குறித்துத் தொகுக்கப் பெற்ற அருட்பாடல் தொகுதி – 1954 இல் யாழ்ப்பாண விவேகானந்த அச்சகம் வெளியிட்ட நூலில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் பிறப்பிடமாகவும் அனலைதீவின் சைவ வேளாண் பரம்பரைச் பிரபுவும் பேராசிரியருமாய் விளங்கிச் சிவபதமடைந்த ஶ்ரீமத் அ. சின்னப்பா உபாத்தியாயர் அவர்களின் சரித்திரச் சுருக்கம். சப்த தீவுகளுள் ஒன்றாய் விளங்கும் உயர்தனிச் சிவஷேத்திரமாகிய அனலைதீவிலே இற்றைக்கு(2012 படி 150 வருடங்கள்) தொண்ணூற்றிரண்டு ஆண்டுகளின் ... Read More »

Scroll To Top