Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் (page 3)

பதிவு வகை: கட்டுரைகள்

Feed Subscription

உடுத்துத்திரியும் எருமைமாடுகள்

நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன் அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை புரண்டு படுக்கும் சேற்றுத்தண்ணீர் வற்றிப்போன நாள்முதல் எருமைமாடுகள் உடுக்கத் தொடங்கியுள்ளன. தங்கள் லிங்கம் வெளியே தெரியாதபடி அம்மணத்தைக் கண்டு குழந்தைகள் அருவருக்காதபடி அழகாக உடுக்கின்றன. பட்டுப்பீதாம்பரத்துக்கும் சுங்கான் பிடித்து புகை விடுதலுக்கும் வெளிநாட்டுச் சரக்குகளில் மிதப்பதற்கும் உடுத்துத் திரியவேண்டும் என்று கரிக்குருவி ஒருநாள் சீட்டியடித்துச் சொன்னதாம். யாருக்குத் தெரியும் மனிதர்களின் ஆடைகளைப் பிடுங்கி எல்லா விலங்குகளுக்கும் விற்றுவிடும் காலம் ஒன்று எருமைமாடுகளின் புண்ணியத்தில் கிடைக்கவும் கூடும்.   ஆக்கம் – துவாரகன் Read More »

கொம்பு முளைத்த மனிதர்கள்

புதிய நட்சத்திரங்கள் வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல் வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு கொம்பு முளைக்கத் தொடங்கியது. கோயிற் கச்சான் கடையில் விற்பனைக்கு வைத்த மிருகங்களின் வால்களையும் காதுகளையும் விருப்பமானவர்கள் அணிந்து கொண்டார்கள். மாடுகள் போலவும் நரிகள்போலவும் நாய்கள் போலவும் குரங்குகள் போலவும் ஓசையிடக் கற்றுக்கொண்டார்கள். தாவரங்களையும் கிழங்குகளையும் தின்னத் தொடங்கினார்கள். ஆற்றில் நீர் குடிக்கவும் சுவடறிந்து இடம்பெயரவும் இரைமீட்கவும் பழகிக் கொண்டார்கள். வீடுகள் எல்லாம் வெறிச்சோடின. காடுகள் எல்லாம் புதிய மிருகங்களால் நிரம்பி வழிந்தன. உண்மை மிருகங்களின் கொம்புகளும் காதுகளும் உதிர்ந்து கொண்டிருக்க, மீண்டும் ... Read More »

நீத்துப்பெட்டி

இன்றும் கிராமம், நகரப்புறங்களில் பாவனையில் உள்ள நீத்துப்பெட்டி எம் முன்னோர்களால் எங்களுக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட்டாலும் காலை, இரவு வேளை உணவுகளில் பெரும்பாலும் பிட்டு காணப்படும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எல்லா வீடுகளிலும் ஒரு வேளையென்றாலும் பிட்டு சாப்பிடுவார்கள். அந்தளவிற்கு இந்த உணவு பிரபலமாக உள்ளது. அரிசி மா, கோதுமை மா கொண்டு தயாரிக்கப்படும் பிட்டு அவிப்பதற்காக இந்த நீத்துப்பெட்டி பாவிக்கிறார்கள். இது பெரும்பாலும் பனை ஓலை கொண்டு இழைக்கப்படும். தற்போது பிரம்பு கொண்டு இழைக்கப்பட்ட நீத்துப் பெட்டிகளும் ... Read More »

அது அவர்களின் உலகம்

அழு வாய்விட்டு அழு கண்ணீர் தீரும்வரை அழு நெஞ்சடைக்கும் பாரம் குறையும்வரை அழு உன் உண்மை முகத்திலிருந்தும் ஈரம் நிறைந்த உள்ளத்திலிருந்தும் எழுந்து வரும் கண்ணீரும் ஓலமும் உனக்கான உலகம் என்றாகிவிட்டது. அது அவர்களின் உலகம் அந்த உலகின் சொற்கள் நஞ்சூறியவை அந்த உலகின் முகங்கள் போலியானவை அதில் நீ சஞ்சரிக்கமுடியாது. உன் ஓலம்… ஒரு பறவையின் சிலுசிலுப்பு மட்டுமே. மரத்துப்போனவர்கள்! ஆக்கம் – துவாரகன் Read More »

வெள்ளாடுகள்

இந்த ஆடுகளை என்னதான் செய்வதாம் எப்படித்தான் சாய்த்துச் சென்றாலும் வழிமாறிவிடுகின்றனவே? ஆடுகளிலே ஆவலாதிப்படுவன இந்த வெள்ளாடுகள்தானாம்! அம்மம்மா சொல்லுவா… ‘சரியான பஞ்சப் பரதேசிகள்’ என்று கண்டதெல்லாத்திலயும் வாய் வைக்குங்கள் முருங்கையில ஒரு பாய்ச்சல் பூவரசில ஒரு தாவல் பூக்கண்டில ஒரு கடி மேய்ச்சல் தரவையில சரியா மேயாதுகள் இந்த ஆவலாதிப்படும் ஆடுகளை என்னதான் செய்வதாம்? சத்தம் போடாம கட்டையில கட்டவேண்டியதுதான். ஆக்கம்- துவாரகன் Read More »

வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்

எல்லாம் கழுவித் துடைத்தாயிற்று எல்லாம் பூசி மெழுகியாயிற்று இரத்தக்கறை உருச்சிதைவு துருத்தும் சுவடு எல்லாம் கடின உழைப்பில் முடிந்தாயிற்று நீ இன்னும் கனவுகளையும் நினைவுகளையும் காவித் திரிகிறாய் சித்தங் கலங்கியிருக்கிறாய் செத்த பிணத்தின் நினைவைச் சுமந்திருக்கிறாய் உன் பிஞ்சின் சிதறலை அள்ளி மடியில் வைத்துக் கொண்டிருக்கிறாய் நான் தந்துள்ள வண்டின் ரீங்காரத்தையும் செல்லங் கொஞ்சுங் கிளிகளையும் கண் சிமிட்டும் மின்மினிப் பூச்சிகளையும் ஏற்க மறுக்கிறாய் திருவிழாவில் மிஞ்சிப் போனவை வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளுமே ஆட்காட்டிக் குருவியொன்று சத்தம் போட்டுச் சொன்னது. ஆக்கம் – ... Read More »

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்

அடி அழகி, இவ்வளவு காலமும் குளத்துத் தெருவோரம் வெறும் திரளைக் கற்களை பொறுக்கிகொண்டிருந்தேனே! என் காலங்களைக் கரைத்து விட்டேனடி! செல்லத்துரையரும் …காத்தானும்… குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும்… பெரியவளவு முதலியாரும்… உன் வீடு வந்து போகும்போதெல்லாம் பொறாமை கொண்டேனடி. என் காலங்கள் வீணானதடி. உலகத்தீரே, என்னைப் பொறுத்தருள்வீர். நான் கிறுக்கியதைப் பொத்திக்காத்து பொக்கிசமாய் பொத்திவைத்தேன். அந்த ஏடுகளைச் சிதைத்தவரே. மிச்சமிருப்பனவும் தருவேன் தீயிட்டுப் பொசுக்குவீர். கனகி, அவள் அழகி. அவள் கொண்டை ஆயிரம் பொன்பெறும். அவள் நகக்கண்களில் அழுக்கெடுக்க என்னையும் சேர்த்திடுவீர். அவள் பேச்சின் ... Read More »

நாங்கள் மனிதர்?

எத்தனை மனிதர் எத்தனை முகம் எத்தனை குணம் எத்தனை குரூரம் ஒரு பொம்மையைக்கூட… கைவேறு கால்வேறு கழற்றிப்போட மனம் பதறுகிறது. ஒரு சைக்கிளைக் கழற்றிப் போட்டதேபோல் மனிதர்களைச் சிதைத்துவிடும் குரூரத்தை எங்களுக்கு யார் கற்றுத் தந்தார்? விடிகாலை, மண்வெட்டி தோளில் சாய்த்து மண்ணைப் பொன்னாக்கிய மனிதர் நாம். இன்று மனிதர்களைப் பிளந்து கொண்டிருக்கிறோம். ஆக்கம்- துவாரகன் Read More »

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்

அடி அழகி, இவ்வளவு காலமும் குளத்துத் தெருவோரம் வெறும் திரளைக் கற்களை பொறுக்கிகொண்டிருந்தேனே! என் காலங்களைக் கரைத்து விட்டேனடி! செல்லத்துரையரும் …காத்தானும்… குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும்… பெரியவளவு முதலியாரும்… உன் வீடு வந்து போகும்போதெல்லாம் பொறாமை கொண்டேனடி. என் காலங்கள் வீணானதடி. உலகத்தீரே, என்னைப் பொறுத்தருள்வீர். நான் கிறுக்கியதைப் பொத்திக்காத்து பொக்கிசமாய் பொத்திவைத்தேன். அந்த ஏடுகளைச் சிதைத்தவரே. மிச்சமிருப்பனவும் தருவேன் தீயிட்டுப் பொசுக்குவீர். கனகி, அவள் அழகி. அவள் கொண்டை ஆயிரம் பொன்பெறும். அவள் நகக்கண்களில் அழுக்கெடுக்க என்னையும் சேர்த்திடுவீர். அவள் பேச்சின் ... Read More »

எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது

காலநீட்சியின் பின் எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது. மூத்தோருக்கும் காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும் மற்றோருக்கும் இயலாதபோது கைகொடுக்கும் ஊன்றுகோல் அல்ல இது. உடையாருக்கு குடை பிடிக்கவும் பக்கப்பாட்டுப் பாடவும் என் முதிர்ச்சிக்கு முன்னரே விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல். இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும். திண்ணையில் கதையளக்கும்போதும் அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். ஊன்றுகோல் பற்றியே இனி கனவுகாணவேண்டும். நடக்கும்போது சேறுபடாமல் பார்த்துக்கொள்ளவும், மிகப் பவித்திரமாக… குளிக்கும்போது அதற்கும் ஒரு நீராட்டு செய்யவும் சிந்திக்கவேண்டும். உக்கிப்போகாதபடி வர்ணம் பூசவும் வெள்ளி முலாமிட்ட கிரீடம் ஒன்றினை அதற்குச் சூட்டிக்கொள்ளவும் ஒருவரின் உதவியை ... Read More »

Scroll To Top