Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் (page 4)

பதிவு வகை: கட்டுரைகள்

Feed Subscription

படங்காட்டுதல்

தெருவுக்கொரு தியேட்டர் பொழுதுக்கொரு புதுவரவு யார் காட்டும் படத்தை முதலில் பார்ப்பது? பற்களிள் இடுக்குகளில் நரமாமிசம் கைகளெல்லாம் காய்ந்துபோன கறை தழும்பு கொண்ட முகமெங்கும் முகப்பூச்சு புன்னகை முகமென்னும் நினைவோடையில் தள்ளுவண்டில் சுண்டல்காரன்போல், கூவி அழைக்கிறார்கள். தகரக்கொட்டகைகளும் தறப்பாள் குடில்களும் காணாமற்போகும் நாள்வரும் என்று கூவி அழைக்கிறார்கள். நீங்களே நடித்து நீங்களே இயக்கி நீங்களே அனுமதிச்சீட்டு எடுத்து உங்கள் படங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். மழைவெள்ளம் தேங்கிய என் வீட்டுமுற்றத்தையும் சரிந்து கிடக்கும் தகரக் கொட்டகையையும் நான் சரிப்படுத்தவேண்டும். Read More »

அழுக்குப் போக்குவது எங்ஙனம்?

உடலின் அழுக்குப் போக்க கடலில் நீந்தலாம். குளத்தில் முக்குளிக்கலாம். கிணற்று நீரை அள்ளிச் சூடுபோகக் குளிக்கலாம். தொட்டியில் நீர் நிரப்பி நீந்தி விளையாடலாம். மனத்தின் அழுக்குப் போக்க வழியுண்டா? ஞானிகளும் யோகிகளும் அறிவுநிறை சான்றோரும் எத்தனையோ வழிகள் சொன்னார்கள். ஆனால், ஒதுக்குப்புறம் நாடியல்லவா அவர்களை நெருங்குகிறோம்? மூதுரை… நல்வழி… எல்லாவற்றையும் போகிற போக்கில் ஒரு குப்பைக்கூடையில் வீசிவிட்டுச் சென்றுகொண்டே இரு. அகமும் புறமும் அழுக்கு நிரம்பியவன்தான் இந்த உலகின் அதி உன்னத மானிடன் !   ஆக்கம் – துவாரகன் Read More »

கள் முட்டி

யாழ்ப்பாணத்தில் பனை, தென்னையிலிருந்து கள் எடுக்கப்படுகிறது. அதிலும் பனங்கள்ளிற்கு தனி மரியாதை உண்டு. கள் என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது கூவில் கள் தான். இங்குள்ள கள் ஏனைய இடங்களை விட மிகவும் இனிமையானது. உடனடியாக எடுக்கப்பட்ட கள்ளில் பெருமளவு சத்துக்கள் உள்ளபடியால் ஆரோக்கியத்திற்கு உகந்தது. அத்துடன் உடலிற்கு குளிர்மையுமானது. எமது மூத்தவர்கள் இந்த இயற்கையான பானத்தையே தமது வெம்மையை போக்க பாவித்தனர். முன்னர் தோசை, அப்பத்திற்குரிய மாவைப் புளிக்க வைக்கவும் கள்ளைப் பாவித்தனர். இப்படித் தயாரிக்கப்படும் உணவிற்கு தனிச் சுவையும் இருக்கும். பனையில் ... Read More »

அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான். தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’ எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய் வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை வெளித்ததென் றெண்ணி துன்பம், துயர்,பயம் தனையே நித்தம் அறுத்தும் எடுப்பதால்… அன்று விதைத்தோரில் சாபம் இடுகிறோம். நல்ல விதைகளை நமது முன்னோர் அன்று நட்டி ருப்பின்இன் றிடர்களே காய்க்குமா? நல் வினைகளை முன்னோர் புரிந்திருந் தால்… நாம் இன்றுதீ வினையைச் சுமப்பமா? இல்லை… நம் முன்னோர் செய்த பழிபாவம் எம்மைச் சூழ்ந்தது, இன்றும் வதைக்குது! தொல்லை ... Read More »

மின்மினிகளை நம்பி

சூரியன் இருந்து சுடர்ந்து அரசாளத் தோன்றிய பகலாய் ஒளிர்ந்தது பெருவாழ்வு! சூரியன் மறைய, நிலவும் தொலைந்துபோன பேயிருளில், மினுங்கித் திரிகின்ற மின்மினிப் பூச்சிகளின் ஒளியாய்… கண்கூச வைக்கிறது காண்…இன்றை வாழ்வு! சூரியன் தொலைந்துபோனான்! யாராரோ மின்மினிகள் சூழ்ந்துவந்து “இருள்விரட்டி மீட்போம் பகலை” யெனக் கைநீட்டி தம்ஒளியின் பின்னால் வருகவென்று அழைத்துளன. சூரியனின் வண்ணப் பகல்நினைவுக் கேங்கி…அச் சூரியனின் இன்மையினை எண்ணி, “மின்மினிதான் சூரியனோ” என்று சூரியனை அறியாத சேய்கேட்க என்சொல்வ தென்று இளைத்துவாடி மின்மினிகள் பின்சென்றெம் வெளியில் கயிறுதனைப் பாம்பென்றும்… பாம்பைக் கயிறென்றும்…பார்த்துக் கதிகலங்கிச் ... Read More »

கொட்டித் தீர்த்தல்

அமுத விழிகளிலே ஆறுகள் பெருகினவாம். கிளைத்திட்ட ஆறுகள் சேர்ந்து கடலாயிற்று. இதயங்கள் குமுறின எரிமலைக ளாக. குரல்கள் வெடித்தன இடிஇடித்தாற் போல. கேள்விகள் வெட்டின மின்னற் தெறிப்புகளாய். ஏது முடிவு?, பதில் எதுவரும்? என்றறியாது எங்களது நெஞ்சின் அவசங் களையெல்லாம் கொட்டினோம்… வேறு கொட்டும் இடங்களின்றி! அவர்கள் குப்பைக் கூடைகள் தானோ? அவர்கள் பணத்தை கறக்கும்உண்டியல் தாமோ? அவர்கள் குறைகளைக் கேட்கின்ற பெட்டிகளோ? அவர்கள் பாவ மன்னிப்புக் கூண்டுகளோ? அவர்கள் வெறுஞ்சட்டம் பேசுகிற நூல்வகையோ? அவர்கள்அறத் தீர்ப்புரைக்கும் நீதியின் காவலரோ? ஏதும் அறியோம்: இந்த ... Read More »

பொங்கல்

எம்மை வாட்டிய துயர இரா போகுது. எழுந்த விடிவெள்ளி தொலைவில் மினுங்குது. கும்மிருட்டின் கொடுமை குறையுது. கூவி ஊர்ச்சேவல்… “விடியு” மென் றார்க்குது. விம்மி அழுத துயரக் கனவுகள் வெடித்துக் கலையுது. கூசும் விழிகளை செம்மைக் கீற்றொளிக் கைகளால் சூரியன் திறக்கிறான்…புதுத் ‘தை’ மீண்டும் பூத்தது. திரண்ட கட்டியாய் அடர்ந்த இடர்வலி தீர்ந்து… யாவரும் சிறந்திட வில்லைதான். வரங்கள் எல்லாம் வசப்பட வில்லைகாண். மனங்கள் முழுதும் மகிழவும் இல்லையாம். திரண்டு சிறிது சிறிதாய் அமைதி…தோள் சேர..,துயர்தந்த கைகள்சோர்ந் தோய்ந்திட, அருணனின் சுடர் வாடும் இலைகளில் ... Read More »

தமிழர் பாரம்பரியம் மிக்க பூப்புனித நன்நீராட்டு விழா முறையாய் செய்வது எப்படி?

பூப்புனித நீராட்டுவிழா என்பது, பூப்படைந்தை பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா என பொருள்படும். அதாவது, பருவ வயதை அடைந்த ஒரு சிறுமி பால் முதிர்ச்சி அடைந்து (சிறுமியாக இருந்தவள் குமரியாக மாறும்) பருவ மாற்றம் பெற்று “பக்குவப் படும் போது” நடத்தப் பெறும் ஒரு சமயச் சடங்காகும். சந்தான விருத்தி (தாய்மை) அடையக் கூடிய பருவத்தை முதன் முதலில் பெறும்போது அதாவது முதல் கரு உற்பத்தியாகியதை (மாதவிடாய் வெளியானதை) காரணமாக வைத்து சமயச் சடங்குகள் செய்யப் பெறுகின்றன. இச் சடங்குகள் செய்வதன் மூலம் அப் ... Read More »

ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் வீரமணி ஐயர் (15/10/1931 – 08/10/2003)!

ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற ‘கற்பகவல்லி நின் பொற்பதம்’ என்ற பாடலை இயற்றியவர். யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணி ஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக ... Read More »

சென்று வா கோப்பாய் செந்தூரா! உன் கனவு நனவாகட்டும்!!!!

ரயில் வருகிறது என்றால், உனக்கு மரண பயம் வரும் என்று உன் அக்கா என்னிடம் கூறினாரே! ரயிலுக்கு பயந்த நீ எவ்வாறு துணிவு கொண்டாய் தண்டவாளத்தில் தலை வைத்து சாவதற்கு அதற்குள் நீ தண்டவாளத்தில் தலை வைத்து சாக முற்பட்தை அவதானித்த ரயில்வே ஊழியர் பிடித்து இழுத்து வந்த போது உன் மனம் மாறியிருக்க வேண்டும் ஆனால் மீண்டும் நீ எங்கோ ஒளித்திருந்து ரயில் கிட்ட வரும் போது இரண்டாவது தடவை ஓடிச்சென்று ரயிலில் மோதி உயிர் விட எவ்வாறு மனது வந்தது உனக்கு!!!!! ... Read More »

Scroll To Top