Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / கட்டுரைகள் (page 5)

பதிவு வகை: கட்டுரைகள்

Feed Subscription

‪ரஷ்ய‬ விமானம் விபத்துக்கு முன்பாக தொழில்நுட்ப பிரச்சினை கட்டுப்பாட்டறைக்கு‬ தெரிவித்த விமானி

எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ் பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான ‪#‎KGL‬-9268 என்ற A-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 217 பயணிகள், 7 ஊழியர்கள் பயணம் செய்தனர். ஆனால், விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது. விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ... Read More »

ஈடிணையற்ற புகழ்பூத்த வயலின் மேதை உ.இராதாகிருஷ்ணன் அவர்களை இழந்தது ஈழதேசம்.

ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை உ.இராதாகிருஷ்ணன் அவர்கள் நல்லைக்கந்தன் திருவடியில் (06.09.2015) அன்று காலமானார். (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் காலமாகி விட்டதை மருத்துவர்கள் அங்கே உறுதிசெய்தனர். நம்ப முடியவில்லை அவரது மறைவை. ... Read More »

அனலைதீவு ஐயனாா் தோ்த்திருவிழா!

அனலை சூழ்ந்துள்ள அலை பொங்கும் ஆழியாம் புனலில் மிதந்து வந்த புண்ணியனே!– கனலை கையிலே ஏந்தியசெங் கருத்தாவின் கைபிறந்த ஐயனே இன்னருளைத் தா. கூழா வடியுறையும் குகனுக்குச் சோதரனே கேளா திருக்குமோ நம்ஓலம்?– வாளா திருத்தல் முறையோ திடா்வந்து சூழுங்கால் துரத்தல் உன்கடனே காண். நாட்டுக்கு நல்லாட்சி நல்கிடுக; நம்முடைய வீட்டுக்கு வீடு வெற்றியளி!– காட்டுக்குள் புலியேறி வந்த புனிதா புகழுடையாய் கலிதீரக் காத்தருள வா. Va Vadivalakaiyan Read More »

மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது!

மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது! வாக்காளனே! உன் வாக்குகளுக்கு விலை கூறி வாடிக்கையாளர்கள் வருவார்கள்! வசமிழந்து விடாதே! -நீ வாக்குகளுக்காய் வாங்கும் பணம் உன் மனசாட்சிக்கும் சேர்த்துதான்! உன் மனசாட்சிக்கு விலை வைக்கும் அரசியல்வாதிகள் நாளை உன்னையே விற்றுவிடுவார்கள்! – நீவாக்களிக்கும்போது உன் ஆள்காட்டி விரலில் இடும் மையால்தான் நாளை வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி கையொப்பம் இடுகிறாய்! மனசாட்சி உன்னோடே இருக்கட்டும்! மக்களின் ஆட்சி நன்றாய் மலர்திட நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது ,ஈழ அரசியலில் இவர்களை தவிர வேறு மாற்று கிடையாது, ... Read More »

இது கூத்தல்ல நிஜம்..!

ஆடிக் காற்று பாணன்குளத்தில்பட்டுத் தெறித்ததோ இல்லையோ பார்வையாளர்களின் எண்ணங்களை பட்டமாய் பறக்கவைத்த ஆற்றுகையே “இது கூத்தல்ல நிஜம்”. செயற்றிறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் சமகாலத்தின் தேவையொன்றினை பக்குவமாய் பறைசாற்றிய பொழுது நேற்று மாலை ஏழு மணி. ராணி என்கின்ற ஒரு தற்காலத்து சாதாரண தாய் ஒருத்தியின் கதையை காவியத் தலைவி பாஞ்சாலியுடன் தொடர்புபடுத்தி மக்கள் அனைவரும் பார்த்து உணரவேண்டிய விதமாய் அரங்கிற்கு படைத்த முறைமை அற்புதம். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவங்களையும் விளைவுகளையும் தோலுரித்துக்காட்டும் நவீன அளிக்கை இது. தினப் பத்திரிகைகளில் ... Read More »

சொல்லுங்கள் இது இயந்திர வாழ்க்கையா?

சின்ன வயதிலிருந்து இப்போது வரை புலம்பெயர் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என்று பலர் புலம்புகிறார்கள். அந்தக்காலத்திலேயே உதயன்-சஞ்சீவி துக்கடா கவிதைகளில் “என்ன இது நரக வாழ்க்கை” என்று கவிதை எழுதி கீழே கனடா கமல் என்று பெயர் போட்டிருப்பார்கள். “கொழும்பு லைப் பிஸி” என்பார்கள். அனேகமான புலப்பெயர் சிறுகதைகளிலும் ராசப்பாவோ, நல்லசிவமோ முதல் பந்தியிலேயே இந்த “இயந்திர வாழ்க்கையை” சபிக்கத் தொடங்கி விடுவார்கள். கடந்த பதினைந்து வருடங்களில் புலம்பெயர்ந்து மூன்று ஊர்களில், ஊருக்கு ஐந்தாண்டுகள் வீதம் வசித்துவிட்டேன். அப்படி என்ன தான் இயந்திர வாழ்க்கை? ... Read More »

அமிர்தலிங்கம் கொலையும், அதன் உண்மையான பின்னனியும்!

ஜூலை 13, 1989 அன்று அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கொழும்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னனியை நீங்கள் பின்வருமாறு காணலாம். இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முரணான வகையில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைகளை அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாச அவர்கள் இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்ற புலிகளுடன் சேர்ந்து எடுத்த நடவடிக்கை ராஜீவ் காந்தி அரசை சீற்றம் கொள்ள வைத்தது. அதன் விளைவு, சைப்பிரஸ் நாட்டின் உருவாக்கத்தை ஒத்த நடமுறையினூடு இலங்கையில் தமிழருக்கு ஒரு தனி நாட்டிற்கு சமமான அரசியல் அதிகார அலகை திரு அமிர்தலிங்கம் ... Read More »

சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு வரலாறு: என்னையும் விழுங்கிய வியப்பு!

கனடா தமிழ்த் தோட்டமும், டொரண்டோ பல்கலைக்கழகமும் இணைந்து ஹவாயில் வசிக்கும் வைதேகி ஹெர்பர்ட்டைக் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் விருது வழங்கிக் கவுரவித்தது. முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை ஆகிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் சிறப்புற மொழிபெயர்த்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி அவரை நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் அவர் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். “சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டில் இதுவரை வேறு ஒருவரும் ஒரு நூலுக்கு மேல் முழுமையாக மொழி பெயர்த்ததில்லை; சங்கத் தமிழ் இலக்கியம் அறிந்த ... Read More »

தேர்தல் கவிதை – 01 ஒரு நள்ளிரவிற்குப் பின்

தேர்தல் கவிதை – 01 ஒரு நள்ளிரவிற்குப் பின் ————————————————————- வெற்றிலை கொப்பளித்து துர்நாற்றம் வீசும் எச்சில் வாய்களோடு – சிலர் இனிச் சிலகாலம் எங்கள் காலடிகளைச் சுற்றிவருவார்கள் என் அக்காளையும் அண்ணன்களையும் புனிதர்கள் என்று புகழ்வார்கள் கல்லறைகளை கடவுளர்களின் கோயில்களாக்குவதாய் கதைவிடுவார்கள் இருக்கிறதை வைத்துக்கொண்டு இல்லாததைப் புடுங்குவோம் என்பார்கள் பல்லுக்காட்டி சொகுசு வாகனம் வாங்கமாட்டோமென்பார்கள் மத்தியில் அரசோடு ஒட்டு-உறவில்லை என்பார்கள் பின் எங்கள் விடுதலைக்காய் – இரகசிய ஒப்பந்தங்கள் பல செய்ததாய் பிதற்றுவார்கள் எங்கள் வீட்டு மதில்களில் பல்லை இளிப்பார்கள் தாங்களே எங்கள் ... Read More »

இன்றைய நாளின் சிறப்புக்கள் வரிசையில் சூன் 28 தாவீது அடிகளின் பிறந்த தினம்

சூன் 28 – இன்றைய நாளின் சிறப்புக்கள் வரிசையில் இன்று தாவீது அடிகளின் பிறந்த தினம் என்பதை நினைவு கூறுவதில் பெருமை கொள்வோம். 1907 சூன் 28 அன்று தும்பளை, யாழ்பாணத்தில் சிங்கராயர் தாவீது பிறந்தார். “எங்கள் மண்ணில் நாம் உயிரையே வைத்திருக்கின்றோம்” என்றும் “எம் இனத்தின் உடமைகளுக்கு ஒன்று ஆனால் நான் உயிரோடு ஒரு பொழுதும் இருக்க மாட்டேன்” என்றும் சொல்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் அதற்காக எல்லோரும் உயிரை விட்டு விடுவதில்லை. ஆனால் தாவீது அடிகள் தமிழ் மேலும் தமிழர் கல்வி செல்வம் ... Read More »

Scroll To Top