Saturday , April 29 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா

பதிவு வகை: சினிமா

Feed Subscription

தெறி வசூலை முறியடிக்க தவறிய பாகுபலி 2

பாகுபலி 2 இந்தியா முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாய்க்கும் மேல் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சென்னை பகுதி வசூல் விவரங்களை பாப்போம். முதல் நாளில் சென்னையில் மட்டும் 91.4 லட்சம் ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது, இது இளையதளபதி விஜய் நடிப்பில் சென்ற வருடம் வந்த தெறி படத்தின் முதல் நாள் சென்னை வசூலை விட 10 லட்சம் ரூபாய் குறைவு. டாப் தமிழ் ஹீரோக்களின் படங்கள் அளவிற்கு பாகுபலி 2 ... Read More »

சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். சொல்லவந்ததை தெளிவாக எடுத்து பேசக்கூடியவர். சமீபத்தில் இவருக்கு கன்னடர்கள் காவிரி விசயத்தில் தங்களை எதிர்த்தாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார். இதையொட்டி இன்று படம் வெளியானது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் உணர்ச்சிவசமிக்க கருத்துக்கள் கொண்டு சத்யராஜ்க்கு கட்டவுட் வைத்துள்ளனர். மேலும் பலர் அவருக்கு தேசிய விருது கிடைப்பது உறுதியென கூறியுள்ளனர். Read More »

நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்

பிரேமம் நாயகன் நிவின் பாலியின் தமிழ் படம் எப்போது வரும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர் தமிழில் ரச்சி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த புதிய படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக நிவின் பாலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாடுவதோடு, நிவின் பாலிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். Read More »

பாக்ஸ் ஆபிஸையே திணறடித்த பாகுபலி 2 பிரம்மாண்ட வசூல்

கடந்த சில வருடமாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவே காத்துக் கொண்டிருந்த படம் பாகுபலி 2. படமும் நேற்று ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருந்தது. படத்துக்கு ஏகபோக விமர்சனம் வர பாக்ஸ் ஆபிஸிலும் புரட்சி செய்துள்ளது. ரசிகர்களும் படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை அரிய ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் இந்தியா முழுவதும் Nett அடிப்படையில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது. AP/TG – 45 Cr Hindi – 35 Cr TN – 12 Cr KA – ... Read More »

அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?

அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து வருபவர் விவேக் ஓபராய். இவர் அவ்வப்போது பல்கேரியாவில் நடக்கும் படப்பிடிப்பின் போது அங்கு எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்வார். அந்த வகையில் அவர் சமீபத்தில், மேற்கு பல்கேரியாவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விவேகம் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், பனிகள் சூழ்ந்துள்ள இந்த பகுதியில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது என டுவிட் செய்துள்ளார். குளிரில் இந்த நீச்சல் குளத்தில் குளிக்கும் தைரியம் யாருக்காவது உண்டா என கேட்டுள்ளார்   Read More »

தங்கல் வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, முழு விவரம்

கடந்த வருடம் வெளிவந்த தங்கல் படம் ரூ 730 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இப்படத்தின் சாதனையை பாகுபலி-2 தான் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது தங்கல் முன்பதிவு சாதனையை பாகுபலி-2 முறியடித்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட டிக்கெட் முன்பதிவு தளத்தில் மட்டும் இதுவரை 1 மில்லியன் டிக்கெட் விற்றுள்ளதாம். மேலும் நேரடி முன்பதிவு, மற்ற தளங்களில் வரும் முன்பதிவு இதை வைத்து பார்க்கையில் பாகுபலி-2 வசூலில் எளிதாக தங்கலை முறியடித்துவிடும் என தெரிகின்றது. Read More »

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா இதுவரை இரண்டாம் கட்ட நடிகர்களுடன் தான் நடித்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்கள் என யாருடனும் ஜோடி சேரவில்லை. ஆனால், விஜய்-61ல் ஜோதிகா வெளியேற அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பதாக இருந்ததாம். இதற்காக அட்லீயும் அவரை சென்று பார்க்க, அந்த நேரத்தில் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட் ஆகியுள்ளார். அந்த படத்தின் கால்ஷீட் பிரச்சனையால் தான் விஜய்-61ல் நடிக்க முடியவில்லை என ஸ்ரீதிவ்யா வருத்தமாக கூறியுள்ளார். Read More »

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி

அட்லீ இயக்கத்தையும் தாண்டி தற்போது தன்னுடைய புது நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருக்கிறார் அட்லீ. அண்மையில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ பேசும்போது, எனக்கு ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் அவரை என்னுடைய படத்தில் நடிக்க கேட்டேன். ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டார் என்றார். ஆனால் எந்த படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லை ... Read More »

டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடமாகும் விஜய்யின் ஹிட் படம்

நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களில் மிகவும் பிரபலமானவர் சேத்தக் பகத். இதுவரை அவர் 9 நாவல்களை எழுதியுள்ளார், அதில் சில படமாகும் உருவாக்கப்பட்டது. அண்மையில் கூட அவர் எழுதிய Half Girlfriend என்ற புத்தகம் அர்ஜுன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிக்க அதே பெயரிலேயே படமாக்கப்பட்டு வரும் மே 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் எழுதிய Five Point Someone என்ற கதை தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக அமைய இருக்கிறதாம். இந்த நாவலை தழுவி தான் அமீர்கான் நடித்த 3 ... Read More »

தமிழ்நாட்டில் மட்டும் பாகுபலி 2 படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

பாகுபலி 2 பட தகவல்கள், பாடல்கள், டிரைலர் என ரசிகர்களை எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் வைத்துள்ளது. இதுநாள் வரை பொறுமையாக இருந்த ரசிகர்கள் ஒரு வழியாக இன்று படத்தை பார்த்துவிடலாம் என்று சந்தோஷத்தில் உள்ளனர். உலகம் எங்கும் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களுக்கு விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட சில பிரச்சனையால் இன்னும் படம் வெளியாகவில்லை. காலையில் இருந்து திரையிடப்பட இருந்த எல்லா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகள் எப்போது தீர்ந்து படம் வெளியாகும் என்பது தெரியவில்லை Read More »

Scroll To Top