Thursday , August 17 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / ஈழத்து சினிமா (page 2)

பதிவு வகை: ஈழத்து சினிமா

Feed Subscription

ஈழத்து இசையமைப்பாளர்களான மதீசன் மற்றும் தர்சனன் இணைந்து மொக்கை பாடல்!

வளர்ந்து வரும் இளம் ஈழத்து இசையமைப்பாளர்களான மதீசன் மற்றும் தர்சனன் இணைந்து மொக்கை பாடல் என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். பலரது எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த பாடல் ஆனது சில நிமிடங்களுக்கு முன்னர் இணையத்தில் தவழ விடப்பட்டிருக்கிறது. இப்பாடலை இருவரும் பாடியிருப்பதுடன் பாடல் வரிகளை கேகேஎன் எழுதியுள்ளார். பாடல் இசையை மதீசன் வழங்கியுள்ளார். Read More »

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வரலாற்றுப்புகழ் பாடும் “அற்புதகீதங்கள்”

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மனின் வரலாற்றுப்புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” என்ற இறுவட்டு 02/08/2015 (ஞாயிற்றுக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளதனை மிக்க மகிழ்வோடு அறியத்தருவது மட்டும் அன்றி அனைத்து அன்னையின் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம். பாடலுக்கான இசையினை ஈழத்து இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் மிகவும் அற்புதமாக வழங்கியிருக்கின்றார். ஜெயநாதன் மற்றும் எனது கவிவரிகளுக்கு இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் S.G.சாந்தன், K.ஜெயரூபன், S.கோகுலன், S.சுலக்சன், பிரதா.K, S.G.கோபு,நெடுங்கேணி ராஜேந்திரா அவர்கள். மேலும் ... Read More »

கிராமிய பாடலுக்கான சிறந்த விருது பெற்ற படைப்பு!

நம்மவர்களது படைப்புக்களில் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிராமியப் பாடலுக்கான இலங்கை தேசிய விருது கிடைத்த பாடல். பாடலைப் பாா்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். இசை : கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் : கவி.அகிலன் பாடியவா்கள் : ஜெயப்பிரதா, ஜெயரூபன் இயக்கம் : எஸ்.வினோத் ஒளிப்பதிவு : பிரியந்தன். Read More »

குணா கவியழகனின் விடமேறிய கனவு…அற்புதமான போர் இலக்கியம்

குணா கவியழகனின் விடமேறிய கனவு. சாட்சியம் இன்றி அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இனப்படுகொலை யுத்தத்தின் சொல்லப்படாத அவலங்களின் பக்கங்களை வலிகள் குன்றாமல் எடுத்து வந்திருக்கும் இந்த காலத்தின் அற்புதமான போர் இலக்கியம்! நாவலின் முன்பாகம் கதை சொல்லியின் அனுபவங்களை கோர்த்து இரத்தம் உறைய வைக்கும் சிங்கள இராணுவத்தின் சிறைச்சாலை சித்திரவதை விசாரணை கொடுமைகளை கண்ணீர் பெருகி ஓடும் வகையில் சொல்கின்றது. கைதிகளான போராளிகளின் மன உணர்வு போராட்டங்கள் சித்திரவதை வலிகளை சொல்லு சொல்லாக சமகாலத்தில் கண் முன்னே கொண்டு வந்து வலிகளை துல்லியமாக உணரும் ... Read More »

யோ.புரட்சின் ‘வித்தியா கீதங்கள்’

‘வித்தியா கீதங்கள்’ இறுவட்டின் பதினொரு பாடல்களில் ஒரு பாடல் யோ.புரட்சி படைத்தது. ‘புங்குடுதீவில் பூவொன்று உதிர்ந்த’ பாடலை யூ ரியூப் தளத்தில் இந்த இணைப்பின் மூலம் கேட்கலாம். வித்தியா கீதம்.. புங்குடுதீவில் பூவொன்று (பாடல்வரிகள்,யோ.புரட்சி, பாடியவர் எஸ்.பி ரூபன், இசை சி.ரமேஸ், தயாரிப்பு கிளியூர் ரமணன், சி.ரதீஸ். Read More »

யாழ் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர்களது வெளியீடு!

யாழ்ப் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 2015 தொழில்நுட்ப பிரிவு மாணவர்களின் 06-06-2015  தினம் நடைபெற்ற பிரியாவிடையில் போது அவர்களது நட்ப்பின் நினைவாக வெளியிட்ட பாடல் இதோ உங்களுக்காக கேட்டு மகிழுங்கள். இசைக்குழுமத்தினருக்கு எமது பாராட்டுக்கள். குறிப்பாக பாடலின் சந்தங்களுக்கேற்ப இசையினது நுணுக்கங்கள் அமையப்பெற்றுள்ளமையினால் கேட்பவர்கள் மனங்களினை ஒருவித பிரிவுணர்வுடலான உந்துதலுக்கு உள்ளாக்குகின்றது. எதிர்வரும் காலங்களில் இப்பாடல் நம்மவர் பகுதியில் அனலை FM இணையவானொலியில் கேட்டு மகிழலாம். இப்பாடல் தொகுப்பில் இணைந்து பணியாற்றிய அணிசேர் கலைஞர்கள் விபரம் வருமாறு:- Peterson: S.Sivaneswaran Master in charge & Adviser: ... Read More »

யாழில் வெளியாகியுள்ள இலவு குறும்படத்தினது கண்ணோட்டம்! (காணொளி இணைப்பு)

வி கிரியேஷன்ஸ் (இலங்கை) சார்பில் கானா வரோ தயாரித்து இயக்கிய ‘இலவு’ குறும்படத்தின் வெளியீடானது கடந்த வருடம் யாழில் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் கவிமாறன் சிவா அவர்கள் கௌரவ வேடத்தில் நடத்துள்ளார். இக்குறும்படத்தினுாடாக 02 முக்கிய சமூக விழிப்புணர்வினை கூறிவிட்டு செல்கின்றார் இயக்குனர். முதலாவது கல்வி என்பது முக்கியமானது அதனை பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுத்து வழங்க வேண்டும் என்பதுடன் யாழில் மாப்பிள்ளை புறோக்கர்களுக்கும், வெளிநாட்டு மாப்பிள்ளைமாருக்கு யாழிலுள்ள பெற்றோர் கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை மிகவும் நாசூக்காக எடுத்தியம்புகின்றார். இருப்பினும் கதை விறுவிறுப்புத்தன்மை மிகவும் குறைந்துள்ளமையால் இளைஞர்கள் மத்தியில் ... Read More »

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த அகதியினை மையமாகக் கொண்ட Dheepan பிரான்ஸில் Red Carpet கௌரவத்தினைப்பெற்றுள்ளது!

பிரான்ஸ் நாட்டில் பெருவிமர்சையாக  17 ம் திகதி மே மாதம் 2015 ம் ஆண்டில் கொண்டாடப்பட்ட 68th Cannes Film Festival நிகழ்வில்  RED CARPET (சிவப்பு கம்பள வரவேற்பு) என்பது மிகவும் முக்கியநிகழ்ச்சி நிரலாகும். பல்வேறுபட்ட திரைப்படத்தயாரிப்பாளர்கள்,  சர்வதேச நாடுகளினது Hollywood நடிகர்கள், நடிகைகள் எனப்பபலரும் வரவேற்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்கள். ஈழத்திலிருந்து நாட்டுப்பிரச்சனைகளால் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழுகின்ற தமிழ் அகதிகளினது வாழ்வியல் சுமைகளைத்தாங்கிய கதைக்களமாக Jacques Audiard’s  என்பவரால் இந்த Dheepan என்ற  Tamil emigre drama அமையப்பெற்றுள்ளது. அந்நிகழ்வில் ஈழத்தழிர்களாகிய இந்த நாடகத்தினது ... Read More »

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம்!

சினிமா என்பது ஓர் உன்னதக் கலைச் சாதனமாகும். எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரபலமான கலையாகும். வேடிக்கையாக ஆரம்பித்த சினிமாக்கலை வேகமாக உலகமெல்லாம் பரவி அனைத்து மக்களையும் ஈர்த்து நிற்கின்றது. இந்தச் சினிமா, கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் எமது இலங்கை நாட்டில் சளைத்துவிடவில்லை. சர்வதேசப் பரிசில்களைப் பெறுமளவுக்குப் பல சிங்களப் படங்கள் இங்கிருந்து உருவாகியிருக்கின்றன. அந்தச் சிங்களப் படத்தொழிலை நம்பியே பல கலைஞர்கள் நிலைக்கத் தொடங்கி விட்டார்கள். அது பெரிய தொழிலாகவே மாறிவிட்டது. இந்த உயர்ந்த நிலை இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு ... Read More »

என் கனா உன் காதல் குறும்படம்

ஈழத்து சினிமாவை வலிமைப்படுத்தும் வகையில் நிறைய குறும்படங்கள் சமீபகாலமாக வெளிவர ஆரம்பித்துள்ளது. தற்போது ஆகாஷ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளியாகி இருந்த குறும்படம் என் கனா உன் காதல். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற முயலும் ஒரு கலைஞன், ஆனால் அவனுடைய காதலியோ அதை ஏற்றும், ஏற்காதவாரும் இருக்கிறாள். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள். ஒரு நிலையில், அவன் சினிமாவில் ஜெயிக்க, அவளோ காதலன் வெற்றியை பார்த்து வியந்து திரும்பவும் அவனிடம் வருகிறாள். இதுதான் குறும்படத்தின் கதைக்களம். விஷ்ணுவும், நிரோஷாவும் ... Read More »

Scroll To Top