Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / ஈழத்து சினிமா (page 4)

பதிவு வகை: ஈழத்து சினிமா

Feed Subscription

ஈழத்தின் இளம் இசையமைப்பாளர் மதீஸனுடனான சிறப்பு செவ்வி!

இன்று ஞாயிறு (15-02-2015) அனலை FM இன் கலைஞர்கள் அறிமுக சிறப்பு நிகழ்வில் இலங்கை நேரம் 11.30 மு.ப மணிக்கு ஈழத்தின் இளம் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் தனபாலசிங்கம் மதீஸன் அவரது சிறப்பு செவ்வி இடம் பெறவுள்ளது. இவரைப்பற்றிய சிறப்பு பதிவு யாதெனில் தமீழிழத்தின் சிறந்த இசையமப்பாளராக பலராலும் போற்றப்பட்ட இசைவாணர் கண்ணன் மாஸ்டர் மகன் முரளி (சப்தமி கலைக்கூடம் வளர்த்தெடுத்த முத்து) மேலும் யாழ் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவன் ஆவார். அது மட்டுமல்ல உதயன் இணையவானொலியி்ன் முன்னாள் அறிவிப்பாளரும் மற்றும் அனலை ... Read More »

புங்குடுதீவு மண்ணின் மைந்தன் பிரசாந்தின் காதலர் தின வெளியீடு

புங்குடுதீவு மண்ணில் பிறந்து தற்பொழுது கனடாவில் வசித்து வரும் இளம் பாடலாசிரியரான சோமசுந்தரம் பிரசாந் அவர்களின் தயாரிப்பிலும், பாடல் வரிகளிலும் சன்சைனின் இசையிலும் மற்றும் ஈழத்து படைப்பாளிகளின் ஒட்டு மொத்த உழைப்பிலும் 2015ம் ஆண்டு காதலர் தினத்திலே வெளியாகி உள்ளத்து யாரடி நீ….? என்ற அழகிய பாடலை எமக்கு படைத்துள்ளர். இப்படைப்பினை ஈழத்து மற்றும் புலம்பெயர் உறவுகள் இணைந்து  உருவாக்கியுள்னர். இக்குழுவினர்களுக்கு யாழ் மண்ணிலிருந்து புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் அனலை FM இணைய வானொலி மற்றும் அனலை எக்ஸ்பிறஸ் (நேரலை மீடியா) குழுமத்தினர் தமது வாழ்த்துக்களினைத் தெரிவித்துக்கொள்கின்றனர். Read More »

“சூப்பர் சிங்கர் ” ஜெசிக்கா ஜூட்ஸ் இன்று வைட் காட்டில் தெரிவானார் .

Super Singer “சூப்பர் சிங்கர் ” ஜெசிக்கா ஜூட்ஸ் இன்று முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக  தெரிவானார். கடுமையான பயிற்சியை மேற்கொண்ட இந்த இளம் கனடியப் பாடகி தற்போது நடை பெறும் போட்டியில் முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டுள்ளார். கூடுதலாக சர்வதேச உள்நாட்டு Votes  ஐ பெற்று வைட் காட்டில் இன்று தெரிவு செய்யப்பட்டார். இவர் மாத்திரமே இப்பொது இருக்கின்ற ஒரே ஒரு சர்வதேசப் போட்டியாளர் ஆகும். கடந்த பத்து மாதங்களாக மேற்கொண்ட கடும் பயிற்சி காரணமாகத் தனது பாடும் திறமையை வளர்த்துக் ... Read More »

ஈழத்தமிழரின் படைப்பில் உருவாகிய ஐScream பட Trailer நாளை வெளியீடு!

ஈழத் தமிழராகிய ரவி அச்சுதனின் உருவாக்கியுள்ள ஐ SCREAM திரைப்படத்தினது Trailer நாளை தைப்பொங்கல் தினமாகிய புதன் கிழமை (14-01-2014) அன்று கனடாவில் இடம்பெறவுள்ளது. அனைத்து வாசகர்களையும் அன்புடன் அழைக்கின்றனர் திரைப்படவெளீட்டுக்குழுவினர். Read More »

அறியப்படாத தாயக சிறுமியில் குரல்!

வன்னியில் அறியப்படாத திறமைகளில் இதுவும் ஒன்று சுவிஸ் நாட்டை தளமாக கொண்டியங்கும் சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான நிறுவன அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் கிளி.முகமாலையைச் சேர்ந்த தாயக சிறுமியின் பாடல். Read More »

புத்தாண்டு அன்று வெளியாகிறது ’நீ தந்த காயங்கள்’

பிரியந்தன் அவர்களின் இயக்கத்தில் ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் பாடல் நீ தந்த காயங்கள். ஜெரால்ட்இ மிதுனா ஆகியோர் நடித்திருக்கும் இப்பாடலுக்கு ரவிப்பிரியன் அவர்கள் இசையமைக்கஇ தென்னிந்திய சினிமா பாடகர்கள் ஹரிசரன் மற்றும் ஹரினி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். ஏற்கெனவே இப்பாடலின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில், இப்பாடல் வரும் 31ம் தேதி இரவு 12மணியளவில் வெளியாக உள்ளதாக பாடல் குழுவினர் தெரிவித்துள்ளனர். சினிஉலகம் ஊடக அணுசரனையில் வெளியாக போகும் இப்பாடல் அனைவரின் பாராட்டுக்களை பெற வாழ்த்துக்கள்.   Read More »

ஈழத்துப் படைப்பாகிய பாரதியார் பிறந்த தின சிறப்பு பாடல்!

முன்னேற்பாடான திட்டமிடல் இல்லாத போதும் குறுகிய கால இடைவெளிகளில்  வரலாற்றுக் காலங்களுக்கேற்ப தமிழ் வளர்த்த பாவலர்களுக்கு ஈழத்து படைப்பாளிகள் தமது நன்றியறிதலை தெரிவிக்க முனைகின்றனர். அந்தவகையில் வளர்ந்து வரும் எமது இசை கலைஞன் த.மதீஸன் அவர்கள் தனது திறமையினுாடாக வெளிப்படுத்த முனையும் இம்முயற்சி பாராட்டிற்குரியது. பாரதியார் பிறந்த தின சிறப்பு பாடல் – வீழ்வேன் என்று நினைத்தாயோ.. Read More »

உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள் வெற்றி பெறுவது உறுதி!

த. மதீசன் ஊடக இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி காணொளியாகத் தரப்படுகிறது. “சரியாக ஒரு வருடம் இருக்கும் எங்கள் பாடல் பிரசவித்து.யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் நண்பர்கள் நாங்கள் ஒன்றாக சேர்ந்து இந்தப்படைப்பை உருவாக்கினோம். வழமையான காதல் பாடல்கள் போலல்லாமல் ஏதாவது ஒரு சின்ன விசயம் சொல்ல ஆசைப்பட்டோம். அதை எம் பாடல் வரிகளில் புகுத்தினோம். இன்று அது சிறந்த பாடல் வரிகளுக்கான இலங்கை தேசிய விருது வரை கொண்டு சேர்த்துவிட்டது. எம் படைப்பு பட்டை தீட்டப்பட்ட வைரமாக இன்று ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு பல நல்லுள்ளங்களுக்கு நான் ... Read More »

ஈழத்து இளம் கலைஞர்களின் உருவாக்கத்தில் அட்டகாசமான பாடல்!

தென்னிந்திய சினிமா திரைப்படப் பாடல்களை வாய் பிளந்து பார்ப்பவர்கள் எம் ஈழத்து இளைஞர்களையும் திரும்பிப் பார்க்க வேண்டிய சூழல் இன்று உருவாகி விட்டது. எம் இளம் கலைஞர்கள் தாங்களும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று சமீப காலமாக நிரூபித்து வருகின்றார்கள். அந்த வகையில், ஆதவன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முதன் முறையாக மன்னார் மாவட்டத்தின் இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட “திரும்பி பாரடி” இசை அல்பத்தின் முதலாவது பாடல் வெளியீடு கடந்த 09.10.2014 அன்று மன்னாரில் நடைபெற்றது. இந்த பாடலின் வரிகள், இசை, காட்சியமைப்பு எல்லாமே மிக அழகாகவும் நேர்த்தியாகவும் ... Read More »

ஈழத்து11வயதுச்சிறுமி பிரணவி ஒளிப்பதிவில் குறும்படம்

ஈழத்தமிழர் சாதனை உலகெல்லாம் பரவிவருகிறது புலத்தில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி அவர்களின் மகள்.பிரணவி தனது 11வயதில் புதியசாதனையை புரிந்துள்ளார். புலிக்கு பிறந்தது பூணையாகுமா என்னும்வண்ணம் சாதனைபடைத்துள்ளார்.அன்றைய காலத்தில் பதினோரு வயதில் கமரா என்றால் என்ன என்று அறியாது இருந்தோம் இன்று தன் பதினோரு வயதில் இவ்வளவு லாவண்ணியமாக கமராவை கையாண்டுகுறுப்படம் எடுத்துள்ளது ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்துள்ளது. ரவி இந்த மண்ணில் பல நல்ல படைப்புக்களை நமக்கு தந்தவர் அவரது படைப்புகள் அற்புதமான படைப்புக்கள் அவரது பிள்ளையின் .முதலடியே அதிரடி ஒளிப்பதிவு . பலர் ... Read More »

Scroll To Top