Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / சினிமா / ஈழத்து சினிமா (page 5)

பதிவு வகை: ஈழத்து சினிமா

Feed Subscription

இதோ ஈழத் தமிழிசை!

ஈழத்துக் கவிதை மரபின் தனித்துவத்தை நெஞ்சை நிமிர்த்தி வரலாற்றில் எழுதியவர்களுள் மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் உருத்திரமூர்த்தியின் கவிதை மூன்றாவது தலைமுறையையும் கடந்து இன்றும் நிலைபெற்றுள்ளது. அரைகுறை ஆங்கிலம் கலந்து தென்னிந்திய கோப்ரட் சினிமாக்களின் ஊடாக தமிழ்க் கலை என்று அறிமுகப்படுத்தப்படும் அழுக்குகளுக்கு மத்தியிலும் மகாகவி உருத்திரமூர்த்தியின் படைப்புக்கள் உயிர்வாழ்கின்றன. அன்றைய யாழ்ப்பாண மீனவச் சமூகத்தின் அவலங்களை நெஞ்சை நெருடும் வகையில் புதிய கவிதை மரபின் வழியாக மகாகவி அறிமுகப்படுத்தினார். மாற்றுக் கலைகளே ... Read More »

“இலவு” குறும்பட வெளியீடு!

கானா வரோ இயக்கத்தில் கிருத்திகன், ஜெனனி, ரஜித், ஷாலினி சார்லஸ் ஆகியோர் நடிப்பில், வி கிரியேசன் தயாரித்த “இலவு” குறும்படம் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி அளவில் யாழ் நகரிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் திரையிடப்பட்டது. சுமார் 30 நிடங்கள் கொண்ட இக் குறும்படத்தில் வெளிநாட்டு மோகத்தால் ஈர்க்கப்பட்ட குடும்பம் ஒன்று மாப்பிளை பற்றிய விசாரிப்புக்களற்ற நிலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த தமது பெண்ணிற்கு அவசர கதியில் திருமணம் செய்து வைப்பதாகவும் திருமணத்தின் பின் மாப்பிளை பற்றி அறியக் கிடைக்கும் செய்திகளால் ... Read More »

ஈழத்திரைப்படங்களில் புறக்கணிக்கப்படும் ஈழத்துப் பேச்சுமொழி!

அண்மைக்காலமாக நம்மவர் படைப்புகளாக வெளிவரும் குறும்படங்கள் திரைப்படங்கள் போன்றனவற்றில் இருக்கக்கூடிய பெரிய பிரச்சினை என்னவெனில் பேச்சுமொழியை எவ்வாறு கையாள்வதென்பதே. ஒவ்வொரு குறும்பட மற்றும் திரைப்பட வெளியீட்டின்போதும் விமர்சனத்துக்குள்ளாகும் விடயமாக இப் பேச்சுமொழிப் பிரயோகம் காணப்படுகின்றது. உண்மையில் காட்சிமொழி ஊடகமாக அமையக்கூடிய திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களிலொன்று கதைக்கருவோடொட்டிய விடயங்களின்மீதான நம்பகத்தன்மையுமாகும். இதில் முதலிடம் பிடிப்பது எதுவெனில் அது பேச்சுமொழியே ஆகும். கதைக்கரு எந்த வட்டாரத்தைப் பின்னியதாக இருக்கின்றதோ அந்த வட்டாரத்தின் பேச்சுமொழியும் இணைக்கப்படவேண்டியது தவிர்க்கமுடியாததாகின்றது. இதை நாம் தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில்கூட தெளிவாக இனங்காணலாம். ... Read More »

ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்

கனடாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்/ஆங்கிலத் திரைப்படமான “ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்” A Gun & A Ring திரைப்படத்தைப் பற்றி இலக்கிய ஆர்வலர்கள் ஒரு விமர்சனக்கூட்டத்‌தை நேற்று ஒழுங்கு செய்திருந்தார்கள். ‘தமிழ் சுயாதீன திரைப்படக் கழகத்தின்’ ரதன் அதை முன்னின்று ஒருங்கிணைத்திருந்தார். பலரும் கலந்து கொண்டு பலதரப்பட்ட தளங்களில் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். கனடாவின் தமிழ்த் திரைப்படத்துறை மேலும் செப்பனடைய வழி தரும் பல கருத்துக்கள் அங்கு முன் வைக்கப்பட்டன. இயக்குனர் லெனின் சிவம் கருத்துக்களை உள்வாங்கி தன் பதில்களைத்தந்து கலந்துரையாடலை சிறப்பாக்கினார். தயாரிப்பாளர் ... Read More »

இலங்கைத்தமிழரின் சரித்திர சாதனையாகிய தமிழ் திரைப்படம் “வாடைக்காற்று“ ஓர் மீள்பார்வை!

யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம். அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூழ்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கின்றது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில், பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ... Read More »

புலம்பெயர் கனடிய மண்ணில் கலை வளர்க்கும் ஈழத்து கலைஞர்கள்

இசையில் அதிக நாட்டம் கொண்ட குடும்பதில் பிறந்தவர் பிரபா பாலகிருஷ்ணன் அவர்கள். இசையில் அதீத காதல் கொண்டவர். எண்ணிலடங்கா தமிழ் பாடல்களை மனதில் பிழையின்றி பதிந்து வைத்திருப்பவர். அதனால், சக இசைத்துறை நண்பர்களால் “தமிழ் பாடல்களின் விக்கிபீடியா” என செல்லமாக அழைக்கப்படுபவர். முறைப்படி சங்கீதம் படிக்காதவர் எனிலும் படித்தவர் வியக்க பாடும் திறமை பெற்றவர். விஜய் தொலைக்காட்சிக்காக கனேடிய தமிழோசை வானொலியின் எற்பாட்டில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற “சுப்பர் சிங்கர்ஸ்-3” கனேடிய பாடகர்களின் குரல் தேர்வில்  சாய்சன், எலிசபெத் மாலினியை தொடர்ந்து 3ம் இடத்தை 1 ... Read More »

“தோழா….” இறுவட்டிற்கான அறிமுகப் பாடல் வெளியீடு

யாழ் இந்துக் கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை சேவை பிரிவின் கீழ் இயங்கும் இளசுகள் அணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வும் “தோழா” இறுவட்டுக்கான முன்னோட்டப் பாடல் வெளியீடும் யாழ் இந்துக் கல்லூரியில் இன்று (14) இடம் பெற்றது. நிகழ்வில் ஈழத்தின் பிரபல பொப்பிசை பாடகர் திரு நித்தி கனகரத்தினம் அவர்களுடைய குரலில் அமைந்த பாடலே முன்னொட்டப்பாடலாக வெளியிடப் பட்டது. 47 வருடங்களின் பின் மீண்டும் நித்தி கனகரத்தினம் யாழ் இந்துவின் இளசுகளால் வெளி வர இருக்கும் “தோழா….” இறுவட்டிற்கான அறிமுகப் பாடலை எழுதி மெட்டமைத்து ... Read More »

நெஞ்சே எழு குறுந்திரைப்படத்திற்கு நான்கு விருதுகள்

AAA மூவி சர்வதேச நிறுவனத்தின் 4 வது குறும்பட விருது வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கல்லூரியில் நடைப்பெற்றது. குறும்திரைப்படங்களுக்கான விருதுகளளோடு கலைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை  போன்ற துறைகளிலும் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நெஞ்சே எழு குறுந்திரைப்படம் 2013 ம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான விருதினையும் இயக்குனருக்கான விருதினையும் சிறந்த குழந்தை நட்ச்சத்திரத்திற்கான விருதினையும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினையும் நெஞ்சே எழு குறுந்திரைப்படம் பெற்றது. இக்குறும் திரைப்படத்தின் சிறந்த இயக்குனராக சுதர்சன் கனகராஜீம் சிறந்த குழந்தை நட்சத்திரமாக அம்சாவும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை ஜீசஸ் ... Read More »

ஈழ மற்றும் தமிழக தமிழரின் கூட்டுத் தமிழ் திரைப்படம்

உலகத்தமிழர்கள்  தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளை பயன்படுத்தியும் பெரும் எதிர்பார்ப்புடன் வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கும் எமது பெரும் முயற்சியான ” பனி விழும் மலர் வனம் ” தமிழ்த்திரைப்படத்தினை எமது  சொந்தங்கள் அனைவரும் கண்டுகளித்து எமது கன்னி முயற்சிக்கு பாராட்டும் ஒத்தழைப்பும் எதிர்பார்த்துள்ளோம். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் ஒரு உண்மையான புலியும் அனிமேசன் செய்யப்பட புலியும் இணைந்து மிரட்டப்போகும் அதிரடி காட்சிகள் உள்ளடங்கிய, இயற்கை அன்னையின் தேவையினையும் இயற்கையின் சமநிலைக்கு புலிகளின் அவசியத்தையும் ... Read More »

அனலை எக்ஸ்பிறசின் ஊடக அனுசரனையுடன் நெடுந்தீவு முகிலனின் ஆறாவது குறுந்திரைப்பட வெளியிடப்பட்டது

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் மற்றுமொரு படைப்பான ‘பாற்காரன்” குறுந்திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் திரையிட்டு வெளியிடப்பட்டது. அகிய இலங்கை கலை இலக்கிய சங்க தலைவர் பொன்.சுகந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர்  திரு.எஸ்.சிவலிங்கராஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் சிறப்பு விருந்தினராக மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திருமதி சரோஜினி சிவச்சந்திரனும் கௌரவ விருந்தினராக ஹரிஹணன் பிறிண்டஸ் உரிமையாளர் திரு.சி.ராஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டார். வெளியீட்டு உரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் ... Read More »

Scroll To Top